பாஸ்வோர்டு மறந்து போச்சா, கவலைய விடுங்க..!

Posted By:

நம்மில் சிலர்தான் பாஸ்வேர்ட்டுகளை சூப்பராக ஞாபகம் வைத்துக் கொள்வோம். மீதி எல்லோரும் அடிக்கடி மண்டையை தான் சொரிவோம், நல்லா யோசிச்ச பின்னதான் "அப்பாடா" என்று நினைவிற்கு வரும்.

பாஸ்வோர்டு மறந்து போச்சா, கவலைய விடுங்க..!

நீங்களும் அந்த மண்டைய சொரியும் பார்ட்டிகளில் ஒருவரா..?! வாங்க வாங்க வெல்கம், இது நமக்கான ஏரியா தான், இது நமக்காக கண்டுபிடிக்கப்பட்டது தான் - எவ்ரிகீ..!

'அம்மா' சத்தியமா நான் சோம்பேறி தான்ய்யா !

எவ்ரிகீ - கையில் அணிந்து கொள்ளும் பேண்ட் போல இருக்கும். இதில் ஃபேஸ் புக், ஜிமெயில், நெட் பாங்கிங் என நம் அத்துணை பாஸ் வோர்ட்களையும் அடக்கி வைத்துக் கொள்ள முடியும்.

பாஸ்வோர்டு மறந்து போச்சா, கவலைய விடுங்க..!

இது ப்ளூ-டூத் தொழில்நுட்பம் மூலம் இயங்கும் இதை கையில் அணிந்து கொண்டு, உங்கள் மொபைல் போனை எடுக்க இது அன்லாக் செய்ய உதவும், உங்கள் ஃபேஸ் புக் லாகின் பக்கத்தை திறக்க பாஸ்வோர்ட் தானாக பரிமாரப்பட்டு பக்கம் திறக்கும்..!

ஓ.. இதைத்தான் மர மண்டைனு சொல்வாங்களோ..!?

இது மிகவும் நேர்த்தியான மற்றும் பாதுகாப்பான ஒரு கருவியாகும். அதே சமயம் இதை எப்போது வேண்டுமானாலும் டிஅக்டிவேட் செய்து கொள்ளும்படி உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சந்தைக்கு வர இருக்கும் இது ஒரு அமெரிக்க நிறுவன தயாரிப்பாகும்.

Read more about:
English summary
Everykey is the wristband that replaces keys and passwords. It's sleek, secure, and can be deactivated at any time.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot