Vodafone Idea-வின் ரூ.1 ரீசார்ஜ்.. ஆடிப்போன Airtel, Jio.. என்னென்ன நன்மைகள்? எத்தனை நாள் வேலிடிட்டி?
வோடபோன் ஐடியா (Vodafone Idea - Vi) நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் திட்டங்களின் பட்டியலில் அதன் ரூ.1 ரீசார்ஜ் பேக்கை (Rs.1 Pack) தொடர்ந்து பட்டியலிட்டு வருகிறது. இது ஒட்டுமொத்த இந்திய தொலைத்தொடர்பு சந்தையிலேயே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் மிகச்சிறிய-மதிப்பிலான வவுச்சர்களில் ஒன்றாகும்.
பெரிய மாற்றங்கள் இல்லாமல் கடந்த பல மாதங்களாக ரீசார்ஜ் செய்ய கிடக்கும் இந்த ரூ.1 பேக் ஆனது குறைந்தபட்ச பயன்பாடு (minimal usage) மட்டுமே தேவைப்படும் வோடாபோன் ஐடியா சந்தாதாரர்களுக்கு பேஸிக் ஆன காலிங் நன்மைகளை (Basic Calling Benefits) வழங்குகிறது.

வோடாபோன் ஐடியாவின் அதிகாரப்பூர்வ கட்டண தகவலின்படி, ரூ.1 ரீசார்ஜில் பின்வரும் நன்மைகள் கிடைக்கும் :
- 75 பைசா டால்க் டைம்
- 1 லோக்கல் ஆன்-நெட் நைட் நிமிடம்.
- 1 நாள் வேலிடிட்டி
- அவுட்கோயிங் எஸ்எம்எஸ் இல்லை,
- சர்வீஸ் வேலிடிட்டியில் நீட்டிப்பு இல்லை.
அதாவது ரூ.1 பேக்கின் கீழ் எந்த டேட்டா ஒதுக்கீடும் அல்லது தொகுக்கப்பட்ட சேவைகளையும் கிடையாது. இந்த வவுச்சர் முதன்மையாக மிகச் சிறிய டாப்-அப் தேவைப்படும் சந்தாதாரர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய டெலிகாம் துறை ஆனது அன்லிமிடெட் திட்டங்கள், தொகுக்கப்பட்ட ஓடிடி சேவைகள் மற்றும் அதிக மதிப்புள்ள மாதாந்திர பேக்குகளை நோக்கி நகர்ந்தாலும், ப்ரீபெய்ட் பயனர்களில் ஒரு பகுதியினர் குறைந்த மதிப்புள்ள ரீசார்ஜ்களையே தொடர்ந்து நம்பியுள்ளனர். ரூ.1 பேக் இந்த பிரிவை சார்ந்தது.
குறிப்பாக லைட் யூசர்கள் (உள்வரும் அழைப்புகள், அடிப்படை தொடர்பு அல்லது ஓடிபி அடிப்படையிலான அங்கீகாரத்திற்காக தங்கள் மொபைல் நம்பரை முதன்மையாகப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் குறைந்தபட்ச மட்டங்களில் ரீசார்ஜ் செய்பவர்கள்) மற்றும் இரண்டாம் நிலை சிம் வைத்திருப்பவர்களுக்கு ரூ.1 பேக் அவ்வப்போது கைகொடுக்கலாம். மேலும் இந்த பேக் டோக்கன் அளவிலான டால்க் டைமையும் ஒரு நிமிட இரவு நிமிடத்தையும் வழங்குகிறது, இது குறுகிய அல்லது அவசர வெளிச்செல்லும் அழைப்புகளுக்கு பயன்படுத்தப்படலாம்.
பிஎஸ்என்எல் நிறுவனத்திடமும் ரூ.1 ரீசார்ஜ் உள்ளது: அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் ஆபரேட்டர் ஆன பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்திடமும் ரூ.1 மதிப்புள்ள ஃப்ரீடம் பிளான் தற்போது ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இதுவொரு ஆபர் ரீசார்ஜ் ஆகும். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த சலுகை நாடு முழுவதும் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களிலும், 2025 டிசம்பர் 31 ஆம் தேதி வரை செல்லுபடியாகும்.
ரூ.1 க்கு புதிய பிஎஸ்என்எல் சிம் கார்டை வாங்குவதன் மூலம் பயனர்கள் இந்த சலுகையை பெறலாம். ஆக இந்த சலுகை புதிய பிஎஸ்என்எல் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும். ஏற்கனவே பிஎஸ்என்எல் சேவையின் கீழ் உள்ள பயனர்கள் இந்த ரூ.1 சலுகைக்கு தகுதியற்றவர்கள் ஆவார்கள்.
நன்மைகளை பொறுத்தவரை பிஎஸ்என்எல்-ன் ரூ.1 ஃப்ரீடம் திட்டம் ஆனது 30 நாட்கள் செல்லுபடியாகும். மேலும் ரூ.1 ரீசார்ஜ் மூலம், பயனர்கள் தினசரி 2 ஜிபி அதிவேக (4ஜி) டேட்டா, இந்தியா முழுவதும் வரம்பற்ற லோக்கல் மற்றும் நேஷனல் ரோமிங் கால்களை ஆகியவற்றையும் பெறுகிறார்கள். கூடுதலாக, பயனர்கள் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்களையும் பெறுவார்கள்.
இந்த ஃப்ரீடம் திட்டம் முதலில் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை என்கிற காலக்கட்டத்திற்குள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்று அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. பின்னர் பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த ஃப்ரீடம் திட்டத்தின் செல்லுபடியை 15 நாட்களுக்கு நீட்டித்தது, அதாவது செப்டம்பர் 15, 2025 வரை ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்று அறிவித்து இருந்தது.இப்போது டிசம்பர் 31 வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








