128 மில்லியன் டாலர் பெறும் சாப்ட்பேங்க் முன்னாள் சி.ஓ.ஓ! எதற்காக?

அரோரா-விற்கு முன்பிருந்த சி.ஈ.ஓ மார்க் மெக்லலின், 2015ல் அமெரிக்காவின் அதிக சம்பளம் வாங்கக்கூடிய செயல் அதிகாரிகள் பட்டியலில் 5வது இடத்தில் இருந்தார்.

By GizBot Bureau
|

பேலோ ஆல்டோ நெட்வொர்க் நிறுவனத்தை வழிநடத்தப்போகும் நிகேஷ் அரோரா, அதிக சம்பளம் பெறும் அமெரிக்க செயல் அலுவலர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.அவருக்கு 128மில்லியன் டாலர் சம்பளமாக வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 6ம் தேதி ,நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக அரோரா பொறுப்பேற்றவுடன் 126 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை வழங்கவுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்த பங்குகளில் பாதி, நிறுவனத்தின் பங்குமதிப்பு இருமடங்கானால் தரப்படும் மற்றும் மீதியுள்ள பங்குகள் அவரின் செயல்பாடுகள் பொறுத்து வழங்கப்படும்.

290மில்லியன் டாலர்

290மில்லியன் டாலர்

சாப்ட் வங்கி நிறுவனரான மசாயோஷிக்கு அடுத்த இடத்தில் பணியாற்றிய அரோரா 2015ல் ஜப்பானின் சிறந்த பொது நிறுவன செயல் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த காலத்தில் அவருக்கு 290மில்லியன் டாலர் என்ற சிலிக்கான் வேலியின் உயர்ந்த சம்பளத்தை வழங்கியதாக அந்நிறுவனம் ஒழுங்குமுறை ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளது.

அரோரா

அரோரா

உபாருக்கு எதிரான கூட்டணிக்கு பொருளாதான ரீதியில் உதவவும், இந்தியாவின் இணைய வர்த்தக நிறுவனமான ஸ்னாப்டீல் மற்றும் ரியல் எஸ்டேட் இணையதளமான housing.com ல் முதலீடு செய்யவும் சாப்ட்வங்கியில் பணியாற்றும் போது மசாயோஷிக்கு உதவியாக இருந்தார் அரோரா. மசாயோஷி பணி ஓய்வு பெற விரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டவுடன் அரோரா அந்நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.

 7 ஆண்டுகள்

7 ஆண்டுகள்

பேலோ ஆல்டோ நெட்வொர்க் நிறுவனத்தில் 1 மில்லியன் டாலரை சம்பளமாகவும், 1 மில்லியன் டாலரை டார்கெட் போனஸாகவும், 40மில்லியன் டாலரை 7 ஆண்டுகள் முடக்க பங்குகளாகவும் அரோரா பெறுவார். நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 150% உயரும் போது 66 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை கூடுதலாக பெறுவார். விலை நான்கு மடங்காக உயரும் போது இவை அனைத்தையும் பெறுவார் அரோரா.

20 மில்லியன்

20 மில்லியன்

நெர்வொர்க் செக்யூரிட்டி சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமான இது, அரோரா பணியில் சேரந்த முதல் மாதத்தில் 20 மில்லியன் டாலர் மதிப்புள்ள 4 ஆண்டுகள் முடக்க காலத்திலான பங்குகளை வாங்க வழிவகை செய்துள்ளது. நிறுவனத்தின் 22,000 பங்குகள் அல்லது அடிப்படை சம்பளத்தின் 5 மடங்கு மதிப்பிலான பங்குகள், இவையிரண்டில் எது குறைவோ அதை சி.ஈ.ஓ வைத்திருக்க வேண்டும் என்று அந்நிறுவனம் கருதுகிறது.

5வது இடத்தில்

5வது இடத்தில்

அரோரா-விற்கு முன்பிருந்த சி.ஈ.ஓ மார்க் மெக்லலின், 2015ல் அமெரிக்காவின் அதிக சம்பளம் வாங்கக்கூடிய செயல் அதிகாரிகள் பட்டியலில் 5வது இடத்தில் இருந்தார். தற்போது இவர் நிறுவனத்தின் துணைத்தலைவராக பணியாற்றவுள்ளார்.

Best Mobiles in India

English summary
Ex-SoftBank COO gets $128 million to lead Palo Alto Networks : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X