சாம்சங் கேலக்ஸி எஸ்8 (இறுதி) அம்சங்கள் மற்றும் விலை.!
சாம்சங் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான சாம்சங் கேலக்ஸி எஸ் 8 ன் விலை மற்றும் அம்சங்கள் ஆகியன குறித்து ஓர் பார்வை.
சென்ற ஆண்டின் இறுதியில் தனது தயாரிப்புக்களான எஸ் 7 மற்றும் எஸ் 7 எட்ஜ் ஆகியனவற்றை வெளியிட்ட சாம்சங் நிறுவனம் தனது புதிய தயாரிப்பாக கேலக்ஸி எஸ் 8 மற்றும் எஸ் 8 பிளஸ் ஆகியனவற்றை வெளியிட உள்ளது.அதில் அடுத்த மாதம் மார்ச் 29 அன்று நடைபெறவுள்ள மொபைல் வேர்ல்ட் காங்கிரஸில் தனது எஸ்8 தயாரிப்பினை அறிமுகப்படுத்த உள்ளது.
ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங்கின் புதிய மாடல்கள் குறித்து எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது ஆகையால்,இந்த வகை போன்களைப் பற்றி பலவித தகவல்கள் உலாவருகின்றன.
இந்நிலையில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ் 8 மற்றும் எஸ் 8 பிளஸ் ஆகியன இரு மாடல்களை வெளியிட உள்ளது.அவற்றின் அம்சங்கள் மற்றும் விலை உள்ளிட்ட தகவல்கள் கீழே..

வடிவமைப்பு:
சாம்சங்கின் புதிய தயாரிப்புகளான சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8 பிளஸ் ஆகியன இதுவரை கசிந்துள்ள தகவல்களின் படி வளைந்த வடிவில் டிஸ்பிளே,ஹோம் பட்டன் இல்லாமலும்,மேலும் உயர்தர பாதுகாப்பு தரக்கூடிய பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் ஆகியனவற்றைக்கொண்டும் 3.5 எம் எம் ஜாக்கினைக் கொண்டும் வெளிவரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்பிளே:
சாம்சங்கின் புதிய தயாரிப்புகளான எஸ் 8 மற்றும் எஸ் 8 பிளஸ் ஆகியன 5.7 இன்ச் அல்லது 5.8 இன்ச் அளவுள்ள டிஸ்பிளேயினைக்கொண்டும்,எஸ் 8 பிளஸ் ஆனது 6.2இன்ச் அளவுள்ள திரை,வளைவுள்ள கொரில்லா கிளாஸ்,அமோல்ட் டிஸ்பிளே,க்வாட் அல்லது 4கே ரிசொலூஷன்,550 பிக்சல் டென்சிட்டி 3டி டச் டச்விஸ்யுஐ ஆகியனவற்றைக்கொண்டும் வெளிவரக்கூடும்.

அம்சங்கள்:
சாம்சங்கின் புதிய சாம்சங் கேலக்ஸி எஸ் 8 மற்றும் எஸ் 8 பிளஸ் ஆகியன ஐ பி 68 தரச்சான்றிதழ் உடன் நீருக்கு அடியில் 1.5 எம் அளவில் 30 நிமிடங்கள் நேரம் இருக்க கூடிய அளவினுக்கு சிறந்த அம்சங்களைக்கொண்டிருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் குவால்காம் சினாப்ட்ராகன் 835 சிப்செட் ஆக்டா கோர் சிப் ஆகியனவற்றையும் கொடிருக்கக்கூடும்.

ஸ்டோரேஜ் மற்றும் மென்பொருள்:
சாம்சங் எஸ் 8 மற்றும் எஸ் 8 பிளஸ் ஆகியன இருவகையிலான ரேம் மதிப்பினைக்கொண்டு வெளிவரும் அவை 4ஜிபி மற்றும் 6 ஜி பி ஆகியன.இதில் எஸ் 8 ஆனது 64 ஜி பி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடனும் 4ஜி பி ரேம் வசதியினைக்கொண்டிருக்கக்கூடியவை 128 எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் வசதி மற்றும் 6 ஜிபி ரேம் வசதியினைக் கொண்டிருக்கக்கூடியவை 256 ஜிபி எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் வசதியினையும் கொண்டிருக்கும்.

கேமரா மற்றும் பேட்டரி:
சாம்சங் கேலக்ஸி எஸ் 8 மாடலனது 8 எம் பி பிரண்ட் கேமரா மற்றும் 12எம் பி பிரண்ட் கேமரா வசதிகளுடன் 9 எம் பி இமேஜிங் வசதி,லைவ் 4கே வீடியோ,ஆட்டோ எச்டிஆர் மற்றும் பனோரமிக் வசதிகளையும் கொண்டிருக்கும்.
இந்த மாடல்களின் பேட்டரியானது கழட்டவியலாத தன்மையுடன் 3500 எம் ஏ எச் பேட்டரி மற்றும் விரைவாக சார்ஜ் ஆக யுஎஸ்பி டைப் சி ஆகிய வசதிகளையும் கொண்டிருக்கும்.

நிறங்கள் மற்றும் விலை:
சாம்சங் எஸ் 8 மற்றும் எஸ் 8 பிளஸ் ஆகியனவற்றை 5 வகை நிறங்களில் வெளியிடுகிறது.அவை ப்ளாக், வெள்ளை, கோல்டு, சில்வர் மற்றும் பிங்க் கோல்டு.
மேலும்,விலையைப்பொறுத்தமட்டில் 6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டவை சுமார் ரூபாய்.59,000 மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியினைக்கொண்டவை சுமார் 63,000 வரையிலும் இருக்க கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க
அசுஸ் அதிரடி : இனி இன்டெக்ஸ், லாவா & மைக்ரோமேக்ஸ் காலி.!


Click it and Unblock the Notifications