Home
News

கேபிள் டிவிக்கு போட்ட போடு.. இனிமே ரூ.349 போதும்.. 90 நாட்கள் வேலிடிட்டி.. 300 டிவி சேனல்கள்.. 16 ஓடிடி சந்தா!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தையே தூக்கி சாப்பிடும்படி வெறும் ரூ.349 மதிப்பிலான திட்டத்தில் 200 எம்பிபிஎஸ் வேக டேட்டா சலுகை மட்டுமல்லாமல், 300+ லைவ் டிவி சேனல்கள் சந்தா மற்றும் 16+ ஓடிடி ஆப்களின் சந்தாவையும் கொடுத்து கூடவே 90 நாட்களுக்கு இலவசமாக சேவையை வழங்கி கேபிள் டிவி நிலைமையை மேலும் கவலைக்கிடமாக்கி இருக்கிறது எக்ஸிடெல் (Excitel) என்னும் புதிய நிறுவனம். இந்த 90 நாட்கள் சலுகையை பெற ஆகஸ்ட் 4ஆம் தேதியே கடைசி நாளாகும்.

ஓடிடி வருகைக்கு பிறகு கேபிள் டிவியின் நிலைமை மோசமாகிவிட்டது என்றே சொல்ல வேண்டும். இதுபோக, ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் தங்களது வை-பை திட்டங்களில் ஓடிடி சலுகைகள் மட்டுமல்லாமல், கூடவே லைவ் டிவி சேனல்களின் சந்தாவையும் கொடுத்து கேபிள் டிவி பயன்பாட்டை குறைத்தே விட்டன.

கேபிள் டிவிக்கு போட்ட போடு.. இனி ரூ.349 போதும்.. 90 நாட்களுக்கு சேவை!

ஆனால், இப்போது ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் நிறுவனங்களே மிரளும்படி வை-பை டேட்டா, ஓடிடி மற்றும் டிவி சேனல்களின் சலுகைகளை அடிமட்ட விலையில் கொடுத்து கஸ்டமர்களை தட்டித்தூக்கி வருகிறது, எக்ஸிடெல் என்னும் நிறுவனம். இப்போது, 3 மாதங்களுக்கு இலவச சேவையை கொடுக்கும் மான்சூன் சலுகையை (Monsoon Offer) அறிவித்துள்ளது.

எக்ஸிடெல் ரூ 349 திட்ட விவரங்கள் (Excitel Rs 349 Plan Details): இந்த எக்ஸிடெல் திட்டத்தில் 200 எம்பிபிஎஸ் வேகத்தில் வை-பை டேட்டா சலுகை கொடுக்கப்படுக்கிறது. அதேபோல 300+ லைவ் டிவி சேனல்கள் மற்றும் 16+ ஓடிடி ஆப்களின் சந்தா கொடுக்கப்படுகிறது. சோனிலிவ் (SonyLiv), ஷீமாரூமீ (Shemaroo) உள்ளிட்ட ஆப்களை பயன்படுத்தலாம்.

இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 90 நாட்கள் அதாவது 3 மாதங்களுக்கு இலவச 200 எம்பிபிஎஸ் வேக டேட்டா மற்றும் 9 மாதங்களுக்கு இலவச ஓடிடி சந்தா மற்றும் 300+ டிவி சேனல்களின் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. அதோடு வை-பை ரூட்டர், ஆண்ட்ராய்டு பாக்ஸ் போன்ற டிவைஸ்களும் இலவசமாக இன்ஸ்டால் செய்து கொடுக்கப்படுகிறது.

ஆனால், 6 மாதங்களுக்கான தொகையை முன்கூட்டியே கஸ்டமர்கள் செலுத்த வேண்டி இருக்கும். அதாவது, மான்சூன் சலுகை இல்லாமல், இந்த எக்ஸிடெல் திட்டத்துக்கு மாதாந்திரம் ரூ.600-க்கும் மேல் செலவாகிறது. ஆகவே, 6 மாதத்துக்கு ரூ.3,600 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்போது மான்சூன் சலுகை காரணமாக இதே விலையில் 9 மாதங்களுக்கு சேவையை பெற்று கொள்ளலாம்.

ஜிஎஸ்டி கட்டணத்துடன் ரூ.3,699 செலுத்தினால் போதும், உங்களுக்கு 9 மாதங்களுக்கு 200 எம்பிபிஎஸ் வை-பை டேட்டா, 16+ ஓடிடி சந்தா மற்றும் 300+ டிவி சேனல்களின் சந்தா கொடுக்கப்படும். இந்த தொகையை 9 மாதங்களுக்கு வகுத்தால், உங்களுக்கு மாதம் வெறும் ரூ.349 செலவில் மேற்கூறிய அனைத்து சலுகைகள் மற்றும் இலவச இன்ஸ்டாலேஷன் வருகிறது.

ஆகவே, இந்த மான்சூன் சலுகை திட்டம் எப்படி பார்த்தாலும் அதிக சலுகைகள் கொண்டதாவே இருக்கிறது. ஆகஸ்ட் 4ஆம் தேதி வரையில் இந்த திட்டத்தை பெற்றால் மட்டுமே மேற்கூறிய சலுகைகள் கொடுக்கப்படும். அதன்பிறகு 6 மாதத்துக்கு மட்டுமே சலுகைகள் கொடுக்கப்படும் என்று எக்ஸிடெல் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

இந்த மான்சூன் சலுகை புதிய கஸ்டமர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. ஏற்கனவே இருக்கும் கஸ்டமர்களுக்கு கிடையாது. பெங்களூரூ, ஹைதாராபாத், மங்களூரூ, மும்பை, லக்னோ, விசாகப்பட்டினம், விஜயவாடா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் எக்ஸிடெல் சேவைகள் கிடைக்கின்றன. ஆனால், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகாவில் இந்த மாசூன் சலுகை அறிவிக்கப்படவில்லை.

இருப்பினும், விரைவில் சலுகைகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் இந்த நிறுவனத்தின் சேவைகள் தொடங்கப்படவில்லை. இருந்தாலும், இந்த நிறுவனத்தில் அதிகப்படியான சலுகைகள் மலிவாக கிடைப்பதால், தமிழ்நாட்டில் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. ஏற்கனவே, பெங்களூருக்கு வந்துவிட்டதால், சென்னை அல்லது கோவையில் விரைவில் தொடங்கப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Excitel Rs 349 Plan With 9 Months Validity 200Mbps Speed 300 Live TV Channels 21 OTT Subscription
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X