Home
News

கேபிள் டிவி கதை முடிந்தது.. வெறும் ரூ.592 போதும்.. 30 நாட்கள் வேலிடிட்டி.. 555 சேனல்கள்.. 3 ஓடிடி சந்தா!

ஜியோ (Jio) நிறுவனமே மூக்கில் விரல் வைக்கும்படி வெறும் ரூ.592 விலையில் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட டிடிஎச் (DTH), ஓடிடி (OTT) திட்டத்தை எக்ஸிடெல் (Excitel) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் சலுகைகளை கேட்டால் நீங்களே, மூக்கில் விரல் வைத்துவிடுவீர்கள்.

இன்றைய காலத்தில் ஓடிடி தளங்களின் பயன்பாடு நம்மிடையே அதிகரித்து விட்டது. அதன் காரணமாக ஜியோ, ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற டெலிகாம் நிறுவனங்கள், தங்களது ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் மற்றும் பிராட்பேண்ட் திட்டங்களில் ஓடிடி தளங்களின் சப்கிரிப்ஷனையும் வழங்கத் தொடங்கிவிட்டன.

ரூ.592 போதும்.. 30 நாட்கள் வேலிடிட்டி.. 555 சேனல்கள்.. 3 ஓடிடி சந்தா!

இதனால், நம் பாரம்பரிமாக பார்த்து வரும் டிவி சேனல்களில் லாபம் குறைவதால், அவற்றின் விலையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாளடைவில் டிவி சேனல்களையும் மாதாந்திர சந்தா கட்டி பார்க்கும் சூழல் ஏற்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இந்த நிலைமையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட எக்ஸிடெல் நிறுவனம் ஓடிடி, டிடிஎச் ஆகிய இரண்டையும் ஒரே திட்டத்தில் கொண்டுவந்துள்ளது.

இதில் வியப்பு என்னவென்றால், 30 நாட்களுக்கு வெறும் ரூ.592 பட்ஜெட்டில் அந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், 3 ஓடிடி தளங்களையும், 555 டிவி சேனல்களையும் பார்த்துக்கொள்ள முடியும். இந்த திட்டம் குறித்த முழு விவரங்கள் பின்வருமாறு.

எக்ஸிடெல் ரூ 592 திட்ட விவரங்கள் (Excitel Rs 592 Plan Details): இந்த திட்டத்தில் ஓடிடி (OTT) மற்றும் டிடிஎச் (DTH) சலுகைகள் கிடைக்கிறது. இதுவொரு 30 நாள் வேலிடிட்டி கொண்ட திட்டமாகும். இந்த நாட்களில் 400 எம்பிபிஎஸ் வேகத்தில் 550 டிவி சேனல்களை பார்த்துக்கொள்ள முடியும்.

அது மட்டுமல்லாமல், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), சோனிலிவ் (SonyLIV), ஜீ5 (ZEE5) ஆகிய மூன்று ஓடிடி தளங்களின் ஒரு வருட சப்கிரிப்ஷன் கிடைக்கும். இதன் மூலம் ஒரே நேரத்தில் டிவி சேனல்களையும், ஓடிடி வீடியோக்களையும் பார்த்துக் கொள்ள முடியும்.

இந்த திட்டம் 2 வேலிடிட்டி கொண்டிருக்கிறது. அதாவது, 3 மாதங்களுக்கு ரூ.847 விலையிலும் 12 மாதங்களுக்கு ரூ.592 விலையிலும் திட்டங்கள் இருக்கிறது. அதாவது, நீங்கள் மூன்று மாத வேலிடிட்டியை தேர்ந்தெடுத்தால், மாதத்துக்கு ரூ.847 கட்ட வேண்டும். அதுவே 12 மாத வேலிடிட்டியை தேர்ந்தெடுத்தால் மாதத்துக்கு ரூ.592 கட்டினால் போதுமானதாகும்.

இதுகுறித்து எக்ஸிடெல் சிஇஓ விவேக் ரைனா (Excitel CEO Vivek Raina) கூறுகையில், "இதுவொரு கேம் சேஞ்சர் திட்டமாக இருக்கும். அதோடு கேபிள் கட்டர் திட்டமாகவும் இருக்கும். மக்களிடையே ஓடிடி தளங்கள் பிரபலமடைந்து வருகின்றன. அதேவேளையில் பாரம்பரியமாக பார்த்துவரும் டிவி சேனல்களின் சந்தா கட்டணமும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

இவற்றை ஒரே திட்டத்தின் மூலம் மாற்ற முயற்சித்துள்ளோம். இந்த திட்டம் மூலம் ஓடிடி மற்றும் டிவி சேனல்களின் சந்தா ஒரு ஆண்டு முழுவதும் கிடைக்கும். இந்த திட்டம் மிகப்பெரும் வரவேற்பு பெற வேண்டியும், மக்களுக்கு லாபகரமானதாக இருக்க வேண்டியும் மிகவும் மலிவான விலையில் அறிமுகம் செய்துள்ளோம்.

இதுவொரு 400 எம்பிபிஎஸ் வேகத்தில் இன்டர்நெட் கிடைக்கும் பிராட்பேண்ட் திட்டம் என்பதால், வாடிக்கையாளர்கள் தடையில்லா ஸ்டீரிமிங் அனுபவத்தை பெற முடியும்" எனத் தெரிவித்தார். இந்த திட்டத்தை போலவே ரூ.999 விலையில் மற்றொரு திட்டம் இருக்கிறது. இதில் 555 டிவி சேனல்கள், 6 ஓடிடி தளங்களின் சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கிறது.

அதோடு மொபைல்களுக்கு வைபை பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த திட்டத்தின் வாடிக்கையாளர்களுக்கு 300 எம்பிபிஎஸ் வேகத்தில் இணைய சேவை கிடைக்கும். இந்த திட்டங்களுக்கு கனெக்சன் கொடுக்கும் செலவு, பாதுகாப்பு வைப்புத்தொகை மற்றும் கூடுதல் கட்டணங்கள் என்று எதுவும் வசூலிக்கப்படாது என்பதால் மக்கள் தாராளமாக அதை பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் கூட இப்படியொரு திட்டத்தை கையில் எடுக்காத சூழலில், இந்த நிறுவனம் மிகப்பெரும் சந்தையை இப்போது, திறந்துவிட்டது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Excitel Rs 592 Plan With 365 Days Validity, 400Mbps Speed, 550 Live TV Channels, Hotstar Subscription
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X