Home
News

கூகுளின் அடுத்த ஆண்ட்ராய்டு அப்டேட் - இதுல என்ன ஸ்பெஷல்

கூகுளின் லாலிபாப் அப்டேட் கிட்டத்தட்ட பல ஆண்ட்ராய்டு கருவிகளுக்கும் கிடைக்க துவங்கி விட்டது என்றே கூறலாம். பலரும் ஆவலோடு எதிர்பார்க்கும் அடுத்த ஆண்ட்ராய்டு அப்டேட் தேதி இன்னும் உறுதியாக தெரியாத நிலையில் அடுத்த அப்டேட்டில் கூகுள் எவ்வித அம்சங்களை வழங்கும் என்பதை தான் இங்கு பார்க்க இருக்கின்றோம்.

ஆண்ட்ராய்டு கருவியை பாதுகாக்க இதை செய்யனும்னு கூகுளே சொல்றாங்க

கூகுள் நிறுவனத்தின் டெவலப்பர் கான்ஃபெரன்ஸ் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் நிலையில் அந்நிறுவனம் புதிய அப்டேட் குறித்த சில தகவல்களை அந்நிகழ்வில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. முழுமையான தகவல்கள் கிடைக்காது என்றாலும் புதிய அப்டேட்டின் சில முக்கிய சிறப்பம்சங்களை மட்டும் எதிர்பார்க்க முடியும்.

உலகின் சிறந்த மெல்லிய ஸ்மார்ட்போன்கள்

தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் கூகுளின் அடுத்த அப்டேட்டில் எதிர்பார்க்கப்படும் சில சிறப்பம்சங்களை பாருங்கள்..

ஆண்ட்ராய்டு எம்

ஆண்ட்ராய்டு எம்

தற்சமயம் ஆண்ட்ராய்டு எம் என அழைக்கப்பட்டாலும் முந்தைய ஆண்ட்ராய்டு பெயர்களை போன்றே ஏதேனும் இனிப்பான பெயரையே கூகுள் இம்முறையும் வழங்கலாம்.

பாஸ்வேர்டு

பாஸ்வேர்டு

அடுத்த ஆண்ட்ராய்டு அப்டேட்டில் குறிப்பிட்ட செயலிகளை லாக் இன் செய்ய உங்களது கைரேகைகளை பாஸ்வேர்டாக பயன்படுத்த நேரிடலாம்.

ஸ்மார்ட் ஹோம்

ஸ்மார்ட் ஹோம்

கூகுள் நிறுவனம் ஸ்மார்ட் குளிர்சாதன பெட்டி, மின் விளக்குகளுக்கான மென்பொருளை உருவாக்கி வருகின்றதோடு இவை பெரும்பாலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்துடன் இணைய அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

ஆண்ட்ராய்டு ஆட்டோ

ஆண்ட்ராய்டு ஆட்டோ

கடந்த ஆண்டு கூகுள் அறிவித்த கூகுள் ஆட்டோ திட்டம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆண்ட்ராய்டு ஆட்டோ உங்களது போனுடன் இணைந்து காரில் இருக்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் வேலை செய்யும்.

நோட்டிபிகேஷன்

நோட்டிபிகேஷன்

அனைத்து தளங்களில் இருக்கும் நோட்டிபிகேஷன்களும் இணைந்து செயல்படும் புதிய வகை நோட்டிபிகேஷன் சிஸ்டம் புதிய அப்டேட்டில் எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் மூலம் நீங்கள் கணினியில் பார்த்துவிட்ட நோட்டிபிகேஷனை போனில் பார்க்க முடியாது.

ஆண்ட்ராய்டு வியர்

ஆண்ட்ராய்டு வியர்

ஸ்மார்ட்வாட்ச்களுக்கான ப்ரெத்யேக அம்சங்கள் மற்றும் புதிய வகை நோட்டிபிகேஷன் முறை புதிய ஆண்ட்ராய்டு அப்டேட்டில் எதிர்பார்க்கலாம்.

ஆண்ட்ராய்டு எம் பெயர்

ஆண்ட்ராய்டு எம் பெயர்

ஜின்ஜர்ப்ரெட், ஐஸ்க்ரீம் சாண்ட்விட்ச், ஜெல்லி பீன், கிட்காட் மற்றும் லாலிபாப் வரிசையில் புதிய ஆண்ட்ராய்டு எம் பெரும்பாலும் மில்கி பார், மில்கி வே போன்று நிச்சயம் ஏதேனும் இனிப்பு வகையை குறிப்பிடுவதாகவே இருக்க கூடும்.

Best Mobiles in India

English summary
Here you will find Everything you need to know about Google's next Android update. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X