ஆடிப்போன Jio பயனர்கள்! ரூ.299-க்கு இத்தனை இலவச நன்மையா? அடேங்கப்பா! இது வேற லெவல்!
இந்தியாவில் மக்கள் பயன்படுத்தும் பெஸ்ட் நெட்வொர்க் என்றால், அது ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel) தான். என்ன தான் மக்கள் ப்ரீபெய்ட் திட்டங்களை தேர்வு செய்தாலும், இன்னும் ஏராளமானோர் போஸ்ட்பெய்டு திட்டங்களை ரீசார்ஜ் செய்கிறார்கள்.
போஸ்ட்பெய்டு திட்டங்களை பற்றி பேசுகையில், ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனம் மிகவும் மலிவு விலையில் அட்டகாசமான நன்மைகளுடன் வருகிறது. ப்ரீபெய்டு திட்டங்களில் கூட இவ்வளவு நன்மைகளுடன் குறைந்த விலையில் மலிவு விலை திட்டங்கள் கிடைக்காது என்றே கூறலாம். சரி, மலிவு விலையில் ஜியோ வழங்கும் போஸ்ட்பெய்டு திட்டம் என்ன நன்மையை வழங்குகிறது? ஏர்டெல் என்ன நன்மையை வழங்குகிறது என்று பார்க்கலாமா?

நாம் ஏன் இப்போது இந்த திட்டங்களை பற்றி பார்க்கிறோம் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். மீண்டும் டெலிகாம் நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்ட விலையை புதுப்பித்துள்ளன. டெலிகாம் சந்தையின் போக்குக்கு ஏற்றவாறு முன்னேறி வருகின்றன. இந்தியாவின் மூன்று முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா (Vi) ஆகியவை படிப்படியாக தங்கள் ரீசார்ஜ் திட்டங்களை மாற்றி வருகின்றன.
இதற்கிடையில், ரிலையன்ஸ் ஜியோ 199 போஸ்ட்பெய்ட் திட்டத்தை நிறுத்திவிட்டு, புதிய 299 போஸ்ட்பெய்ட் திட்டத்தை அதன் பயனர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ நிறுவனம் முன்பு வழங்கிய 199 ரூபாய் திட்டத்தை விட, இந்த திட்டத்தில் இப்போது கொஞ்சம் கூடுதல் டேட்டா கிடைக்கிறது. ஜியோ அதன் மலிவு விலை போஸ்ட்பெய்டு திட்டத்தை விலை உயர்த்தினாலும், ஏர்டெல் மற்றும் Vi விட குறைந்த விலையில் தான் இருக்கிறது.
ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற போட்டியாளர்களால் கிடைக்கும் பிற போஸ்ட்பெய்ட் திட்டங்களை விட, ஜியோவின் இந்த ரூ.299 திட்டத்தின் விலை மிகவும் குறைவாக உள்ளது என்பதை கவனிக்க வேண்டியதுள்ளது. சரி, ஜியோ நிறுவனம் அதன் மலிவு விலை போஸ்ட்பெய்டு திட்டத்துடன் என்ன நன்மைகளை வழங்குகிறது என்று பார்க்கலாம் வாங்க.

ஜியோ 299 போஸ்ட்பெய்ட் திட்டத்தின் பலன்கள் பற்றி பேசுகையிவ் இந்த திட்டம் ஒரு அடிப்படைத் திட்டமாகும். இது 30 ஜிபி டேட்டாவுடன், அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளுடன் வருகிறது. கூடுதல் இலவசங்களாக JioTv, JioCinema, JioCloud மற்றும் JioSecutiry நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்ட பயனர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் இலவசமாகக் கிடைக்கிறது.
ஜியோவின் ரூ.399 திட்டம் மாதத்திற்கு 75 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்துடன் 3 குடும்ப உறுப்பினர்களைச் சேர்த்துக்கொள்ள உதவும் அனுமதியும் கிடைக்கிறது. கடைசி தேதிக்கு முன்பே பயனர் டேட்டா தீர்ந்துவிட்டால், ஒரு பயனருக்கு 5ஜிபி வரை மேம்படுத்த jio அனுமதிக்கிறது. இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் போன்ற நன்மைகளும் கிடைக்கிறது. கூடுதல் நன்மையாக JioTv, JioCinema மற்றும் JioSecutiry போன்ற நன்மைகளை இலவசமாக வழங்குகிறது.
ஏர்டெல் ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டம்
இரண்டாவது குறைந்த விலை போஸ்ட்பெய்ட் திட்டம் ஏர்டெல் நிறுவனத்திடமிருந்து கிடைக்கும் ரூ.399 திட்டம் தான். இந்த திட்டம் பயனர்களுக்கு 40 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய தீமை என்னவென்றால், உங்கள் டேட்டா தீர்ந்துவிட்டதால், ஜியோவைப் போல எக்ட்ரா டேட்டாவைப் பெற முடியாது. இதுதவிர, இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








