Home
News

கேபிள் டிவி அம்பேல்.. மாதம் ரூ.734 போதும்.. 300 டிவி சேனல்கள்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. 21 ஓடிடி சந்தா!

முகேஷ் அம்பானியின் ஜியோ (Jio) போன்ற முன்னணி நிறுவனத்துக்கே போட்டியாக டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி (OTT) சேவையில் வளர்ந்துவரும் நிறுவனமான எக்ஸிடெல் (Excitel) வெறும் ரூ.734 பட்ஜெட்டில் 300+ சேனல்கள், 21 ஓடிடி சந்தா, 400எம்பிபிஎஸ் வேக டேட்டாவை கொடுக்கிறது.

இந்த எக்ஸிடெல் நிறுவனமானது, பிராட்பேண்ட், ஓடிடி, டிவி சேனல்கள், லேண்ட்லைன் வாய்ஸ் காலிங் போன்ற சேவைகளை வழங்குகிறது. ஒரே திட்டத்தின் கீழ் இந்த சேவைகள் அனைத்தையும் கொடுக்கிறது. இதில் ஆச்சரியப்பட வேண்டியது என்னவென்றால், அதற்காக நிர்ணயிக்கப்பட்ட விலையும், வேலிடிட்டியும்தான். நம்ப முடியாத விலைக்கு இந்த சேவைகள் கிடைக்கின்றன.

மாதாந்திரம் ரூ.734 போதும்.. 300 டிவி சேனல்.. 365 நாட்கள் வேலிடிட்டி!

இந்த திட்டங்கள் கேபிள் டிவிக்கு மாற்றாக இருப்பதால், அந்த நிறுவனம் கேபிள் கட்டர் திட்டம் (Cable Cutter Plan) என்னும் பெயரிலேயே இந்த சலுகைகளை வழங்குகிறது. இந்த கேபிள் கட்டரின் கீழ் 3 திட்டங்கள் இருக்கின்றன. இந்த திட்டங்கள் 3 மாதங்கள், 6 மாதங்கள் மற்றும் 12 மாதங்கள் வேலிடிட்டியோடு மட்டுமே கிடைக்கின்றன.

இந்த கேபிள் கட்டர் திட்டங்களானது, அனைத்து நகரங்களிலும் கிடைப்பதில்லை. டெல்லியில் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது, ஹைதராபாத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் நாட்களில் சென்னை உள்ளிட்ட மற்ற முக்கிய நகரங்களிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இதன் சலுகைகளை இப்போது பார்ப்போம்.

எக்ஸிடெல் ரூ 734 திட்ட விவரங்கள் (Excitel Rs 734 Plan Details): இந்த திட்டத்தில் 400 எம்பிபிஎஸ் வேகத்தில் பிராண்ட்பேண்ட் சேவை வழங்கப்படும். இதன் மூலம் அன்லிமிடெட் டேட்டா சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். அதோடு 28 பிரீமியம் டிவி சேனல்கள் மற்றும் 300+ எப்டிஏ (FTA) சேனல்கள் சலுகை கிடைக்கிறது.

மாதாந்திரம் ரூ.734 போதும்.. 300 டிவி சேனல்.. 365 நாட்கள் வேலிடிட்டி!

இந்த சேனல்களில் ஈடிவி (ETV), ஜெமினி எச்டி (Gemini HD), மா எச்டி (MAA HD), ஸ்போர்ட்ஸ் 18 எச்டி (Sports 18 HD) உள்ளிட்டவை அடங்கும். இதுபோக 21 ஓடிடி ஆப்களின் சந்தா கொடுக்கப்படுகிறது. இந்த சந்தாவில் டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), ஆஹா தெலுங்கு (Aha Telugu), சோனிலிவ் (SonyLiv), சன்நெக்ஸ்ட் (SunNXT) உள்ளிட்ட ஆப்களை பயன்படுத்தலாம்.

இந்த திட்டத்தை பெற வேண்டுமானால், முன்னபே தெரிவித்ததை போல 3, 6 அல்லது 12 மாதங்களுக்கான வேலிடிட்டியை தேர்வு செய்து அதற்கான பணத்தை மொத்தமாக செலுத்த வேண்டும். அதோடு ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படும். இதில் 12 மாதங்கள் வேலிடிட்டியை தேர்ந்தெடுத்தால் மட்டுமே மாதத்துக்கு ரூ.734 செலவில் சலுகைகள் கிடைக்கும்.

எக்ஸிடெல் ரூ 604 திட்ட விவரங்கள் (Excitel Rs 604 Plan Details): இந்த திட்டத்தில் டிவி சேனல்கள் சலுகை கொடுக்கப்படவில்லை. பிராட்பேண்ட் மற்றும் ஓடிடி ஆப்களின் சந்தா கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 300 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சேவை வழங்கப்படுகிறது.

அதோடு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலிவ், சன்நெக்ஸ்ட், ஆஹா தெலுங்கு மற்றும் நம்ம ஃபிளிக்ஸ் போன்ற 21 ஓடிடி தளங்களில் சந்தா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 12 மாதங்களுக்கான வேலிடிட்டியை தேர்வு செய்தால், மாதம் ரூ 604 செலவில் சலுகைகள் வழங்கப்படுகிறது.

எக்ஸிடெல் ரூ 554 திட்ட விவரங்கள் (Excitel Rs 554 Plan Details): இந்த திட்டத்தில் டிவி சேனல்கள் மற்றும் பிராட்பேண்ட் சேவைகள் கிடைக்கிறது. ஓடிடி சேவைகள் வழங்கப்படவில்லை. இந்த திட்டத்தை பெற்றால், 200 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சேவையை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

அதோடு 28 பிரீமியம் டிவி சேனல்கள் மற்றும் 300+ ப்ரீ டிவி சேனல்களின் சந்தாவை பயன்படுத்தலாம். இந்த சந்தாவில் ஈடிவி ஜெமினி எச்டி, மா எச்டி, ஸ்போர்ட்ஸ் 18 எச்டி உள்ளிட்டசேனல்களையும் பார்த்து கொள்ளலாம். இந்த திட்டத்திலும் 12 மாதங்கள் வேலிடிட்டியை தேர்வு செய்தால் மட்டுமே மாதத்துக்கு ரூ.553 செலவில் சலுகைகளை பெறலாம்.

Best Mobiles in India

English summary
Excitel Rs 734 Plan Offers 365 Days Validity 400mbps Speed 300 Live TV Channels 21 OTT Subscription
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X