5G விட்ட வேகத்துல கலக்குற Vodafone! 365 நாளுக்கு ஓஹோன்னு நன்மைகள்! டெய்லி 2GB, Hotstar, 12AM-12PM இலவச டேட்டா!
ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel) ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து, நாட்டின் மூன்றாவது பெரிய டெலிகாம் ஆப்ரேட்டர் ஆக உள்ள வோடபோன் ஐடியா லிமிடெட் (Vodafone Idea Limited - VIL)ஆனது ஒருவழியாக தனது 5ஜி சேவையை (5G Service) அறிமுகம் செய்ய தொடங்கியுள்ளது.
இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் தற்போது வோடபோன் ஐடியாவின் 5ஜி நெட்வொர்க் (Vodafone Idea 5G Network) அணுக கிடைக்கிறது. இந்த பட்டியலில் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையும் உள்ளது. இதுகுறித்து வோடபோன் ஐடியா வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ பட்டியலின்படி தற்போது பெருங்குடி, நெசப்பாக்கம் ஆகிய இரண்டு பகுதிகளிலும் உள்ள வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் விஐ-யின் 5ஜி சேவையை பெற முடியும்.

விரைவில் விஐ 5ஜி (Vi 5G) சேவையானது - நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான பகுதிகளில் அறிமுகமாகி விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை நீங்களொரு விஐ கஸ்டமர் ஆக இருந்தால்.. நீங்கள் மிகவும் லாபகரமான விலையில் 1 ஆண்டு வேலிடிட்டியை (1 Year Validity) வழங்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை தேடிக்கொண்டு இருந்தால்.. 365 நாட்களுக்கும் ஓஹோன்னு நன்மைகளை வழங்கும் ஒரு வோடபோன் திட்டம் உள்ளது.
அது ரூ.3699 திட்டமாகும் (Vi Rs.3699 Plan). இது டெய்லி 2ஜிபி டேட்டா, ஒவ்வொரு நாளும் 12 மணிநேர இலவச அன்லிமிடெட் டேட்டா (12 Hours Unlimited Data), ஒரு வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா (1 Year Disney+ Hotstar Mobile ) ஆகிய முக்கிய நன்மைகளை வழங்கும் ஒரு திட்டமாகும். வோடாபோன் ஐடியாவின் கீழ் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்கும் வேறு சில திட்டங்கள் இருந்தாலும் கூட, ஒரு வருடத்திற்கான சந்தாவை வழங்குவது இந்த ஒரு திட்டம் மட்டுமே ஆகும்.
வோடபோன் ஐடியா ரூ 3699 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? ரூ.3699 ப்ரீபெய்ட் திட்டமானது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்கள் (Daily 100 Free SMS) மற்றும் டெய்லி 2ஜிபி டேட்டாவுடன் (Daily 2GB Data) வருகிறது. இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா மற்றும் விஐ ஹீரோ அன்லிமிடெட் (Vi Hero Unlimited) நன்மைகளை வழங்குகிறது.
ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவானது ஒரு வருடத்திற்கு இலவசமாக கிடைக்கும். விஐ ஹீரோ அன்லிமிடெட்டின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு மூன்று வகையான நன்மைகள் கிடைக்கும். முதலாவது பிங்கே ஆல் நைட் (Binge All Night) சலுகை. இதன்கீழ் நள்ளிரவு 12 மணி முதல் மதியம் 12 வரையிலாக அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும்.
முன்னதாக இந்த நன்மை காலை 6 மணி வரை மட்டுமே கிடைத்தது. தற்போது மதியம் 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக - வீக்கென்ட் டேட்டா ரோல்ஓவர் (Weekend Data Rollover) நன்மை. இதன்கீழ் பயனர்கள் வார நாட்களில் இருந்து மீதமுள்ள FUP டேட்டாவை வார இறுதியில் பயன்படுத்தலாம். கடைசியாக, டேட்டா டிலைட் (Data Delight) நன்மை உள்ளது. இதன் மூலம் பயனர்கள் ஒவ்வொரு மாதமும் 2ஜிபி அவசரகால டேட்டாவை பெறலாம்.
சென்னை தவிர்த்து வேறு எந்தெந்த மாநிலங்களில் விஐ 5ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது?
டெல்லி
மும்பை
கர்நாடகா
கேரளா
ஆந்திரப் பிரதேசம்
ராஜஸ்தான்
ஹரியானா
கொல்கத்தா
உ.பி கிழக்கு
உ.பி. மேற்கு
மத்தியப் பிரதேசம்
குஜராத்
மேற்கு வங்காளம்
பீகார்
பஞ்சாப்
மகாராஷ்டிரா


Click it and Unblock the Notifications








