Home
News

31ஆம் தேதி கடைசி.. ரூ.5000 தாமத கட்டணம்.. ITR Filing பண்ணுறதுக்கு முன்ன இதை தெரிஞ்சிக்கோங்க.. இல்லனா சிரமம்!

ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி தாக்கல் செய்யும் காலம் நெருங்கும்போது, வரி செலுத்துவோர் மத்தியில் எப்போது கடைசி தேதி? என்ற குழப்பம் எழுவது இயல்புதான். குறிப்பாக, 2026ஆம் ஆண்டு பட்ஜெட்டில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களின்படி, வருமான வரி தாக்கல் செய்யும் காலக்கெடுவில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஆகவே, வருமான வரி தாக்கல் (ITR Filing) செய்ய ஜூலை 31 ஆம் தேதியை மட்டுமே இறுதி தேதியாக சொல்லிவிட முடியாது. வரி செலுத்துவோரின் வருமான வகைக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டுள்ள சரியான தேதியே கடைசி தேதியாக இருக்கும். இதில் தனிநபர்கள் செலுத்தும் வருமான வரி, தொழில் மூலம் வருமானம் ஈட்டும் நபர்களின் வருமான வரி என்று பல வகைகள் இருக்கின்றன.

31ஆம் தேதி கடைசி.. ரூ.5000 தாமதகட்டணம்.. ITR Filing பண்ணுறதுக்கு முன்?

ஊதியம் பெறும் தனிநபர்கள் (Salaried Individuals) மற்றும் முதலீட்டாளர்களுக்கு ஜூலை 31ஆம் தேதி கடைசி நாளாக இருக்கிறது. இவர்கள் ஐடிஆர்-1 (ITR-1) அல்லது ஐடிஆர்-1 (ITR-2) ஆகிய படிவங்களைப் பயன்படுத்துபவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஜூலை 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். வரி தணிக்கை (Tax Audit) தேவையில்லாத நபர்கள் இந்த தேதியைப் பின்பற்றலாம்.

வணிகம் அல்லது தொழில் மூலம் வருமானம் ஈட்டும் நபர்கள் மற்றும் தணிக்கை (Audit) தேவையில்லாத பிரிவில் வருபவர்களுக்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி கடைசி நாளாக இருக்கிறது. ஐடிஆர்-3 ( ITR-3) அல்லது ஐடிஆர்-4 (ITR-4) படிவங்களை இந்த தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இது நடப்பு ஆண்டில் புதிதாக சேர்க்கப்பட்ட மாற்றமாக இருக்கிறது.

வரித் தணிக்கை (Tax Audit) செய்ய கட்டாயம் உள்ள வணிகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களானது, அக்டோபர் 31ஆம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். மேலும், சர்வதேச பரிவர்த்தனைகள் அல்லது குறிப்பிட்ட உள்நாட்டு பரிவர்த்தனைகளை மேற்கொண்டு, ட்ரான்ஸ்பர் பிரைசிங் (Transfer Pricing) அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியவர்கள் நவம்பர் 30ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த நிர்ணயிக்கப்பட்ட தேதிகளுக்குள் வரி தாக்கல் செய்ய தவறினால், வருமான வரிச் சட்டத்தின் கீழ் அபராதம் செலுத்த வேண்டி வருகிறது. ஆகவே, தாமதக் கட்டணம் (Late Filing Fee) வசூலிக்கப்படும். நீங்கள் தாமதமாக தாக்கல் செய்யும் பட்சத்தில் பிரிவு 234எப் கீழ், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். வருமானம் ரூ.5 லட்சத்திற்கு குறைவாக இருந்தால், இந்த அபராதம் ரூ.1,000 ஆக இருக்கும்.

செலுத்த வேண்டிய வரி பாக்கி இருந்தால், காலக்கெடு முடிந்த நாளிலிருந்து ஒவ்வொரு மாதமும் 1 சதவீத வட்டி வசூலிக்கப்படும். இது பிரிவு 234ஏ கீழ் வருகிறது. வணிக நஷ்டம் அல்லது மூலதன ஆதாய நஷ்டங்களை அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு எடுத்து சென்று (Carry Forward) சரிசெய்ய முடியாது. இருப்பினும், இந்த காலக்கெடு முடிந்த பிறகும் சிலவற்றை செய்து தப்பிக்கலாம்.

நீங்கள் கடைசித் தேதியை தவறவிட்டால், வருமான வரிச் சட்டம் ஆனது தாமதமான வருமான வரி தாக்கல் (Belated Return) என்ற வசதியை வழங்குகிறது. இதன்படி, நீங்கள் டிசம்பர் 31ஆம் தேதி 2026ஆம் ஆண்டு வரையில் அபராதத்துடன் தாக்கல் செய்யலாம். இருப்பினும, கடைசி நிமிடம் வரை தள்ளிப்போடாமல், சரியான ஆவணங்களை சரிபார்த்து முன்கூட்டியே தாக்கல் செய்வது அபராதங்களைத் தவிர்க்க உதவும்.

மேலும், வருமான வரி தாக்கல் செய்தால் மட்டும் போதாது, இ-வெரிஃபை செய்ய வேண்டும. ஆதார் ஓடிபி (Aadhaar OTP) வழியாக இ-வெரிஃபை செய்ய வேண்டும். பான் கார்டு (PAN Card) மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றை கொண்டு வருமான வரி இணையதளத்தில் உள்ளீடு செய்து, ஓடிபி வழியாக வெரிபிகேஷன் செய்தால் போதும், இ-வெரிஃபை செயல்முறை எளிதாக முடிந்துவிடும்.

Best Mobiles in India

English summary
Every Taxpayers Need To Know This Dates Before ITR Filing For AY 2026-27 July 31 How to E-Verify
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X