Home
News

இந்த "மேட்டர்" தெரிஞ்சா, இனி ஹெட்போனை தொடவே மாட்டீங்க.!

குறிப்பாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்த அறிக்கையில் 12-35 வயதுக்குட்பட்டவர்களின் செவித்திறன் மிகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash S

எந்நேரமும் ஹெட்போனில் பாட்டு கேட்டுக்கொண்டே இருப்பவர்களுக்கு இது ஒரு முக்கிய தகவல், குறிப்பாக நாம் பயன்படுத்தும் ஹெட்போன்களே காதுகளை செவிடாக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இப்போது வரும் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ஹெட்போன்கள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன, அதன்படி ஹெட்போன்களில்
சென்ஸரி நியூரல் லாஸ்' எனப்படும் பாதிப்பு ஏற்படும் என உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த

தற்சமயம் மக்கள் வேலைசெய்யும் போதும் மற்றும் வண்டியில் செல்லும் போதும் இந்த ஹெட்போன்களை பயன்படுத்தி அதிக நேரம் பாடல்களை கேட்டுக் கொண்டே இருக்கின்றனர், இதனால் தலைவலி, தூக்கமின்மை, ஒவ்வாமை போன்ற கூடுதல் உபாதைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

உலக சுகாதார நிறுவனம்:

உலக சுகாதார நிறுவனம்:

உலக சுகாதார நிறுவனம் தற்சமயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு நிறுவனங்களின் பாதுகாப்பற்ற இயர்-போன்களை
பயன்படுத்தியதால் 110 கோடி இளைஞர்களின் செவித்திறன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 12-35 வயதுக்குட்பட்டவர்கள்:

12-35 வயதுக்குட்பட்டவர்கள்:

குறிப்பாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்த அறிக்கையில் 12-35 வயதுக்குட்பட்டவர்களின் செவித்திறன் மிகவும் பாதிப்பு
ஏற்பட்டுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக வால்யூம் வைத்து பாடல்கள் கேட்டால் செவித்திறன் கடுமையாக
பாதிக்கப்படும்.

 விபத்துகள்:

விபத்துகள்:

தற்சமயம் இருசக்கர வாகன விபத்துகளில் கணிசமான விபத்துகள் ஹெட்போனில் பாட்டுக் கேட்டபடி வாகனம் ஓட்டுவாதல் தான்
நடக்கிறது என்று பல்வேறு மக்கள் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

 120 டெசிபல்:

120 டெசிபல்:

சுற்றி இருப்பவர்கள் நம்மை விட்டு விலகி இருக்க ஹெட்போன் முக்கிய காரணமாக இருந்து வருகிறது. மேலும் ஹெட்போன்கள் 85 டெசிபல்
மற்றும் 100 டெசிபல் அளவிற்கு இசையை கேட்டால் கூட செவித்திறன் பாதிக்கப்படும். ஆனால் தற்சமயம் சந்தையில் கிடைக்கக் கூடிய
ஹெட்போன் மாடல்கள் 120 டெசிபல் அளவைக் கொண்டுள்ளது.

ஞாபக சக்தி:

ஞாபக சக்தி:

மேலும் தொடர்ந்து ஹெட்போன் மூலம் பாடல்களை கேட்பதால் ஞாபக சக்தி குறையும், அதன்பின்பு சிந்திக்கும் திறன் இருக்காது, குறிப்பாக
மனநோய் வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த விலையில்:

குறைந்த விலையில்:

கண்டிப்பாக பல்வேறு நிறுவனங்களின் குறைந்த விலையில் கிடைக்கும் ஹெட்போன்களை பயன்படுத்தக் கூடாது. மேலும் அவ்வாறு
பயன்படுத்தினால் பல்வேறு பாதிப்புகள் வரும்.

Best Mobiles in India

English summary
Evil buds Your earphones may be making you deaf says WHO ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X