'நெருப்புடா' : இந்திய புவியிடங்காட்டி சேவை.!!

By Meganathan
|

இந்தியா தனது சொந்த ( ஜிபிஎஸ் ) புவியிடங்காட்டி செயற்கைகோளை சில தினங்களுக்கு முன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி சி-33 மூலம் ஐஆர்என்எஸ்எஸ் -1ஜி செயற்கைகோள் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் சீறி பாய்ந்தது அனைவரும் அறிந்ததே.

புதிய செயற்கைகோள் மூலம் இந்தியா தனக்கென சொந்த புவியிடங்காட்டி சேவையை உருவாக்கி கொண்டது. இந்தியாவின் சொந்த புவியிடங்காட்டி அமைப்பு குறித்த சில தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்..

#1

#1

இஸ்ரோவின் இந்திய பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பானது மொத்தம் ஏழு செயற்கைகோள்களை கொண்டு சிறந்த துல்லியம் மற்றும் இலக்கு நிலையை வழங்கும் திறன் கொண்டதாகும்.

#2

#2

துல்லியமான நிகழ் நேர பொருத்துதல் வழங்கும் படி இந்த செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா மற்றும் இந்தியாவை சுற்றி 1,500 கிமீ தூரம் வரை துல்லியமான சேவையை வழங்கும்.

#3

#3

இந்தியாவின் இடஞ்சுட்டி செயற்கைகோள் கிட்டத்தட்ட அமெரிக்காவின் புவியிடங்காட்டியுடன் ஒத்ததாகும். அமெரிக்கா மொத்தம் 24, ரஷ்யாவின் குளோனஸ் 24, ஐரோப்பாவின் கலிலியோ 27 மற்றும் சீனாவின் பெய்டோ 35 செயற்கைகோள்களை பயன்படுத்துகின்றன.

#4

#4

புவி சார்ந்த ஊடுருவல், வான்வழி மற்றும் கடல் ஊடுருவல், பேரழிவு மேலாண்மை, வாகன கண்கானிப்பு மற்றும் கப்பற்படை மேலாண்மை, மொபைல் போன்களுடன் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட இதர சேவைகளை இந்தியாவின் புவியிடங்காட்டி அமைப்பு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#5

#5

இஸ்ரோவின் ஐஆர்என்எஸ்எஸ்-1எஃப் ஆறாவது வழிசெலுத்தல் செயற்கைக்கோள் மார்ச் 10 ஆம் தேதியும், ஐஆர்என்எஸ்எஸ்-1ஏ, ஜூலை 1, 2013, ஐஆர்என்எஸ்எஸ்-1பி ஏப்ரல் 4, 2014, ஐஆர்என்எஸ்எஸ்-1சி அக்டோபர் 16, 2014 மற்றும் ஐஆர்என்எஸ்எஸ்-1இ ஜனவரி 20, 2016 இல் முறையே விண்ணில் செலுத்தப்பட்டது.

#6

#6

இஸ்ரோ அதிகாரிகள் அளித்த தகவலின் படி 12 ஆண்டு கால ஆயுள் கொண்ட இந்த ஏழு செயற்கைகோள்களின் மொத்த செலவு ரூ.1,420 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#7

#7

உலகில் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, சீனா நாடுகளை தொடர்ந்து சொந்த புவியிடங்காட்டி சேவையை வைத்திருக்கும் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

#8

#8

உலக நாடுகளை 'தெறிக்கவிட்ட' இந்தியா...!

இனி சியாச்சினில் ஒரு உயிர் கூட பலியாகாது : களத்தில் குதிக்கும் இஸ்ரோ..!

#9

#9

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Exciting Things to know about India's own GPS system Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X