கேபிள் டிவிக்கு கும்பிடு.. மாதம் ரூ.554 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. 300+ டிவி சேனல்கள்.. 200Mbps டேட்டா!
கேபிள் டிவி படாதபாடுவதை இப்போது யாராலும் மறுக்க முடியாது. ஜியோவின் ஏர்ஃபைபர் திட்டங்கள் ஆண்ட்ராய்டு பாக்ஸ் மூலம் லைவ் டிவி சேனல்கள் மட்டுமல்லாமல், ஓடிடி ஆப்களின் சந்தாவையும் கொடுத்து ஒட்டுமொத்தமாக கேபிள் டிவிக்கு மாற்றாக களமிறங்கி இருக்கிறது. ஆனால், ஜியோ நிறுவனமே மூக்கில் விரல்வைக்கும்படியான அடிமட்ட விலைக்கு 300+ டிவி சேனல்கள் மற்றும் 200எம்பிபிஎஸ் டேட்டாவை எக்ஸிடெல் (Excitel) நிறுவனம் கொடுக்கிறது. கேபிள் கட்டர் திட்டம் (Cable Cutter Plan) என்ற பெயரிலேயே சலுகைகளை வழங்குகிறது.
இந்த கேபிள் கட்டர் திட்டத்தின் கீழ் மூன்று விலையில் திட்டங்கள் கிடைக்கின்றன. ரூ.734 மதிப்பிலான திட்டத்தில் வை-பை டேட்டா, லைவ் டிவி (Live TV) மற்றும் ஓடிடி (OTT) ஆப்களின் சந்தா கிடைக்கிறது. ரூ.719 மதிப்பிலான திட்டத்தில் வை-பை டேட்டா மற்றும் ஓடிடி சந்தா மட்டும் கிடைக்கிறது. ரூ.554 மதிப்பிலான திட்டத்தில் வை-பை டேட்டா மற்றும் லைவ் டிவி சேனல் கிடைக்கிறது.

எக்ஸிடெல் ரூ 554 திட்ட விவரங்கள் (Excitel Rs 554 Plan Details): அடிமட்ட விலைக்கு டிவி சேனல்கள் மட்டுமல்லாமல், வை-பை டேட்டாவும் (Wi-Fi Data) வேண்டுமானால், இந்த கேபிள் கட்டர் திட்டத்துக்கு செல்லுங்கள். இந்த திட்டத்தில் 200 எம்பிபிஎஸ் வேகத்தில் வை-பை டேட்டா சலுகை கொடுக்கப்படும். இதுபோக 300+ லைவ் டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம்.
எக்ஸிடெல் ரூ 719 திட்ட விவரங்கள் (Excitel Rs 719 Plan Details): இந்த கேபிள் கட்டர் திட்டத்தில் டிவி சேனல்களின் சந்தா மட்டும் கிடைக்காது. இருப்பினும், வை-பை டேட்டா மற்றும் ஓடிடி ஆப்களின் சந்தா கிடைக்கும். ஆகவே, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 300 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை கொடுக்கப்படும். 37 ஓடிடி ஆப்களின் சந்தாவை பெற்று கொள்ளலாம்.
இந்த சந்தாவில் டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), சோனிலிவ் (SonyLiv), ஜீ5 (ZEE5), சன்நெக்ஸ்ட் (SunNxt) மற்றும் ஆஹா (Aha) போன்ற முன்னணி ஓடிடி ஆப்களும் கிடைக்கின்றன. இருப்பினும், டேட்டா, ஓடிடி மற்றும் டிவி சேனல்கள் ஆகிய மூன்று சலுகைகளும் வேண்டுமானால், பின்வரும் கேபிள் கட்டர் திட்டம் பக்காவாக இருக்கும்.
எக்ஸிடெல் ரூ 734 திட்ட விவரங்கள் (Excitel Rs 734 Plan Details): இந்த எக்ஸிடெல் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 400 எம்பிபிஎஸ் வேகத்தில் வை-பை டேட்டா சலுகை கொடுக்கப்படும். இந்த டேட்டாவுக்கு அடுத்தபடியான 36 ஓடிடி ஆப்களை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதில் டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5, நம்மபிளிக்ஸ் உள்ளிட்ட ஆப்கள் கிடைக்கும்.
அதேபோல 300+ லைவ் டிவி சேனல்களையும் பார்த்து கொள்ளலாம். இந்த மூன்று கேபிள் கட்டர் திட்டங்களுக்கும் மாதாந்திர வேலிடிட்டி வருகிறது. ஆனால், இந்த விலையில் திட்டங்களை பெற வேண்டுமானால், 12 மாதங்களுக்கான தொகையை அட்வான்ஸ் போல செலுத்த வேண்டும். இதில் ஜிஎஸ்டி கட்டணமும் இருக்கும். இந்த தொகையை செலுத்திய பிறகு உங்களுக்கு சேவை கிடைக்கும்.
ஆனால், இந்த 12 மாத வேலிடிட்டிக்கு பிறகு மாதத்துக்கு எவ்வளவு தொகை இருக்கிறதோ, அதை மட்டுமே செலுத்தி வை-பை டேட்டா, டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். மிகவும் மலிவான திட்டங்கள் இருப்பதால், முன்கூட்டியே தொகை செலுத்தும்படி இருக்கிறது. இந்த திட்டம் பெங்களூரூவில் மட்டுமே கிடைத்து வந்தது.
ஆனால், இப்போது ஹைதராபாத் நகத்திலும் தொடங்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, சென்னையில் வரும் நாட்களில் இந்த கேபிள் கட்டர் திட்டங்கள் கிடைக்கலாம். இந்த திட்டங்களுக்கு வை-பை ரூட்டர், ஆண்ட்ராய்டு பாக்ஸ் மற்றும் ஸ்மார்ட் ரிமோட் கிடைக்கும். இதற்கு இன்டாலேஷன் கட்டணங்கள் இருக்கும். ஆனால், 12 மாத தொகையை செலுத்தினால், கட்டணம் குறையும்.


Click it and Unblock the Notifications