ஜியோவுக்கு டாட்டா.. வெறும் ரூ.475 பட்ஜெட்.. 12 மாத பிளான்.. 300 எம்பிபிஎஸ் வேகம்.. 8 ஓடிடி சலுகை!
ஜியோவே திக்குமுக்காடும் விதமாக எக்ஸிடெல் (Excitel) நிறுவனம், வெறும் ரூ 474 திட்டத்தில் (Excitel Rs 474 Plan) 300எம்பிபிஎஸ் வேகத்தில் பிராட்பேண்ட் சேவையை வழங்குகிறது. அதுமட்டுமல்லாமல், 12 மாத சலுகை, ஓடிடி சலுகை என்று லாபம் தரக்கூடிய வகையில் இருக்கிறது.
பிராண்ட்பேண்ட் சேவையில், ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களை அடித்துக்கொள்ள முடியாது, என்று மக்கள் நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில், எக்ஸிடெல் என்னும் புதிய நிறுவனம் சத்தமே இல்லாமல், ஓடிடி (OTT), டிடிஎச் (DTH) மற்றும் இன்டர்நெட் சேவைகளை ரூ.600க்கும் குறைவான விலைக்கு வழங்கிவருகிறது. இந்த நிறுவனத்தின் ரூ.474 திட்டத்தைப் பற்றியே இப்போது பார்க்கப்போகிறோம்.

எக்ஸிடெல் ரூ 474 திட்ட விவரங்கள் (Excitel Rs 474 Plan Details): இந்த எக்ஸிடெல் ரூ 474 திட்டமானது, அந்த நிறுவனத்தின் எக்ஸிடெல் பீஸ்ட் பிளான் (Excitel Beast Plan) திட்டங்களின் கீழ் வருகிறது. இந்த பீஸ்ட் பிளான்களில் மொத்தமாக 3 வேலிடிட்டி கொண்ட திட்டங்கள் இருக்கின்றன.
அதாவது, ரூ.550 மதிப்புள்ள திட்டத்துக்கு 6 மாத வேலிடிட்டியும், ரூ.717 மதிப்புள்ள திட்டத்துக்கு 3 மாத வேலிட்டிட்டியும் வழங்கப்படுகிறது. அதேபோல நாம் பார்க்கப்போகும் ரூ.474 மதிப்புள்ள திட்டத்துக்கு 12 மாதங்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த மூன்று திட்டங்களுக்கும் 300 எம்பிபிஎஸ் வேகத்தில் பிராட்பேண்ட் இன்டர்நெட் சேவை வழங்கப்படும்.
அது எப்படி? ரூ.717 திட்டத்துக்கே 3 மாத வேலிட்டிட்டி இருக்கும்போது, ரூ.474 திட்டத்துக்கு மட்டும் 12 மாத வேலிடிட்டி கிடைக்கிறது என்று உங்களது மனதில் கேள்வி எழலாம். இங்குதான் எக்ஸிடெல் நிறுவனம் தனது வியாபார தந்திரத்தை பயன்படுத்தியிருக்கிறது. அதாவது, இந்த மூன்று திட்டங்களுக்கும் 30 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். ஆனால், அதை 12 மாதங்களுக்கு பெற்றால், மாதத்துக்கு ரூ.474 கொடுத்தால் மட்டும் போதும்.
அதுவே 6 மாதங்களுக்கு மட்டும் போதுமென்றால், மாதத்துக்கு ரூ.550 செலுத்த வேண்டும். அதேபோல வெறும் மூன்று மாதங்களுக்கு போதுமென்றால், மாதத்துக்கு ரூ.717 கொடுக்க வேண்டும். ஆகவே, நீங்கள் 12 மாத திட்டத்தை தேர்வு செய்தால், ரூ.2000க்கும் மேல் பணத்தை மிஞ்சம் செய்யலாம். இந்த திட்டத்தின் கனெக்ஷனுக்கு கூடுதலாக பணம் வசூலிக்கப்படாது.
மூன்று, ஆறு மற்றும் 12 மாதங்களுக்கான திட்டத்தின் தொகையை மட்டுமே கொடுத்தால் போதும். உங்களுக்கு நாள்தோறும் 300 எம்பிபிஎஸ் வேகத்தில் பிராட்பேண்ட் இன்டர்நெட் சேவை வழங்கப்படும். இந்த மூன்று திட்டத்திலும், நீங்கள் எத்தனை டிவைஸ்களை வேண்டுமானாலும், கனெக்ட் செய்து இன்டர்நெட்டை பயன்படுத்தலாம்.
அதாவது, உங்களது வீட்டில் இருக்கும் மொபைல்கள், லேப்டாப், ஆண்ட்ராய்டு டிவி போன்ற அனைத்து டிவைஸ்களிலும், ஒரே நேரத்தில் இன்டர்நெட் கனெக்ட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் 8 ஓடிடி (OTT) சலுகைகளும் வழங்கப்படுகிறது. ஆனால், அதற்காக நீங்கள் மாதந்தோறும் கூடுதலாக ரூ.100 சந்தா செலுத்த வேண்டும்.
அதாவது, நீங்கள் மாத்துக்கு ரூ.474 திட்டத்தை பயன்படுத்தும்போது, அதோடு ரூ.100 சேர்த்து ரூ.574ஆக செலுத்தினால், 8 ஓடிடி ஆப்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த ஓடிடி ஆப்களில், சோனிலிவ் (SonyLIV), ஜீ5 (Zee5), ஆல்ட்பாலாஜி (Alt Balaji), எபிக்ஆன் (EpicOn), ஹங்கமா பிளே (Hungama Play), ஷெமரூமீ (Shemaroo), பிளேபாக்ஸ்டிவி (PlayboxTV) மற்றும் ஹங்கமா மியூசிக் (Hungama Music) ஆகியவை அடங்கும்.
இந்த திட்டங்கள் பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, டெல்லி போன்ற பல்வேறு முக்கிய நகரங்களில் கிடைக்கிறது. சென்னையில் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த நிறுவனத்தின் எக்ஸிடெல் ரூ 595 திட்டத்தில், 400 எம்பிபிஎஸ் வேகத்தில் இன்டர்நெட், 550 லைவ் டிவி சேனல்கள் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் உள்ளிட்ட 12 ஓடிடி சந்தாவும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications