வாட்ஸ்ஆப் ப்ளஸ் நல்லதா, கெட்டதா?
வாட்ஸ்ஆப் செயலி குறித்து ஏற்கனவே பல செய்திகளை பார்த்து இருக்கின்றோம், அதனால் வாட்ஸ்ஆப் ப்ளஸ் குறித்து உங்களுக்கு சில விஷயங்கள் தெரியாமல் இருக்கலாம். கீழே வரும் ஸ்லைடர்களில் வாட்ஸ்ஆப் ப்ளஸ் குறித்து நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்..

வாட்ஸ்ஆப் ப்ளஸ்
வாட்ஸ்ஆப் செயலியில் சில மாற்றங்களை மட்டும் செய்து வெளியிடப்பட்டுள்ள செயலி தான் வாட்ஸ்ஆப் ப்ளஸ், வாட்ஸ்ஆப் ப்ளஸ் வித்யாதியாசமான யூஸர் இன்டர்பேஸ் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்ஆப் ப்ளஸ்
வாட்ஸ்ஆப் ப்ளஸ் செயலி 2012 ஆம் ஆண்டு கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைத்தது, ஆனால் அதன் பின் எடுக்கப்பட்டு விட்டது. இருந்தும் பதிவிறக்கம் செய்ய வாட்ஸ்ஆப் ப்ளஸ் கிடைக்கின்றது.

இன்ஸ்டால்
உங்களது போனில் வாட்ஸ்ஆப் இல்லை என்றால் மட்டுமே உங்களால் வாட்ஸ்ஆப் ப்ளஸ் இன்ஸ்டால் செய்ய முடியும்.

பேக்கப்
வாட்ஸ்ஆப் செயலி இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால் அதனை பேக்கப் செய்து அன் இன்ஸ்டால் செய்ய வேண்டும். அதன் பின் வாட்ஸ்ஆப் ப்ளஸ் செயலியை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

வாட்ஸ்ஆப் ப்ளஸ்
வாட்ஸ்ஆப் யூஸர் இன்டர்பேசினை கஸ்டமைஸ் செய்ய முடியும்.

ஃபைல்
வாட்ஸ்ஆப் ப்ளஸ் செயலியில் அதிகளவு புகைப்படங்களை பறிமாறி கொள்ள முடியும், இது பலருக்கும் உதிவியாக இருக்கலாம்.

ஹைடு
வாட்ஸ்ஆப் ப்ளஸ் செயலியில் நீங்கள் ஆன்லைனில் இருக்கும் போதும் ஆஃப்லைன் மோடு வைத்து கொள்ளலாம்.

வாட்ஸ்ஆப்
வாட்ஸ்ஆப் செயலி தான் இன்று பலரும் பயன்படுத்தி வருகின்றனர், வாட்ஸ்ஆப் ப்ளஸ் உண்மையில் தீங்கு விளைவிக்கும் செயலி கிடையாது என்றாலும், இது வாட்ஸ்ஆப் போன்று அதிகாரப்பூர்வ செயலி கிடையாது என்பதே உண்மை.


Click it and Unblock the Notifications








