Home
News

புதிய 'ஆண்ட்ராய்டு நௌக்கட்' இனிக்குமா, கசக்குமா.??

By Meganathan

ஆண்ட்ராய்டு இயங்குதளங்களுக்கு இனிப்பு வகைகளின் பெயர் சூட்டுவதை, கூகுள் நிறுவனம் வழக்கமாக கொண்டுள்ளது. இதேப் போன்று ஆண்ட்ராய்டு புதிய பதிப்பிற்கும் N என்ற ஆங்கில வார்த்தையில் துவங்கும் இனிப்பு பெயர்களை சூட்டத் திட்டமிட்டு, இதற்கென புதிய தளம் ஒன்றை உருவாக்கி அதிக பரிந்துரைகளை பெரும் பெயரை வழங்க புதிய ஆண்ட்ராய்டு பதிப்பிற்கு சூட்ட முடிவு செய்யப்பட்டது.

அந்த வகையில் பெயர் பரிந்துரை பட்டியலில் கேரளாவின் நெய்யப்பம் பெயரும் இடம் பெற்றிருந்தது அனைவரும் அறிந்ததே. இந்தப் பட்டியலில் அதிக பரிந்துரைகளை பெற்ற இனிப்பு வகை புதிய ஆண்ட்ராய்டு பதிப்பாக அழைக்கப்படும்.

வாக்கு

வாக்கு

ஆண்ட்ராய்டு நௌக்கட் புதிய பதிப்பின் பெயர் என ஆண்ட்ராய்டு தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது. பெயர் தேர்வு செய்யப்பட்ட முறையையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இனிப்பு

இனிப்பு

வழக்கமான இனிப்பு பெயர் சூட்டப்பட்டிருந்தாலும் இது முந்தைய பதிப்புகளை விட எந்தளவு சிறப்பானதாக இருக்குமா அல்லது ஏமாற்றம் அளிக்குமா என்பதைத் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள்.

மல்டி டாஸ்கிங்

மல்டி டாஸ்கிங்

புதிய ஆண்ட்ராய்டு என் பதிப்பின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக மல்டி டாஸ்கிங் இருக்கின்றது. இதன் மூலம் இரண்டு ஆப்ஸ்களை ஒரே சமயத்தில் பயன்படுத்துவதாகும். வாட்ஸ்ஆப்பில் சாட்டிங் செய்யும் போது மறு திரையில் வேறொரு ஆப்ஸ்களை பார்க்க முடியும். இதில் பயனர்கள் தங்களுக்குத் தேவையான ஆப்களை திரையில் சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ வைத்துக் கொள்ள முடியும்.

நோட்டிபிகேஷன்

நோட்டிபிகேஷன்

முந்தைய பதிப்புகளை விட அதிக ஆப் தகவல்களை இம்முறை பார்க்க முடியும். மேலும் நோட்டிபிகேஷன் திரையில் இருந்து நேரடியாகப் பதில் அளிக்கவும் முடியும். இதன் மூலம் குறுந்தகவல்களுக்கு மிக வேகமாகப் பதில் அளிக்க முடியும்.

பண்டல்டு நோட்டிபிகேஷன்

பண்டல்டு நோட்டிபிகேஷன்

புதிய பதிப்பின் மற்றொரு அம்சம் தான் பன்டல்டு நோட்டிபிகேஷன், இங்கு ஒரே அப்ளிகேஷனில் இருந்து அனைத்து நோட்டிபிகேஷன்களையும் பெற முடியும். இந்த நோட்டிபிகேஷன் அம்சத்தினை புதிய எக்ஸ்பான்ஷன் பட்டன் அல்லது இரண்டு விரல் ஜெஸ்ச்சர் மூலம் இயக்க முடியும்.

ப்ராஜக்ட்  Svelte

ப்ராஜக்ட் Svelte

இந்த அம்சம் மூலம் வாடிக்கையாளர்கள் ரேம் பயன்பாட்டினை குறைக்க முடியும். இதன் மூலம் பேக்கிரவுண்டில் எத்தனை ஆப்கள் வேலை செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியும்.

ஆண்ட்ராய்டு டிவி

ஆண்ட்ராய்டு டிவி

ஆண்ட்ராய்டு என் மூலம் ஆண்ட்ராய்டு டிவி சேவைகளில் இருந்து நிகழ்ச்சிகளைப் பதிவு செய்து அவற்றை பிளேபேக் செய்யும் வசதி வழங்கப்பட இருக்கின்றது.

ஆண்ட்ராய்டு ஃபார் வொர்க்

ஆண்ட்ராய்டு ஃபார் வொர்க்

ஆண்ட்ராய்டு வொர்க் புதிய அம்சங்கள் மூலம் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பணி நிமித்தமாகப் பயனர்கள் பயன்படுத்தும் ஆப்ஸ்களுக்கு தனி பாஸ்வேர்டு செட் செய்து கொள்ள முடியும்.

வொர்க் மோடு

வொர்க் மோடு

பின் அல்லது கைரேகை மூலம் பாஸ்வேர்டு செட் செய்து கொள்வதோடு பணி செய்யாத நேரத்தில் வொர்க் மோடு ஆஃப் செய்து கொள்ளவும் முடியும். இதனால் பணி சார்ந்த நோட்டிபிகேஷன் மற்றும் நடவடிக்கைகள் தெரியாது.

வெளியீடு

வெளியீடு

தற்சமயம் டெவலப்பர் ப்ரீவியூ வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெவலப்பர்கள் இதனைப் பயன்படுத்தி சோதனை செய்யலாம். மக்கள் பயன்பாட்டிற்கு ஆண்ட்ராய்டு நௌக்கட் இந்த ஆண்டின் இறுதியில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Exciting features of Android Nougat Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X