Home
News

இலவச WiFi ரௌட்டர், 32' இன்ச் ஸ்மார்ட் டிவி..400mbps வேகம்..12 OTT உடன் அன்லிமிடெட் டேட்டா.. கலக்கும் Excitel!

இந்தியாவில் கம்மி விலையில் அதிக வேகத்துடன் வைஃபை டேட்டாவை தருவது ஜியோவா அல்லது ஏர்டெல்லா? என்றால், இரண்டுமே இல்லை என்பது தான் பதில். காரணம், இந்த இரண்டு நிறுவனங்களையும் அசால்ட்டாக தூக்கிய சாப்பிட்ட நிறுவனமாக எக்ஸ்சிடெல் (Excitel) இருக்கிறது என்பதே உண்மை.

Excitel நிறுவனம் இந்தியாவில் 2015ம் ஆண்டு துவங்கி, மெல்ல-மெல்ல இந்தியாவில் சிறந்த பைபர் சேவையை வழங்கும் நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. இந்த Excitel-ன் மிக சிறந்த சிறப்பே, இதில் உங்கள் டேட்டா கேப் (data cap) என்ற வரைமுறை கிடையாது. ஜியோ மற்றும் ஏர்டெல் போல டேட்டாவிற்கென்று தனி வரம்பு எதுவும் கிடையாது.

இலவச WiFi ரௌட்டர், 32' இன்ச் ஸ்மார்ட் டிவி.. Excitel-ன் 400mbps வேகம்!

உங்களுக்கு விருப்பமான அளவிற்கு டேட்டாவை, உயர் வேகத்துடன் அன்லிமிடெட் ஆக தடையின்றி பயன்படுத்திக்கொள்ளலாம். இத்தகைய சலுகையை இந்தியாவில் வேறு எந்த நிறுவனமும் 400mbps வேகத்துடன் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சரி, இப்போது எக்ஸ்சிடெல் வெறும் ரூ.599 விலையில் என்னென்ன நன்மைகளை வழங்குகிறது என்று பார்க்கலாம் வாங்க.

Excitel ஆனது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) உடன் இணைந்து புதிய பிரீமியம் OTT தொகுக்கப்பட்ட இணையத் திட்டத்தை அறிவித்துள்ளது. புதிய திட்டத்துடன், ISP அதன் சந்தாதாரர்களுக்கு பிரீமியம் உள்ளடக்கத்தை வழங்குகிறது. புதிய எக்ஸ்சிடெல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் திட்டத்தின் விலை மாதந்தோறும் ரூ.599 மட்டுமே என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலையில், பயனர்கள் 12 OTT சேனல்கள் மற்றும் 550 க்கும் மேற்பட்ட நேரடி டிவி சேனல்களுக்கான அணுகலைப் பெறுவார்கள். இந்தத் திட்டம் 400Mbps இணைய வேகத்தை வழங்குகிறது. குறிப்பாக, பயனர்கள் இரண்டு சாதனங்களில் ஒரே நேரத்தில் ஸ்ட்ரீம் செய்ய இந்த திட்டம் உங்களை அனுமதிக்கிறது. அது மொபைல், லேப்டாப் அல்லது ஸ்மார்ட் டிவி என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

இலவச WiFi ரௌட்டர், 32' இன்ச் ஸ்மார்ட் டிவி.. Excitel-ன் 400mbps வேகம்!

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ HotStar), சோனி லைவ் (Sony LIV), ஜீ5 (Zee5), ஆல்ட் (Alt), ஹங்கமா பிளே (Hungama Play), ஹங்கமா மியூசிக் (Hungama Music), ஹப்ஹாப்பர் (Hubhopper), ஷீமாரோ (Shemaroo), பேன்கோடு (Fancode), டிஸ்ட்ரோ டிவி (Distro Tv), எபிக் ஆன் (Epic ON) மற்றும் பிளேபாக்ஸ் டிவி (PlayboxTV) போன்றவற்றை 400mbps வேகத்தில் வழங்குகிறது.

பயனர்கள் காலாண்டுத் திட்டத்திற்கு மாதந்தோறும் ரூ.847 செலவிட வேண்டும். Excitel சமீபத்தில் இந்தியாவில் OTT பிரியர்களுக்காக ஒரு புதிய ரூ.999 திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த வருடாந்திர திட்டம் OTT மற்றும் இணைய நன்மைகளை சந்தாதாரர்களுக்கு வழங்குகிறது. கூடுதலாக இத்துடன் உங்களுக்கு 32' இன்ச் ஸ்மார்ட் டிவியையும் நிறுவனம் வழங்குகிறது.

ஸ்மார்ட் டிவி மற்றும் OTT ஆப்ஸ் போன்ற பலன்களை அனுபவிக்க பயனர்கள் வருடாந்திர சந்தாவிற்கு பதிவு செய்ய வேண்டும். இந்த திட்டத்தின் விலை மாதம் ரூ.999 ஆகும். ஆண்டுக்கு ரூ.11,988 செலவாகிறது. இந்த திட்டத்தை தேர்வு செய்தால், கூடுதல் கட்டணம் எதுவுமின்றி வைஃபை ரௌட்டர் மற்றும் இன்ஸ்டாலேஷன் இலவசமாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.999 திட்டத்தில், சந்தாதாரர்கள் HD-ரெடி எல்இடி டிஸ்ப்ளே கொண்ட 32 இன்ச் ஃப்ரேம்லெஸ் ஸ்மார்ட் டிவியை பெறுவார்கள். இத்துடன், 6 OTT ஆப்ஸ் (Alt Balaji, Hungama Play, Hungama Music, Shemaroo, Epic On, and Playbox TV) மற்றும் 300க்கும் மேற்பட்ட நேரலை சேனல்களைப் பெறுகிறார்கள். இந்த திட்டங்கள் தற்போது டெல்லியில் மட்டுமே கிடைக்கும். விரைவில் தமிழ்நாட்டில் கிடைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Excitel Launched Rs 599 Disney Plus HotStar Plan and Rs 999 Plan With Free 32 Inch Smart Tv and WiFi Router Installation
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X