இன்ஃபினிக்ஸ் 40 இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை இதுவா? ரேட்டுக்கு ஏத்த பெஸ்ட் தொழில்நுட்பம்.. பிரத்தியேக செய்தி..

|

இன்ஃபினிக்ஸ் (Infinix) நிறுவனம் ஸ்மார்ட் டிவி சந்தையில் இரண்டு மாடல்களை அறிமுகப்படுத்திய பின்னர், வரும் ஜூலை மாதத்தில் அதன் போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்த உள்ளது என்று அறிவித்துள்ளது. ஹாங்காங்கை தளமாகக் கொண்ட ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் இன்ஃபினிக்ஸ் நிறுவனம், இந்தியாவில் இந்த மாத இறுதிக்குள் 40 இன்ச் அளவிலான புதிய ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. வரவிருக்கும் ஸ்மார்ட் டிவி பற்றிய பிரத்தியேக தங்களைப் பார்க்கலாம்.

Infinix நிறுவனம் நமது கிஸ்பாட் சேனலுடன் பகிர்ந்து கொண்ட பிரத்தியேக தகவல்

Infinix நிறுவனம் நமது கிஸ்பாட் சேனலுடன் பகிர்ந்து கொண்ட பிரத்தியேக தகவல்

Infinix நிறுவனம் நமது கிஸ்பாட் சேனலுடன் பகிர்ந்து கொண்ட பிரத்தியேக தகவலின் படி, நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கும் ஸ்மார்ட் டிவியானது அதன் எக்ஸ் 1 ஸ்மார்ட் தொடரின் கீழ் சேர்க்கப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது. வரவிருக்கும் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவி, 40 இன்ச் கொண்ட எஃப்.எச்.டி டிஸ்ப்ளே மற்றும் மெல்லிய பெசல்களை கொண்டிருக்கும் என்று வளர்ச்சிக்கு நெருக்கமான வட்டாரம் கிஸ்பாட் உடன் தகவலைப் பகிர்ந்துள்ளது. இந்த ஸ்மார்ட் டிவிக்கு ஆண்ட்ராய்டு டிவி சான்றிதழ் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

என்ன விலையில் இந்த புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவியை எதிர்பார்க்கலாம்?

என்ன விலையில் இந்த புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவியை எதிர்பார்க்கலாம்?

பிரபலமான ஸ்ட்ரீமிங் இயங்குதளங்களுடன் பிரத்யேக Google உதவியாளர் ஹாட்ஸ்கிஸ் உடன் புளூடூத் ரிமோட் வழங்கப்படும் இந்த டிவியுடன் வழங்கப்படும். கூடுதலாக, ஸ்மார்ட் டிவி எடை குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலை நிர்ணயம் குறித்து எந்த தகவலும் நிறுவனம் நம்மிடம் பகிர்ந்துகொள்ளவில்லை. ஆனால், நமக்கு நெருக்கமான மற்றொரு ஆதாரம் இந்த ஸ்மார்ட் டிவி பட்ஜெட்டை விலையை விட சற்று அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

கீழடியில் கிடைத்த 2000 ஆண்டுகள் பழமையான பொக்கிஷம்.. தமிழர்களை வியப்பில் ஆழ்த்திய கலை நுட்பம்..கீழடியில் கிடைத்த 2000 ஆண்டுகள் பழமையான பொக்கிஷம்.. தமிழர்களை வியப்பில் ஆழ்த்திய கலை நுட்பம்..

பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வருகிறதா இன்பினிக்ஸ் 40 இன்ச் மாடல்?

பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வருகிறதா இன்பினிக்ஸ் 40 இன்ச் மாடல்?

குறிப்பிடத்தக்க வகையில், Mi 4A Horizon Edition 100 செ.மீ (40 இன்ச் மாடல்) விலை ரூ. 24,999 ஆக இருக்கிறது. அதேபோல், TCL நிறுவனத்தின் iFFALCON டிவி கூகிள் அசிஸ்டென்ட் தேடல் மற்றும் டால்பி ஆடியோவுடன் வெறும் ரூ. 18,999 என்ற விலையில் 40 இன்ச் மாடல் டிவியாக பிளிப்கார்ட் மூலம் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதில், சுவாரஸ்யம் என்னவென்றால், இந்த புதிய இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் டிவிகள் பிளிப்கார்ட்டில் பிரத்தியேகமாக விற்பனைக்குக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தபடியாக 50 இன்ச் மற்றும் 55 இன்ச் மாடல் அறிமுகமா?

அடுத்தபடியாக 50 இன்ச் மற்றும் 55 இன்ச் மாடல் அறிமுகமா?

இந்த 40 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை தவிர, மீடியாடெக் சிப்செட் உடன் இயங்கும் 50 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலையும் நிறுவனம் விரைவில் அதன் பட்டியலின் கீழ் சேர்க்க உள்ளது என்று கூறியுள்ளது. "நாங்கள் இரண்டு புதிய டிஸ்பிளே அளவுகளைச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளோம். இதில் 40 இன்ச் மாடல் வரும் ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் மாதங்களில் விற்பனைக்குக் கிடைக்கும், அதே நேரத்தில் 55 இன்ச் இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அனிஷ் கபூர் கிஸ்போட்டிடம் தெரிவித்துள்ளார்.

பூமியை நோக்கி வரும் சூரிய புயல்.. ஜிபிஎஸ், மொபைல் சிக்னல் பாதிக்கும்.. நாசா எச்சரிக்கை..பூமியை நோக்கி வரும் சூரிய புயல்.. ஜிபிஎஸ், மொபைல் சிக்னல் பாதிக்கும்.. நாசா எச்சரிக்கை..

அறிமுகத்திற்கு காலதாமதம் ஏற்பட இதுவே காரணம் என்று இன்பினிக்ஸ் விளக்கம்

அறிமுகத்திற்கு காலதாமதம் ஏற்பட இதுவே காரணம் என்று இன்பினிக்ஸ் விளக்கம்

இன்பினிக்ஸ் நிறுவனம் வெளியிடவிருக்கும் ஸ்மார்ட் டிவிகளின் விலை தோராயமாக ரூ. 20,000-க்கு அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலண்டர் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நிறுவனம் தனது முதல் 5 ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது என்பது கவனிக்கத்தக்கது. முன்னதாக, இன்ஃபினிக்ஸ் நிறுவனம், Q2 இல் சாதனங்களைக் கொண்டுவரத் திட்டமிட்டிருந்தது. ஆனால், விநியோக தடைகள் மற்றும் COVID-19 இன் இரண்டாவது அலை காரணமாக இந்த விஷயங்கள் தாமதப்படுத்தப்பட்டது.

ஸ்மார்ட் டிவிக்கு பின் பட்டியலில் சேர ரெடி ஆகும் மற்ற தயாரிப்புகள்

ஸ்மார்ட் டிவிக்கு பின் பட்டியலில் சேர ரெடி ஆகும் மற்ற தயாரிப்புகள்

உண்மையில், இன்ஃபினிக்ஸ் மீடியா டெக் சிப்செட் உடன் இரண்டு 5 ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் தோராயமாக ரூ. 15,000 விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது. மேலும், நிறுவனம் இந்த ஆண்டு தனது TWS இயர்பட்ஸ் சாதனங்களையும் கூடுதல் தயாரிப்புகளையும் தனது பட்டியலின் கீழ் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Exclusive Infinix To Launch 40 Inch Smart TV Under X1 Series In July : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X