Home
News

உஷார்.. PhonePe ஆப்பில் உள்ள இந்த Settings-ஐ ON பண்ணி வைங்க.. இல்லனா பேலன்ஸ் ஜீரோ ஆகலாம்.. எப்படி?

இப்போதெல்லாம் ஏடிஎம் வாசல்களில் கூட்டத்தை பார்க்க முடியவில்லை; பலரும் பணம் எடுக்கும் பழக்கத்தையே மறந்து விட்டனர். அந்த அளவிற்கு யுபிஐ வழியிலான பணப்பரிவர்த்தனை அதிகமாகி விட்டது. கிட்டத்தட்ட எல்லோருடைய ஸ்மார்ட்போன்களிலும் கூகுள் பே (Google Pay) அல்லது போன்பே ஆப் (PhonePe) இருக்கிறது.

இவ்விரு ஆப்களுமே தங்களுடைய பயனர்களின் பணப்பரிவர்த்தனைகள் பாதுகாப்பாக நடப்பதை உறுதி செய்யும் செக்யூரிட்டி செட்டிங்ஸ்-களை கொண்டுள்ளன; குறிப்பாக போன்பே ஆப். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவைகளை நாம் ஆன் செய்து வைக்கிறோமா? சரியாக பயன்படுத்துகிறோமா என்பதே இங்கு எழும் முக்கிய கேள்வி!

PhonePe ஆப்பில் உள்ள இந்த Settings-ஐ ON பண்ணி வைங்க.. இல்லனா?

நீங்களொரு போன்பே ஆப் யூசராக இருந்தால், போன்பே ஆப் வழங்கும் 3 செக்யூரிட்டி செட்டிங்ஸ்-ஐ பயன்படுத்துவதும், ஆன் செய்து வைப்பதும் மிகவும் நல்லது. இல்லை என்றால் உங்களுடைய போன்பே ஆப் அக்கவுண்டில் உள்ள பேலன்ஸ் காணாமல் போவதற்கு, ஜீரோ ஆவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அதென்ன செட்டிங்ஸ்? இதோ விவரங்கள்:

முதல் செட்டிங்ஸ் - 2எப்ஏ செட்டப் (2FA Setup): 2எஃப்ஏ என்பது டூ ஃபேக்டர் ஆத்தென்ட்டிகேஷன் (Two Factor Authentication) என்பதன் சுருக்கமாகும். போன்பே ஆப்பில் இயக்கப்படும் டூ ஃபேக்டர் ஆத்தென்ட்டிகேஷன் ஆனது நீங்கள் செட் செய்யும் பாஸ்வேர்ட்-ஐ தாண்டி கூடுதல் பாதுகாப்பை வழங்கும்.

போன்பே ஆப்பில் டூ ஃபேக்டர் ஆத்தென்ட்டிகேஷனை எனேபிள் செய்வது எப்படி? உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள போன்பே ஆப்பை திறந்து, உங்கள் ப்ரொபைல் போட்டோவை (Profile Photo) கிளிக் செய்யவும். செட்டிங்ஸ்-ஐ (Settings) கிளிக் செய்து பின்னர் செக்யூரிட்டி (Security) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்

அங்கே நீங்கள் டூ ஃபேக்டர் ஆத்தென்ட்டிகேஷன்-ஐ இயக்கலாம். பின்னர் எஸ்எம்எஸ் (SMS) அல்லது இமெயில் (Email) என எதன் மூலம் சரிபார்ப்பு குறியீடுகளை (Verification codes) பெற விரும்புகிறீர்கள் என்பதை தேர்வுசெய்யலாம். இப்படி செய்வதன் மூலம் அங்கீகரிக்கப்படாத அணுகலின் அபாயத்தை கணிசமாக குறைக்க முடியும்.

இரண்டாவது செட்டிங்ஸ் - ஆப் லாக் ஆக்டிவேஷன் (App Lock Activation): டிவைஸ் லாக் உடன் உங்கள் போன்பே ஆப்பை பாதுகாக்கலாம். ஆப் லாக்-ஐ எனேபிள் செய்வதன் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள போன்பே ஆப்பை நீங்கள் மட்டுமே திறக்க முடியும் என்பதை உறுதி செய்ய முடியும்

போன்பே ஆப்பில் ஆப் லாக்கை ஆன் செய்வது எப்படி? உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள போன்பே ஆப்பை திறந்து, மேல் வலது மூலையில் உள்ள உங்கள் ப்ரொபைல் போட்டோவை கிளிக் செய்து செட்டிங்ஸ்-க்கு செல்லவும். பின்னர் ப்ரைவஸி அண்ட் செக்யூரிட்டி (Privacy and Security) என்கிற விருப்பத்தின் கீழ், செக்யூரிட்டி என்பதை கிளிக் செய்யவும்.

இப்போது யூஸ் ஸ்கிரீன் லாக் ஆப்ஷனை ஆன் செய்யவும். இப்படி செய்வதன் மூலம் நீங்கள் ஒவ்வொரு முறையும் போன்பே ஆப்பை திறக்கும் போதெல்லாம், உங்களுடைய ஃபிங்கர் பிரிண்ட், பேஸ் ஐடி அல்லது பின்-ஐ பயன்படுத்த வேண்டி இருக்கும். நிச்சயமாக இது உங்கள் போன்பே ஆப்பிற்கான கூடுதல் பாதுகாப்பை வழங்கும்.

மூன்றாவது செட்டிங்ஸ் - எம்பின் அப்டேட் (MPIN Update): எம்பின் என்பது மொபைல் பெர்சனல் ஐடென்டிபிகேஷன் நம்பர் (Mobile Personal Identification Number) என்பதன் சுருக்கமாகும். எம்பின் (MPIN) ஆனது பாதுகாப்பான பரிவர்த்தனைகளுக்கான திறவுகோலாக இருக்கும். தயவு செய்து உங்கள் பிறந்த தேதி அல்லது மொபைல் எண் போன்ற வெளிப்படையான எண்களை எம்பின் ஆக செட் செய்ய வேண்டாம்.

இது ஹேக்கர்களுக்கு எளிதாக உங்கள் போன்பே ஆப்பை திறக்க வழிவகுக்கலாம். முடிந்தவரை வலுவான எம்பின்-ஐ உருவாக்கவும். இப்படி ஹை-செக்யூரிட்டி தரநிலைகளை உருவாக்கி உங்கள் போன்பே ஆப்பையும், உங்கள் பணத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்கவும். சமீபத்தில் ஜிமெயில் சேவைக்கான எஸ்எம்எஸ் அடிப்படையிலான டூ-ஃபேக்டர் அங்கீகாரத்திற்கான (SMS based two factor authentication) ஆதரவை கூகுள் நிறுவனம் கைவிட உள்ளதாக தகவல் வெளியானதும் இங்கே குறிப்பிடததக்கது

எஸ்எம்எஸ் அடிப்படையிலான டூ-ஃபேக்டர் அங்கீகாரத்திற்கு பதிலாக கூகுள் நிறுவனமானது க்யூஆர் கோட்களை (QR codes) பயன்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது, இப்போது வரையிலாக டூ-ஃபேக்டர் அங்கீகாரத்திற்காக, ஜிமெயில் பயனர்களுக்கு அனுப்பப்படும் எஸ்எம்எஸ் கோட்களுக்கு (SMS Codes) பதிலாக க்யூஆர் கோட் என்று சுருக்கமாக அழைக்கப்படும் க்யூக் ரெஸ்பான்ஸ் கோட்களுக்கான ஆதரவை (Quick Response Codes Support) கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Every UPI Users Must Enable These Settings in PhonePe App To Secure Their Money in Bank Balance
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X