ஜியோ அறிமுகம் செய்யும் புதிய சேவை: கொண்டாடத்தில் வாடிக்கையாளர்கள்.!

|

இந்தியாவில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது டெலிகாம் நிறுவனத்தை அறிமுகம் செய்து முன்னணி நிறுவனமாக நிலைத்து நிற்கும் நிலையில். தற்பொழுது ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் ஓவர் வைஃபை சேவையைத் துவங்கத் திட்டமிட்டுள்ளது.

வாய்ஸ் ஓவர் வைஃபை சேவை

வாய்ஸ் ஓவர் வைஃபை சேவை

இந்திய ஊடகத்திற்குக் கிடைத்த தகவலின் படி, ரிலையன்ஸ் ஜியோ தனது வாய்ஸ் ஓவர் வைஃபை சேவையை மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கேரளா மற்றும் இன்னும் பல இடங்களைச் சோதனை செய்து வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதிகாரப்பூர்வ தகவலை எதிர்பார்த்து காத்திருக்கும் பயனர்கள்

அதிகாரப்பூர்வ தகவலை எதிர்பார்த்து காத்திருக்கும் பயனர்கள்

இருப்பினும், ஜியோ பொது மக்களுக்கு எப்பொழுது இந்த சேவையைத் துவக்கும் என்ற உறுதியான தகவல் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை. இறுதிக்கட்ட சோதனைக்குப் பின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எப்பொழுது அறிமுகம் செய்யப்படும் என்ற அதிகாரப்பூர்வ தகவலை ஜியோ நிறுவனம் தெரிவிக்கும்.

மற்ற நெட்வொர்க்குகளுக்கும் விரிவுபடுத்தும்

மற்ற நெட்வொர்க்குகளுக்கும் விரிவுபடுத்தும்

ஆரம்பக் கட்டங்களில், ஜியோ VoWi-Fi சேவைகள் ஜியோ கட்டமைப்புக்கு மட்டும் வழங்கப்படும் என்றும், பிற்காலத்தில் ஜியோ நிறுவனம் தனது சேவைகளை மற்ற நெட்வொர்க்குகளுக்கும் விரிவுபடுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாய்ஸ் ஓவர் வைஃபை சேவை திட்ட விபரங்கள் விரைவில்

வாய்ஸ் ஓவர் வைஃபை சேவை திட்ட விபரங்கள் விரைவில்

ரிலையன்ஸ் ஜியோ சோதனை செய்து வரும் வாய்ஸ் ஓவர் வைஃபை சேவை, இன்னும் சில மாதங்களில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் திட்ட விபரங்களை மற்றும் விலை விபரங்கள் அனைத்தும் விரைவில் வெளியிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் ரசிகர்களுக்காகக் கூடுதல் சிறப்புச் சலுகை

ஒன்பிளஸ் ரசிகர்களுக்காகக் கூடுதல் சிறப்புச் சலுகை

ஒன்பிளஸ் நிறுவனம் இன்று தனது புதிய ஒன்பிளஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது. ஒன்பிளஸ் ரசிகர்களுக்காகக் கூடுதல் சிறப்புச் சலுகையை ஒன்பிளஸ் நிறுவனம், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் இணைந்து தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது.

ரூ.5,400க்கான கேஷ் பேக் சலுகை

ரூ.5,400க்கான கேஷ் பேக் சலுகை

இந்த சலுகையின் கீழ், ஒன்பிளஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் வாங்கும் பயனருக்கு ரூ.5,400க்கான கேஷ் பேக் சலுகை ரூ.299 முதல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் உடன் வழங்கப்படுகிறது. இந்த ரூ.150க்கான கேஷ் பேக் சலுகை 36 வவுச்சர்களாக மை ஜியோ ஆப் மூலம் வழங்கப்படும்.

மே 19 ஆம் தேதி முதல் சலுகை

மே 19 ஆம் தேதி முதல் சலுகை

ஜியோ பிரத்தியேகமாக வழங்கும் இந்த சலுகையில் ஒன்பிளஸ் 7 சீரிஸ் பயனர்களுக்கு ரூ.299 திட்டம் வெறும் ரூ.150 என்ற சிறப்பு விலையில் வழங்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் அனைத்து சலுகைகளும் மே 19 ஆம் தேதி முதல் www.jio.com, ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்ஸ், மை ஜியோ ஸ்டோர்ஸ் மற்றும் மை ஜியோ ஆப் மூலம் கிடைக்கும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7 ப்ரோ - 3ஜிபி 4ஜி டேட்டா

ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7 ப்ரோ - 3ஜிபி 4ஜி டேட்டா

இதில் ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7 ப்ரோ பயனர்களுக்குத் தினமும் 3ஜிபி 4ஜி டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் இலவச எஸ்.எம்.எஸ்களுடன் ஜியோவின் பிரத்தியேக சேவைகளான ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ நியூஸ் மற்றும் பல சேவைகள் வழங்கப்படுகிறது.

ரூ.3,900 வரை கூடுதல் சலுகை

ரூ.3,900 வரை கூடுதல் சலுகை

இத்துடன் கூடுதல் பங்குதாரர் நன்மைகளாக ரூ.3,900 வரை சலுகை வழங்கப்படுகிறது. இதில் ஜூம்கார் வழங்கும் ரூ.2,000 அல்லது 20 சதவீத சலுகை, ஈஸ் மை ட்ரிப் வழங்கும் ரூ.1,500 அல்லது 15 சதவீத சலுகை மற்றும் சம்பக் வழங்கும் ரூ.350 சலுகை எனப் பல சலுகைகள் வழங்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
everything you should know about reliance jio s vowi fi plans : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X