Home
News

மாதத்துக்கு ரூ.499 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. 555 டிவி சேனல்கள்.. ஓடிடி சந்தா.. 300 எம்பிபிஎஸ் வேகம்!

ஜியோவுக்கு நிகராக வெறும் ரூ 499 செலவில் 300 எம்பிபிஎஸ் வேக இன்டர்நெட், ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன் மட்டுமல்லாமல் 550 டிவி சேனல்களையும் பார்த்துக்கொள்ள முடியும் என்றால், உங்களால் நம்ப முடிகிறது. எக்ஸிடெல் (Excitel) என்னும் நிறுவனம், அந்த சலுகையை வழங்கி வருகிறது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரை முன்னிட்டு, ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) போன்ற முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் தங்களது ப்ரீபெய்ட், போஸ்பெய்ட் மற்றும் பிராட்பேண்ட் திட்டங்களில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷனை வழங்கி வருகின்றன. அந்த வரிசையில், எக்ஸிடெல் பிராட்பேண்ட் சேவை நிறுவனமானது, ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன் மட்டுமல்லாமல், கூடுதல் சலுகைகளையும் வழங்குகிறது.

மாதத்துக்கு ரூ.499 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. 555 டிவி சேனல்!

எக்ஸிடெல் ரூ 499 திட்ட விவரங்கள் (Excitel Rs 499 Plan Details): இந்த திட்டத்தில் டேட்டா (Data), ஓடிடி (OTT) மற்றும் டிடிஎச் (DTH) சலுகைகள் கொடுக்கப்படுகிறது. இதுவொரு 30 நாள் வேலிடிட்டி கொண்ட திட்டமாகும். இந்த நாட்களில் 300 எம்பிபிஎஸ் வேகத்தில் பிராட்பேண்ட் இன்டர்நெட் சேவை வழங்கப்படும்.

இதற்காக வை-பை ரூட்டர் வழங்கப்படும். அதோடு 550+ டிவி சேனல்கள் சலுகையும் வருவதால் செட்-டாப் பாக்ஸ் கொடுக்கப்படும். மேலும், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) சப்ஸ்கிரிப்ஷனும் கொடுக்கப்படும். இந்த திட்டத்தை பெற வேண்டுமானால், நீங்கள் 12 மாதங்களுக்கான வேலிடிட்டி தொகையை கட்ட வேண்டும்.

அதாவது, மாதத்துக்கு ரூ.499 வீதம் 12 மாதங்களுக்கான ரூ.5,988 தொகையை மொத்தமாக கட்ட வேண்டும். அதோடு ஜிஎஸ்டி தொகையையும் செலுத்த வேண்டும். இந்தத் தொகையை கட்டினால், உங்களுக்கு பிராட்பேண்ட் இன்டர்நெட் சேவை வழங்கப்படும். இதனை மொபைல், டிவி, லேப்டாப் போன்ற பல்வேறு டிவைஸ்களின் கனெக்ட் செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை முன்னிட்டு, இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் அக்டோபர் 5ஆம் தேதியில் இருந்து கிடைக்கிறது. இதுவொரு பிரத்யேக திட்டம் என்பதால் நவம்பர் 19ஆம் தேதி வரையில் மட்டுமே கிடைக்கும். அதன்பின்பு புதிதாக திட்டத்தை பெற முடியாது. இந்த எக்ஸிடெல் நிறுவனத்தின் பிராண்ட்பேண்ட் சேவைகள் 35 நகரங்களில் மட்டும் கிடைக்கிறது.

அதில், பெங்களூரு, மங்களூரூ, ஹைதராபாத், விசாகப்பட்டினம், விஜயவாடா, குண்டூர், மீரட், கோரக்பூர், ஜெய்ப்பூர், பாட்னா, மும்பை, புனே மற்றும் டெல்லி போன்ற முக்கிய நகரங்கள் அடங்கும். இந்த திட்டங்கள் தமிழ்நாட்டில் இப்போதைக்கு கிடைக்கவில்லை. ஆனால், சென்னையில் விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதேபோல எக்ஸிடெல் கேபிள் கட்டர் பிளான் (Excitel Cable Cutter Plan) என்ற பிரபலமான திட்டம் ஒன்று இருக்கிறது. இந்த திட்டத்தில் 16 ஓடிடி ஆப்களின் சப்ஸ்கிரிப்ஷன், டிவி சேனல்கள், 400 எம்பிபிஎஸ் வேக இன்டர்நெட் சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கும் 12 மாத வேலிடிட்டி வழங்கப்படுகிறது.

மாதத்துக்கு ரூ.592 வீதம் 12 மாதங்களுக்கான தொகையை ஜிஎஸ்டியுடன் கட்டி இந்த திட்டத்தை பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), சோனிலிவ் (SonyLIV), ஜீ5 (ZEE5) ஆகிய மூன்று ஓடிடி தளங்களுக்கு ஒரு வருட சப்கிரிப்ஷன் கொடுக்கப்படும்.

அதோடு எபிக்ஆன் (EPIC ON), மனோரமா மேக்ஸ் (ManoramaMax), ஹங்கம்மா பிளே (Hungama Play) உள்ளிட்ட 13 ஓடிடி தளங்களில் சப்ஸ்கிரிப்ஷனும் வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல், 550க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களை பார்த்துக்கொள்ள முடியும். இந்த திட்டத்தில் 400 எம்பிபிஎஸ் வேகத்தில் இன்டர்நெட் சேவை வழங்கப்படுவதால், ஒரு வருடத்துக்கு வேறு டேட்டா திட்டங்களே தேவைப்படாது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Excitel Rs 499 Plan 30 Days Validity 300 Mbps Speed 550-TV Channels Disney Plus Hotstar Subscription
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X