Home
News

Google Pay-இல் இளம்பெண்.. 1 நிமிடத்துக்கு 1 ரூபாய் அனுப்புன பாய்.. ஆனால், சீரியஸ் மேட்டர்.. கடைசில என்னாச்சு!

இளம்பெண்களுக்கு சோஷியல் மீடியாக்கள் மூலம் வரும் தொல்லைகள் போதாதா? இப்போது கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) போன்ற டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை ஆப்களிலும் வந்துவிட்டதா, என்று உச்சு கொட்டும்படி இளம்பெண் ஒருவரது கூகுள் பே அக்கவுண்ட்டில் 1 நிமிடத்துக்கு ஒரு முறை 1 ரூபாய் அனுப்பப்பட்டிருக்கிறது.

உங்களிடம் கூகுள் பே அக்கவுண்ட் இருந்தால், அதில் ரூ.100 கடன் கேட்டு நண்பர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ வாங்குவது என்பதே இப்போது குதிரைக்கொம்பாக இருக்கிறது. ஆனால், இங்கு ஒருவர் இளம்பெண்ணின் கூகுள் பே அக்கவுண்ட்டுக்கு 1 நிமிடத்துக்கு ஒரு முறை 1 ரூபாய் அனுப்பி வைத்து இருக்கிறார். இது பேசுபொருளாக மாறி இருக்கிறது.

Google Pay-இல் இளம்பெண்! 1 நிமிடத்துக்கு 1 ரூபாய் அனுப்புன பாய்.. ஆனா?

உத்தர பிரதேசம் மாநிலம் சூரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் அவரது முன்னாள் ஆண் நண்பருக்கும் ஏதோ ஒரு கருத்து வேறுபாடு காரணமாக பிரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த இளம்பெண் அந்த ஆண் நண்பரை பேஸ்புக் (Facebook), ட்விட்டர் - எக்ஸ் (Twitter - X), இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற சோஷியல் மீடியா ஆப்களில் இருந்து பிளாக் செய்து இருக்கிறார். இது வழக்கமானதுதான்.

இருந்தாலும், அதற்கு பிறகு அந்த ஆண் நண்பர் சும்மா இருக்கவில்லை. அந்த இளம்பெண்ணின் கூகுள் பே அக்கவுண்ட்டுக்கு பணம் அனுப்பி பேச முயற்சித்துள்ளார். அதிலும், நூதனமாக ஒரு நிமிடத்துக்கு 1 ரூபாய் அனுப்பி இருக்கிறார். இதனால், கடுப்பான அந்த இளம்பெண் எக்ஸ் தளத்தில் அதை பதிவிட்டு அவரது மன வேதனையை தெரிவித்து இருக்கிறார்.

இந்த ட்வீட் ஆனது ஒரு பக்கம் ஆதவராகவும், மறுபக்கம் கேலி கிண்டல்களுக்கும் தீனி போட்டுள்ளது. அதாவது, இது உண்மையில் அந்த பெண்ணுக்கு மன உளைச்சல் மற்றும் தொல்லையை கொடுக்கும் செயலாக இது இருக்கிறது. ஆனால், அவரது ட்வீட்டுக்கு கமெண்ட் செய்யும் நெட்டிசன்கள் அந்த பிரச்சனையை விட்டுவிட்டு கூகுள் பேவில் கிடைக்கும் தொகையை கணக்கிட தொடங்கிவிட்டனர்.

Google Pay-இல் இளம்பெண்! 1 நிமிடத்துக்கு 1 ரூபாய் அனுப்புன பாய்.. ஆனா?

அதில் ஒருவர் 30 நாட்களில் 43,800 நிமிடங்கள் இருக்கிறது. ஆகவே, இதே போல பணம் செலுத்துவது தொடர்ந்தால், மாதந்தோறும் ரூ. 40,000-க்கு மேல் கிடைக்கும் என்கிறார். அதேபோல மற்றொருவர் அவரை பிளாக் செய்யாதீர்கள் உங்களுக்கு மாதம் ரூ.40000 வரும் என்கிறார். மேலும் ஒருவர் 10 எஸ்எம்எஸ்களுக்கு பிறகு அவரை அன்பிளாக் செய்ய ஐடியா கொடுக்கிறார்.

நான்காவது நபர், நான் ஏற்கனவே ஜிமெயில் (Gmail) மற்றும் கூகுள் பே அக்கவுண்ட்டில் (Google Pay Account) பிளாக் செய்யப்பட்டுவிட்டேன் என்று தெரிவிக்கிறார். மற்றொரு எக்ஸ் தள யூசர், இதே போல அவருடைய பெண் தோழியிடம் கூகுள் பேவில் பணம் அனுப்பிதாகவும், ஆனால் அந்த பெண் பணத்தை திருப்பி அனுப்பிதாகவும் கூறுகிறார். இறுதியாக ஒருவர் கூகுள் பேவில் அவரை பிளாக் செய்யுங்கள் என்கிறார்.

இப்படி பல்வேறு கமெண்ட்கள் இருக்கின்றன. இது விளையாட்டாகவும், பொழுதுபோக்காகவும் பலருக்கு தெரிந்தாலும், உண்மையில் அந்த பெண் பிளாக் செய்த பிறகும் அவரது முன்னாள் ஆண் நண்பர் தொடர்ந்து இப்படி தொல்லை கொடுப்பது தவறு என்பதை மறுக்க முடியாது. அனைத்து சோஷியல் மீடியாக்களிலும் பிளாக் செய்யப்பட்ட பிறகும் அவருக்கு தொல்லை தொடர்ந்து வந்திருக்கிறது.

இது தொழில்நுட்ப வளர்ச்சியை மக்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதையே பிரதிபலிக்கிறது. ஆகவே, ஒரு முக்கியமான பிரச்சனை வரும்போது அதற்கான தீர்வுக்கு பதிலாக அதை பேசுபொருளாக்கி விவாதம் நடத்தும் சோஷியல் மீடியா போக்கையும் பார்க்க முடிகிறது. இதை தடுக்க முடியாது என்றாலும், அதை குறைக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். நம் கையில்தான் இருக்கிறது.

Image Credit: @ShutupAyushiii (Twitter or X)

More from GizBot

Best Mobiles in India

English summary
Ex-boyfriend Sends 1 Rupee Per Minute To Girl Google Pay Account After Being Blocked Social Media
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X