யார் சாமி இவன்.. டெய்லி 20GB டேட்டா வேணுமா? Vodafone Idea கஸ்டமர்கள் கவனத்த்திற்கு!
இந்திய டெலிகாம் சந்தையின் - மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் ஆன வோடபோன் ஐடியா லிமிடெட் (Vodafone Idea Limited - VIL) ஆனது முதல் மற்றும் இரண்டாம் இடங்களில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மற்றும் பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனங்களுடன் அனுதினமும் போராடி வருகிறது.
புதிய வாடிக்கையாளர்களை (New Customers) சேர்க்கவும் போராடி வருகிறது. ஏற்கனவே இருக்கும் வடிக்கையாளர்களை (Existing Customers) தக்கவைத்து கொள்ளவும் போராடி வருகிறது. இதற்கிடையில் தான் சமீபத்தில், இந்நிறுவனம் அதன் பயனர்களுக்காக ஒரு புதிய டேட்டா வவுச்சரை (New Data Voucher) அறிமுகப்படுத்தி இருந்தது. சுவாரசியமாக இது டெய்லி 20ஜிபி அளவிலான டேட்டாவை (Daily 20GB Data) வழங்குகிறது. இங்குதான் வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

நாம் இங்கே பேசுவது வோடாபோன் ஐடியாவின் ரூ.99 டேட்டா பேக்கை (Vodafone Idea Rs.99 Data Pack) பற்றித்தான். இந்த டேட்டா வவுச்சர் மற்றவற்றிலிருந்து மிகவும் தனித்து நிற்கிறது. ஏனெனில் இது அன்லிமிடெட் டேட்டாவை (Unlimited Data) வழங்குவதாக உறுதியளிக்கிறது. ஆனால் "எப்போதும் போல" வோடபோன் ஐடியா மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களிடம் கிடைப்பதை போல, அன்லிமிடெட் என்பது இங்கே உண்மையிலேயே "அன்லிமிடெட்" அல்ல.
ரூ.99 திட்டத்தின் டேட்டா நன்மை ஆனது ஒரு நாளைக்கு 20 ஜிபி என வரையறுக்கப்பட்டு உள்ளது மற்றும் இந்த வவுச்சர் 2 நாட்கள் மட்டுமே செல்லுபடி (2 Days Validity) ஆகும். எனவே அடிப்படையில், இந்த திட்டத்தின் கீழ் உங்களுக்கு கிடைக்கும் மொத்த டேட்டா 40 ஜிபி (Total 40GB Data) ஆகும்.
மேலும் ஒவ்வொரு நாளும் 20 ஜிபி எப்யுபி - நியாயமான பயன்பாட்டுக் கொள்கை (FUP - Fair usage policy) டேட்டாவை பயன்படுத்திய பிறகு, வோடபோன் ஐடியாவின் ரூ.99 டேட்டா பேக்கின் இன்டர்நெட் ஸ்பீட் ஆனது 64 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.
இருப்பினும், குறுகிய கால பயன்பாட்டிற்கு நிறைய டேட்டா தேவைப்படும் 4ஜி பயனர்கள் இந்த திட்டத்தை தாராளமாக ரீசார்ஜ் செய்யலாம். ஒருவேளை நீங்கள் இந்த டேட்டா வவுச்சரை மாதத்திற்கு இரண்டு முறை ரீசார்ஜ் செய்ய முடிவு செய்தால்.. அதற்கு பதிலாக நீங்கள் வி நிறுவனத்தின் அன்லிமிடெட் 4ஜி அல்லது 5ஜி திட்டங்களுக்கு (Vi Unlimited 4G and 5G Plans) செல்லலாம்.
ஏனென்றால் அப்போதும் கூட நீங்கள் உங்கள் பேஸிக் திட்டத்திற்கு மேல் கூடுதலாக ரூ.200 செலவு செய்வீர்கள். ரூ.99-ஐ 2 முறை ரீசார்ஜ் செய்தாலும் ரூ.200 கூடுதலாக செலவு செய்யத்தான் போகிறீர்கள். இதை செய்வதற்கு பதிலாக நீங்கள் நேரடியாக அன்லிமிடெட் 4ஜி அல்லது 5ஜி திட்டங்களையே ரீசார்ஜ் செய்யலாம்.
நினைவூட்டும் வண்ணம் ரூ.99 ஆனது ஒரு கூடுதல் டேட்டா பேக் ஆகும். அதாவது இது ஏற்கனவே ஆக்டிவ் ஆக உள்ள சர்வீஸ் வேலிடிட்டி (Service Validity) கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தை (Active Prepaid Plan) ரீசார்ஜ் செய்து வைத்திருக்கும் பயனர்களுக்கு மட்டுமே வேலை செய்யும். எனவே டெய்லி 20ஜிபி டேட்டா-ஆ.. ரூ.100 க்குள் 40ஜிபி-ஆ என்று கண்களை மூடிக்கொண்டு ரூ.99-ஐ ரீசார்ஜ் செய்து விடாதீர்கள்!


Click it and Unblock the Notifications








