புது 'தோழி'யை அறிமுகம் செய்யும் மைக்ரோசாப்ட்..!

By Meganathan

ஆண்களுக்கான புதிய தோழியை அறிமுகம் செய்கின்றது மைக்ரோசாப்ட் நிறுவனம். புரியவில்லையா..? உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் விண்டோஸ் 10 இயங்குதளம் வெளியாக தயாராகி வரும் நிலையில் புதிய இயங்குதளத்தின் சிறப்பம்சமான 'கார்டனா' பற்றி தான் இங்கு பார்க்க இருக்கின்றோம்..

விண்டோஸ் 10 இயங்குதளத்தில் 'கார்டனா' எனும் அம்சம் ஆண்களை கவரும் விதமாகவும், அனைவருக்கும் பயனுள்ளதாகவும் இருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

பெயர்

பெயர்

கார்டனா என்ற பெயர் எக்ஸ்பாக்ஸ் நிறுவனத்தின் ஹாலோ எனும் விளையாட்டில் வரும் ஜென் டெய்லர் தான் இந்த சேவைக்கு குரல் கொடுத்திருக்கிறார்.

பள்ஸ்

பள்ஸ்

திரையில் வட்ட வடிவில் இருக்கும் ஆர்ப் தான் கார்டனாவின் உயிர். கார்டனா என்ன செய்கின்றது என்பதை தெளிவாக உணர்த்தும் விதமாக அது தொடர்ச்சியாக அசைவுகளை ஏற்படுத்தி கொண்டே இருக்கும்.

கார்டனா

கார்டனா

கணினியில் உங்களது உதவியாள் தான் கார்டனா.

கணினி
 

கணினி

இணைய தேடல், கணினியில் தகவல்களை தேடுதல் என பல பணிகளை இந்த கார்டனா உங்களுக்காக செய்யும்.

பொழுதுபோக்கு

பொழுதுபோக்கு

பணி இல்லாமல் உங்களுக்கு நகைச்சுவைகளை சொல்வது, பாடுவது என உங்களது கவலையை மறக்கடிக்க செய்வதிலும் கார்டனா சிறப்பாக செயல்படுகின்றது.

வானிலை

வானிலை

வெளியில் செல்லும் முன் அன்றைய வானிலை அறிக்கை குறித்தும் கார்டனா உங்களுக்கு சொல்லும்.

நாட்காட்டி

நாட்காட்டி

அடுத்த மாதம் ஏதும் முக்கிய பணி செய்ய வேண்டுமா, கார்டனாவிடம் சொன்னால் போதும் சரியான தேதியில் துல்லியமான நேரத்தில் உங்களுக்கு நினைவூட்டும்.

பயன்பாடு

பயன்பாடு

மைக்ரோஃபோன் மூலம் கார்டனாவுடன் பேசலாம் இல்லையெனில் டாஸ்க்பாரில் டைப் செய்தும் பயன்படுத்தலாம்.

பேச்சு

பேச்சு

உங்களது நண்பருடன் பேசுவதை போன்றே கார்டனாவுடன் உங்களால் பேச முடியும்.

நோட்புக்

நோட்புக்

கார்டனாவின் நோட்புக் மூலம் உங்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை குறிப்பிட்டால் கார்டனா அதற்கு ஏற்ப நடந்து கொள்ளும்.

செட்டிங்ஸ்

செட்டிங்ஸ்

செட்டிங்ஸ் மூலம் பேட்டரி, ஸ்பீச், சர்ச் போல மற்ற செட்டிங்ஸ் ஆப்ஷன்களையும் மாற்றியமைக்க முடியும். இதன் மூலம் தனிப்பட்ட முறையில் கார்டனா உங்களுக்கு உதவியாக இருக்கும். கார்டனாவை ஆஃப் செய்தாலும் நீங்கள் பதிவு செய்த தகவல்களை கார்டனா மறக்காமல் நினைவில் வைத்து கொள்ளும்.

 
Read more about:
English summary
Check out here Everything you should know about Windows Cortana. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X