Home
News

கேபிளுக்கு கும்பிடு.. மாசம் ரூ.719 போதும்.. 12 மாதங்கள் வேலிடிட்டி.. 300+ சேனல்கள்.. 22+ ஓடிடி சந்தா!

வீட்டில் இருக்கும் கேபிள் டிவியை (Cable TV) கட் செய்ய வைத்துவிடும் போலயே என்று சொல்லும் அளவுக்கு மாதத்துக்கு வெறும் ரூ.719 செலவில் வருடம் முழுவதும் வேலிடிட்டி மட்டுமல்லாமல், 300+ டிவி சேனல்கள், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார், சோனிவிவ் உள்ளிட்ட 22+ ஓடிடி ஆப்கள் மற்றும் 300 எம்பிபிஎஸ் வேக டேட்டா சலுகையை ஒரு நிறுவனம் வழங்குகிறது. ஜியோ நிறுவனமே மூக்கில் விரல் வைக்கும்படியான சலுகைகளை கொண்ட இந்த திட்டத்தின் விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் மட்டுமே பிராட்பேண்ட் டேட்டா திட்டங்களில், ஆண்ட்ராய்டு பாக்ஸ் மூலம் லைவ் டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி ஆப்களின் சந்தாவை கொடுக்கின்றன என்று பலர் நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால், இந்த நிறுவனங்களையே தூக்கிசாப்பிடும்படி எக்ஸிடெல் (Excitel) என்னும் நிறுவனம் சலுகைகளை கொடுத்து வருகிறது.

கேபிளுக்கு கும்பிடு.. மாசம் ரூ.719 போதும்.. 12 மாதங்கள் வேலிடிட்டி!

இந்த நிறுவனத்தின் கேபிள் கட்டர் திட்டத்தில் (Cable Cutter Plan) ஏற்கனவே, 300 எம்பிபிஎஸ் டேட்டா, 300+ டிவி சேனல்கள் மற்றும் 22+ ஓடிடி ஆப்களின் சந்தா கொடுக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது அமேசான் பிரைம் வீடியோ சந்தா சேர்க்கப்பட்டுள்ளது. ஆகவே, முன்னணி ஓடிடி ஆப்களின் சந்தாவை இந்த ஒரே திட்டத்தில் பெற்று கொள்ளலாம்.

கேபிள் டிவிக்கு நிகராக டிவி சேனல்களும் வருவதால், பழைய கேபிள் டிவிகளுக்கு மாற்றாக இது வர வாய்ப்புள்ளது. இந்த எக்ஸிடெல் திட்டத்தில் 3 மாதங்கள், 6 மாதங்கள் அல்லது 12 மாதங்கள் என்று மூன்று வேலிடிட்டி ஆப்ஷன்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றன. இப்போது, இந்த கேபிள் கட்டர் திட்டத்தின் முழு சலுகைகளை பார்த்து விடுவோம்.

எக்ஸிடெல் ரூ 719 திட்ட விவரங்கள் (Excitel Rs 719 Plan Details): இந்த திட்டத்தில் 300 எம்பிபிஎஸ் வேகத்தில் பிராட்பேண்ட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இதற்காக வை-பை ரூட்டர் வழங்கப்படுகிறது. அன்லிமிடெட் லேண்ட்லைன் வாய்ஸ் கால்களையும் செய்துகொள்ளலாம். ஆனால், லேண்ட்லைன் போன் உங்களிடம் இருக்க வேண்டும்.

கேபிளுக்கு கும்பிடு.. மாசம் ரூ.719 போதும்.. 12 மாதங்கள் வேலிடிட்டி!

இதுபோக 300+ லைவ் டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம். இதற்கான டிவைஸ்களும் உங்களுக்கு வழங்கப்படும். இதுபோக 22+ ஓடிடி ஆப்களின் சந்தாவை பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5, ஆல்ட்பாலாஜி, சன்நெக்ஸ்ட், ஆஹா தெலுங்கு, டிஸ்ட்ரோ டிவி, ஷீமாரூமி உள்ளிட்ட ஆப்களின் சந்தா கிடைக்கிறது.

டாகு பே, பிளேஃபிளிக்ஸ், ஷார்ட்ஸ்டிவி, ஏஏஓ நெக்ஸ்ட், ஃபேன்கோட், ஐடேப், ஸ்டேஜ், ஐஸ்ட்ரீம், ஓடிடி பிளே, ஈடிவி வின், பிடிசிபிளே மற்றும் எபிக் ஆன் ஆகிய ஓடிடிகளின் சந்தாவையும் பெற்று கொள்ளலாம். மொபைல், லேப்டாப், டேப்லெட் ஆகியவற்றுக்கு வை-பை டேட்டா, டிவிகளுக்கு ஓடிடி மற்றும் லைவ் சேனல்கள் இதில் கிடைக்கிறது.

இப்படி ஒட்டுமொத்த சலுகைகளும் மாதம் வெறும் ரூ.719 விலையில் வருகிறது. இந்த ரூ.719 விலையில் மேற்கூறிய சலுகைகள் கிடைக்க வேண்டுமானால், நீங்கள் 12 மாதங்கள் வேலிடிட்டியை தேர்வு செய்ய வேண்டும். இந்த மாதங்களுக்கான மொத்த தொகையை செலுத்தினால் மட்டுமே உங்களுக்கு சேவைகள் வழங்கப்படும்.

இதே சலுகைகளை 3 மாதங்களுக்கு மட்டும் பெற்றால், மாதத்துக்கு ரூ.1119 செலுத்த வேண்டும். அதுவே 6 மாதங்கள் என்றால், மாதத்துக்கு ரூ.769 செலுத்த வேண்டும். இப்படி வேலிடிட்டி அதிகரிக்கும்போது, திட்டத்தின் மாதாந்திர விலை குறைக்கப்படுகிறது. இந்த எக்ஸிடெல் திட்டங்கள் பெங்களூரூ, ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மட்டுமே கிடைக்கிறது. சென்னையில் விரைவில் வரலாம்.

Best Mobiles in India

English summary
Excitel Rs 719 Plan With 300 TV Channels, 22 OTT Apps With Amazon Prime Check Cable Cutter Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X