Home
News

Excitel காதலர் தின சலுகை.. 12 மாசத்துக்கு மஜா.. 20 OTT சந்தா.. 300Mbps ஸ்பீட்!

பிப்.14 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு எக்சைடெல் (Excitel) நிறுவனம் அதன் 200எம்பிபிஎஸ் மற்றும் 300எம்பிபிஎஸ் கிக்ஸ்டார்ட்டர் இண்டர்நெட் திட்டங்கள் மீது சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகையின்கீழ் குறிப்பிட்ட 2 திட்டங்களும் சிறப்பு தள்ளுபடி விலையில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்.

2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் பிப்ரவரி 18 ஆம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும் இந்த காதலர் தின சலுகையின்கீழ் வரும்.. 200 எம்பிபிஎஸ் ஸ்பீட் மற்றும் 300 எம்பிபிஸ் ஸ்பீட் திட்டங்களின் விலை என்ன? இவ்விரு திட்டங்களின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:

Excitel  காதலர் தின சலுகை.. 12 மாசத்துக்கு மஜா.. 20 OTT சந்தா!

எக்சைடெல் அறிவித்துள்ள காதலர் தின சலுகையின் கீழ், 200எம்பிபிஎஸ் ஸ்பீட்டை வழங்கும் எக்சைடெல்லின் கிக்ஸ்டார்ட்டர் திட்டத்தின் 12 மாத சந்தாவானது மாதத்திற்கு ரூ.424 க்கு அணுக கிடைக்கும். இதேபோல 300எம்பிபிஎஸ் ஸ்பீட் திட்டத்தின் 12 மாத சந்தாவானது மாதத்திற்கு ரூ.474 க்கு அணுக கிடைக்கும்.

இந்த இரண்டு திட்டங்களுமே 6 மாத காலம் மற்றும் 3 மாத காலத்திற்கும் கூட ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. இருப்பினும் இவ்விரு திட்டங்களையும் 12 மாத காலத்திற்கு தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே எக்ஸிடெல் காதலர் தின ஆஃபரின் லுகையின் கீழான, சிறப்பு சலுகை விலை கிடைக்கும்.

Excitel  காதலர் தின சலுகை.. 12 மாசத்துக்கு மஜா.. 20 OTT சந்தா!

இவ்விரு திட்டங்களுமே 20 ஓடிடி தளங்களுக்கான இலவச சந்தாக்களுடன் வருகின்றன: ஓடிடி பிளே (OTTplay), சோனி லைவ் (SonyLIV), ஜீ5 (ZEE5), சன் நெக்ஸ்ட் (SunNXT), ஆல்ட் பாலாஜி (Alt Balaji), ஆஹா தெலுங்கு (Aha Telugu) போன்ற ஓடிடி இயங்குதளங்களுக்கு 30 நாட்களுக்கான சந்தா கிடைக்கும்.

இந்த பட்டியலில் நம்மபிளிக்ஸ் (Nammaflix), ரன் டிவி, ஓம் டிவி, பிளே பிலிக்ஸ் (Play Flix), பாலிவுட் பிளே, ஐ டேப் (iTap), காஞ்சா லங்கா (Kancha Lanka), ராஜ் டிஜிட்டல், டிஸ்ட்ரோ டிவி (Distro TV), ஷார்ட்ஸ் டிவி (Shorts TV), ஃபேன்கோட் (Fancode), ஐஸ்ட்ரீம் ( IStream), ஆவோ நெக்ஸ்ட் ( Aao Next) மற்றும் ஈடிவி வின் (ETV Win) போன்ற தளங்களும் அடங்கும்.

Excitel  காதலர் தின சலுகை.. 12 மாசத்துக்கு மஜா.. 20 OTT சந்தா!

எக்சைடெல் நிறுவனத்தின் கேபிள் கட்டர் பிளான்களை பொறுத்தவரை, இது மொத்தம் 3 வகைகளாக கிடைக்கிறது. முதலாவது வைஃபை + ஐபிடிவி (எக்சைடெல் டிவி) + ஓடிடி திட்டமாகும். இது 400 எம்பிபிஎஸ் வரையிலான இண்டர்நெட் ஸ்பீட் உடன் ஸ்டார்பிளஸ், சோனி டிவி, கலர்ஸ், டிஸ்கவரி, எம்டிவி மற்றும் கார்ட்டூன் நெட்வொர்க் போன்ற 37 பிரீமியம் கேபிள் டிவி சேனல்கள் மற்றும் 300+ எப்டிஏ சேனல்களை வழங்குகிறது.

ஓடிடி நன்மைகளை பொறுத்தவரை இதன் கீழ் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar), சோனி லைவ், ஜீ5, ஆல்ட் பாலாஜி, சன் நெக்ஸ்ட், ஆஹா டிவி, உட்பட மொத்தம் 21 ஓடிடி தளங்களுக்கான அணுகல்கள் கிடைக்கும். இந்த திட்டத்தின் விலையை பொறுத்தவரை, 12 மாத கால சந்தாவானது மாதத்திற்கு ரூ.734 க்கு அணுக கிடைக்கும்.

அடுத்ததாக கேபிள் கட்டர் வைஃபை + ஓடிடி திட்டம் உள்ளது: இது 300 எம்பிபிஎஸ் வரையிலான இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனி லைவ், ஜீ5, ஆல்ட் பாலாஜி, சன் நெக்ஸ்ட், ஆஹா டிவி உட்பட மொத்தம் 21 ஓடிடி தளங்களுக்கான அணுகல்கள் கிடைக்கும். இந்த திட்டத்தின் விலையை பொறுத்தவரை, 12 மாத கால சந்தாவானது மாதத்திற்கு ரூ.604 க்கு அணுக கிடைக்கும்.

கடைசியாக உள்ள கேபிள் கட்டர் - வைஃபை + ஐபிடிவி (எக்சைடெல் டிவி) திட்டமானது 200 எம்பிபிஎஸ் வரையிலான இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் ஸ்டார்பிளஸ், சோனி டிவி, கலர்ஸ், டிஸ்கவரி, எம்டிவி மற்றும் கார்ட்டூன் நெட்வொர்க் உட்பட மொத்தம் 37 பிரீமியம் கேபிள் டிவி சேனல்கள் மற்றும் 300+ எப்டிஏ சேனல்களை வழங்கும். விலையை பொறுத்தவரை 12 மாத கால சந்தாவானது மாதத்திற்கு ரூ.554 க்கு அணுக கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Excitel Valentines Day Offer on 200 Mbps 300 Mbps Kickstarter Plans Until February 18
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X