Home
News

கேபிள் டிவி கதை முடிந்தது.. ரூ.554-க்கு 300 சேனல்கள்.. 365 நாட்களுக்கு இதை விட்டா இல்ல.. மாத செலவுல முடிஞ்சு!

உங்க வீட்ல இன்னுமா கேபிள் டிவி இருக்கு? அப்படினு கேட்கும் அளவுக்கு டிடிஎச் மற்றும் ஓடிடி ஆப்களின் ஆதிக்கம் வந்துவிட்டது. இன்டர்நெட் இல்லாமலேயே டிவி சேனல்கள் கிடைப்பதால் மட்டுமே இன்றளவும் கேபிள் டிவிகள் கொஞ்சாமாவது இருக்கின்றன. ஆனால், அதற்கும் ஆப்பு வைக்கும்படி எக்ஸிடெல் (Excitel) நிறுவனம் களமிறங்கி இருக்கிறது. ஜியோ நிறுவனத்தையே தூக்கி சாப்பிடும்படி கேபிள் கட்டர் திட்டங்கள் இருக்கின்றன. இந்த திட்டங்களின் சலுகைகள் எப்படி? எங்கு கிடைக்கின்றன? உள்ளிட்ட முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ நிறுவனத்தின் ஏர்ஃபைபர் சேவைகள் மூலம் வை-பை டேட்டா மட்டுமல்லாமல், ஓடிடி ஆப்கள் மற்றும் லைவ் டிவி சேனல்களின் சந்தா கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரே திட்டத்தில் டேட்டா சலுகை மட்டுமல்லாமல், டிவிகளுக்கு சேனல்கள் மற்றும் ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன. இந்த ஜியோ ஏர்ஃபைபர் திட்டங்கள் ரூ.599 விலையில் இருந்து கிடைக்கின்றன.

கேபிள் டிவி கதை முடிந்தது.. ரூ.554-க்கு 300 சேனல்.. 365 நாட்களுக்கு!

ஆனால், எக்ஸிடெல் நிறுவனம் அதைவிட அடிமட்ட விலையில் வெறும் ரூ.554-க்கு கொடுக்கிறது. இதுபோக 200எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகையை கொடுக்கிறது. இந்த வேகமும் ஜியோவைவிட கூடுதலாகும். ஆகவே, ஜியோவுக்கு இந்த நிறுவனம் கடும் போட்டியை கொடுக்க இருக்கிறது. வை-பை, ஐபிடிவி மற்றும் ஓடிடி என்று சலுகைகள் இருக்கின்றன.

50-க்கும் மேற்பட்ட நகரங்களில் இந்த எக்ஸிடெல் சேவைகள் கிடைக்கின்றன. ஆனால், கேபிள் கட்டர் திட்டங்களை சில நகரங்களில் மட்டுமே அந்த நிறுவனம் கொடுக்கிறது. இதில் நகரங்களுக்கு ஏற்ப விலையிலும் மாற்றங்கள் இருக்கின்றன. முதலில் அடிமட்ட விலையிலான ரூ.554-க்கு கிடைக்கும் கேபிள் கட்டர் திட்டத்தின் சலுகைகளை தெரிந்து கொள்ளவோம். இதில் வை-பை, ஐபிடிவி கிடைக்கிறது.

அதாவது, இந்த திட்டத்துக்கு 200எம்பிபிஎஸ் வேகத்தில் வை-பை டேட்டா சலுகையும் 300-க்கும் மேற்பட்ட டிவி சேனல்களின் சந்தாவும் கிடைக்கும். இதில் பிரீமியம் சேனல்களும் இருக்கிறது. ஆனால், இந்த திட்டத்தை ரூ.554 விலையில் பெற வேண்டுமானால், 12 மாதங்களுக்கு செலவாகும் மொத்த தொகையை அட்வான்ஸ் போல செலுத்த வேண்டும். மேலும், ஜிஎஸ்டி இருக்கிறது.

இந்த தொகையை செலுத்திவிட்டால், 12 மாதங்கள் முழுவதும் உங்களுக்கு டேட்டா மற்றும் லைவ் டிவி சேனல்கள் சலுகை கிடைக்கும். இதற்கான டிவைஸ்களும் கஸ்டமர்களுக்கு வழங்கப்படும். இதில் ஓடிடி சலுகைகள் இருக்காது. ஒருவேளை அதுவும் வேண்டுமானால், அதிகப்படியான சலுகைகளுடன் ரூ.734 மதிப்பில் கிடைக்கும் கேபிள் கட்டர் திட்டத்துக்கு கஸ்டமர்கள் செல்லலாம்.

இந்த கேபிள் கட்டர் திட்டத்தையும் பெற 12 மாதங்களுக்கான செலவை முன்கூட்டியே செய்ய வேண்டும். அப்படி செய்து திட்டத்தை பெற்றுவிட்டால், 365 நாட்களுக்கும் டேட்டா, ஓடிடி மற்றும் லைவ் டிவி சேனல்களின் சலுகைகளை பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, வை-பை டேட்டாவானது, உங்களுக்கு 400 எம்பிபிஎஸ் வேகத்தில் பயன்படுத்த கிடைக்கும்.

முதலில் பார்த்த திட்டத்தில் கிடைத்த 300+ டிவி சேனல்களின் சந்தாவும் கொடுக்கப்படும். இதுபோக டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), சோனிலிவ் (SonyLIV), ஜீ5 (Zee5), சன் நெக்ஸ்ட் (Sun NXT), ஏஎல்டிடி (ALTT) மற்றும் நம்மபிளிக்ஸ் (NammaFlix) உள்ளிட்ட 36 ஓடிடி ஆப்களின் சந்தாவும் கிடைக்கும். இந்த கேபிள் கட்டர் திட்டங்கள் முதலில் பெங்களூருவில் கிடைத்தன.

இப்போது, ஹைதராபாத் நகத்திலும் தொடங்கப்பட்டு இருக்கிறது. இதனால், தமிழ்நாட்டின் சென்னையிலும் விரைவில் தொடங்கப்பட வாய்ப்புள்ளது. அப்படி தொடங்கப்பட்டால், ஜியோவைவிட மலிவான விலைக்கு கிடைக்கும். ஆகவே, கேபிள் டிவிக்கு மட்டுமல்லாமல், ஜியோவுக்கும் கடும் போட்டியாக இருக்கும். ஓடிடி (OTT) மற்றும் டிவி சேனல்களில் (TV Channels) இந்த திட்டங்கள் கேபிளுக்கு மாற்றாக வரவும் வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Excitel Rs 554 Plan With 300 Live TV Channels 200Mbps Broadband Data Check Cable Cutter Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X