Disney+ Hotstar மற்றும் 3 மாத வேலிடிட்டி உடன் அதிக டேட்டா வழங்கும் பெஸ்ட் Jio பிளான்.! இது தான்.!
ரிலையன்ஸ் ஜியோ (Jio) இப்போது அதன் பயனர்களுக்கு அட்டகாசமான நன்மைகளோடு 3 மாதம் செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த திட்டங்களில் இருந்து மிகச் சிறந்த நன்மைகளை வழங்கும் ஒரு சூப்பரான ரீசார்ஜ் திட்டத்தை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். குறிப்பாக, உங்களுக்கு OTT நன்மை உடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் அதிக டேட்டா வேண்டும் என்றால் இந்த ரீச்சர் திட்டத்தைக் கொஞ்சம் பாருங்கள்.

கூடுதல் கட்டணமின்றி 3 மாத வேலிடிட்டி உடன் Disney+ Hotstar வேண்டுமா?
இங்கு நாம் பேசிக்கொண்டிருக்கும் ஜியோவின் ரீசார்ஜ் திட்டம் உண்மையிலேயே மிகச் சிறந்த நன்மைகளை உங்களுக்கு வழங்குகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. காரணம், இது உங்களுக்குத் தேவையான அணைத்து விதமான நன்மைகளையும் 3 மாத வேலிடிட்டி உடன் வழங்குகிறது. நீங்கள் கொடுக்கும் காசிற்கு ஏற்ற பலன்களை இந்த ரீசார்ஜ் திட்டம் Disney+ Hotstar சந்தாவுடன் வருகிறது. இதன் நீங்கள் தனியாக வாங்கும் போது கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதுள்ளது.

டீசெண்டான விலையில் அட்டகாசமான நன்மைகளை வழங்கும் ரீசார்ஜ் திட்டம்
ஆனால், இந்த ரீசார்ஜ் திட்டம் உங்களுக்கு Disney+ Hotstar சந்தாவை ஏறக்குறைய இலவசமாகவே வழங்குகிறது. இந்த ரீசார்ஜ் திட்டம் உங்களுக்கு பாக்கெட் பிரெண்ட்லியான விலையில் வரவில்லை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், 3 மாதத்திற்குத் தினசரி டேட்டா நன்மை, SMS நன்மை, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை, Disney+ Hotstar நன்மை, ஜியோவின் எக்ஸ்ட்ரா ஆப்ஸ் நன்மை என்று பல நன்மைகள் டீசெண்டான விலையில் வழங்குகிறது.

ஜியோவின் ரூ.783 ரீசார்ஜ் திட்டம்
ஜியோவிடம் இருந்து கிடைக்கும் பெஸ்டான 3 மாத வேலிடிட்டி திட்டத்தில் ரூ.783 ரீசார்ஜ் திட்டம் பற்றித் தான் நாம் இங்குப் பார்க்கப்போகிறோம். இந்த ரீசார்ஜ் திட்டம் உங்களுக்குத் தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையோடு வருகிறது. இந்த திட்டம் உங்களுக்குத் தினமும் 100 SMS நன்மையுடன் அன்லிமிடெட் அழைப்பு நன்மையையும் வழங்குகிறது. இத்துடன் கூடுதலாக, JioTV, JioCinema, JioSecurity, and JioCloud போன்ற இலவச நன்மையையும் வழங்குகிறது.

எத்தனை மாத Disney+ Hotstar சந்தா கிடைக்கும்?
இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 84 நாட்கள் ஆகும். இந்த காலத்திற்கு, உங்களுக்கு Disney+ Hotstar சந்தாவும் கிடைக்கிறது. இதுவும் உங்களுக்கு 3 மாதம் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டத்துடன் உங்களுக்குக் கிடைக்கும் Disney+ Hotstar சந்தா மொபைல் எடிஷன் சந்தா என்பது கவனிக்கத்தக்கது. இந்த சந்தாவை நீங்கள் தனியாக வாங்க நினைத்தால், இது உங்களுக்கு ரூ.149 என்ற கட்டணத்தில் கிடைக்கும்.

Disney+ Hotstar இல்லாமல் அதிக டேட்டா வேண்டுமா?
ஆனால், இந்த திட்டத்துடன் உங்களுக்கு இந்த நன்மை ஏறக்குறைய இலவசமாகக் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் உங்களுக்குக் கிடைக்கக்கூடிய ஒட்டுமொத்த டேட்டாவின் அளவு 126ஜிபி ஆகும். Disney+ Hotstar சந்தா இல்லாமல் ஒரு சிறந்த 3 மாத ரீசார்ஜ் திட்டத்தை நீங்கள் வாங்க விரும்பினால், ரூ. 719 திட்டத்திற்கு நீங்கள் செல்லலாம். இது Disney+ Hotstar சந்தா இல்லாமல் தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் பிரீமியம் சந்தா கிடைக்கும் ரீசார்ஜ் திட்டங்கள் கூட Jio-வில் உள்ளதா?
இதேபோல், ஜியோவிடம் இருந்து கிடைக்கும் பல திட்டங்கள் உங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நன்மைகளுடன் வருகிறது. ஆனால், இவை வெவ்வேறு விலை பிரிவுகளில், வெவ்வேறு விதமானடிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது. சில அதிக விலை திட்டங்கள் உங்களுக்குடிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் பிரீமியம் சந்தாவை கூட வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் பட்ஜெட்டிற்குள் பொருந்தும் சிறந்த ரீசார்ஜ் திட்டத்தை ரீசார்ஜ் செய்து பயன்பெறுங்கள்.


Click it and Unblock the Notifications