Home
News

SIM கார்டு புது ரூல்ஸ்.. 24 மணி நேரத்துக்கு பேங்க் அக்கவுண்ட் ஓடிபி வராது.. முதல்ல இதை தெரிஞ்சுக்கோங்க!

புதிய சிம் (SIM) கார்டுக்கு மாறுவது, இ-சிம் (eSIM) மாற்றுவது அல்லது சேதமடைந்த சிம் கார்டை மாற்றுவது போன்ற சமயங்களில், பேங்குகளில் இருந்து வரும் ஓடிபிகள் தடைப்படும், யுபிஐ ஆப்கள் மற்றும் பேங்க் ஆப்களை தற்காலிகமாக பயன்படுத்த முடியாமலும் போகும். இது நெட்வொர்க் கோளாறு அல்ல, மாறாக உங்கள் பணத்தைப் பாதுகாக்க இந்திய அரசு கொண்டு வந்துள்ள ஒரு முக்கியமான பாதுகாப்பு விதியாகும். இதுகுறித்த விரிவான விவரங்கள் இதோ:

டிராய் (TRAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) ஆனது 24 மணி நேர எஸ்எம்எஸ் தடை விதிகளை புதிய சிம் கார்டு வாங்குவது, இ-சிம் (eSIM) மாற்றுவது அல்லது சேதமடைந்த சிம் கார்டை மாற்றுவது உள்ளிட்டவைக்கு கொண்டுவந்துள்ளது.

SIM கார்டு புது ரூல்ஸ்.. 24 மணி நேரத்துக்கு பேங்க் அக்கவுண்ட் ஓடிபி?

இந்த விதிகள் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் உள்ளிட்ட ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் பொருந்தும். இந்த விதிகளின்படி நீங்கள் சேதமடைந்த சிம் கார்டை புதிதாக மாற்றினால் அல்லது இ-சிம் டிரான்ஸ்பர் செய்தால் அடுத்த 24 மணி நேரத்திற்கு உங்கள் நம்பருக்கு வரும் இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங் எஸ்எம்எஸ் சேவை தடை செய்யப்படும்.

இது சிம் ஸ்வாப் (SIM Swap) வழியாக நடக்கும் மோசடிகளை தடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட விதிகளாக இருக்கிறது. அதாவது, ஒரு ஏமாற்றுக்காரர் உங்களுக்கே தெரியாமல் உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒரு போலி டூப்ளிகேட் சிம் கார்டை பெற்று விடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த சிம் கார்டு ஆக்டிவேட் ஆனதும், அவர்களுக்கு உங்களது பேங்க் ஓடிபிகள் கிடைத்துவிடும்.

அதன் மூலம் அவர்கள் உங்கள் பேங்கில் இருக்கும் பணத்தை எடுத்து கொள்ள முடியும். ஆனால், இந்த 24 மணி நேர எஸ்எம்எஸ் தடை விதி இருப்பதால், அந்த மோசடி நபருக்கு உடனடியாக எந்த ஒரு ஓடிபிகளும் போகாது. இதற்கிடையில் உங்கள் சிம் கார்டு வேலை செய்யாததை நீங்கள் கவனித்து, உடனடியாக பேங்க் அக்கவுண்ட்டையும் சிம் கார்டையும் முடக்கி வைத்து கொள்ள முடியும்.

இந்த 24 மணி நேரம் முடிந்தவுடன், உங்களுடைய எஸ்எம்எஸ் சேவைகள் மீண்டும் வழக்கம் போல் செயல்பட தொடங்கிவிடும். இந்த தடையால் பாதிக்கப்படும் சேவைகளை பார்க்கையில் ஓடிபி மட்டுமல்லாமல், கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ ஆப்களையும் தற்காலிகமாக பயன்படுத்த முடியாமல் போகலாம்.

ஏனென்றால், இந்த ஆப்கள் மொபைல் எண்ணை எஸ்எம்எஸ் மூலமாகவே வெரிபிகேஷன் (Verification) செய்து வருகின்றன. ஆகவே, இந்த 24 மணி நேர தடையின் போது உங்களால் யுபிஐ ஆப்களை லாகின் செய்யவோ அல்லது பண பரிவர்த்தனை செய்யவோ முடியாமல் போகலாம். ஆன்லைன் பண பரிவர்த்தனைகளுக்குத் தேவைப்படும் ஓடிபிகள் வராது.

அதேபோல பணம் எடுப்பது/டெபாசிட் செய்வது தொடர்பான எஸ்எம்எஸ் அலர்ட்டுகளும் உங்களுக்கு வராது. இருப்பினும், இமெயில் (Email) மூலமாக தெரிந்து கொள்ளலாம். 24 மணி நேரத்திற்கு பிறகு செய்ய யுபிஐ ஆப்களை ஓப்பன் செய்து மீண்டும் எஸ்எம்எஸ் வழியாக மொபைல் நம்பர் வெரிஃபிகேஷன் செய்தால் போதும், சேவைகள் வழக்கம் போல் கிடைக்க தொடங்கும்.

ஒருவேளை நீங்கள் பழைய எண்ணிற்கு பதிலாக முற்றிலும் புதிய மொபைல் எண்ணை மாற்றியிருந்தால், உங்கள் பேங்குக்கு சென்று புதிய மொபைல் எண்ணை பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்போது, தான் அந்த மொபைல் நம்பருக்கு ஓடிபி மற்றும் யுபிஐ ஆப்களுக்கு எஸ்எம்எஸ் வழியாக செய்யப்படும் வெரிபிகேஷனை செய்து கொள்ள முடியும்.

Best Mobiles in India

English summary
Every SIM Card Holders Need To Know This 24 Hours SMS Block Rule Before SIM Swap eSIM Transfer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X