Home
News

PF பணம் எடுக்க போறீங்களா? முதல்ல EPFO அக்கவுண்ட்ல இந்த 5 Details-ம் சரியா இருக்கானு Check பண்ணுங்க!

கிட்டத்தட்ட பெரும்பாலான சம்பள ஊழியர்களுக்கு, வருங்கால வைப்பு நிதி மேலாண்மை என்பது பெரும்பாலும் ஒரு செயலற்ற செயலாகவே (Passive exercise) உள்ளது. அதாவது ஒவ்வொரு மாதமும் பங்களிப்புகள் (Contributions) கழிக்கப்படுகின்றன, ஒவ்வொரு மாதமும் இருப்பு (Balance) அதிகரிக்கிறது. இது மறுபடியும் மறுபடியும் நடந்துகொண்டே இருக்கும்.

வேலை மாற்றம், பணம் எடுக்க வேண்டிய தேவை அல்லது ஓய்வூதியத்தை திட்டமிட வேண்டியிருந்தால் தவிர, ஒரு ஊழியரின் இபிஎப்ஓ அக்கவுண்ட் ஆனது மிகவும் அரிதாகவே சரிபார்க்கப்படுகிறது. இந்த அணுகுமுறையில் உள்ள சிக்கல் என்னவென்றால், வேலைவாய்ப்பு பதிவுகள், கேஒய்சி (KYC) விவரங்கள், நியமனங்கள் அல்லது கணக்கு இணைப்புகளில் உள்ள பிழைகள் பல ஆண்டுகளாக கவனிக்கப்படாமலேயே இருக்கும்.

PF பணம் எடுக்க போறீங்களா? 5 Details-ம் சரியா இருக்கா?

திடீரென ஒரு ஊழியர் பணப்பரிமாற்றம் அல்லது பணம் எடுப்பதற்கான கோரிக்கையை சமர்ப்பிக்கும்போது மட்டுமே அந்த பிழைகள் வெளிப்படுகின்றன, இது தாமதங்களையும், கூடுதல் ஆவணப் பணிகளையும் தூண்டுகிறது. இதில் சிக்கிக்கொள்ள விரும்பாதவர்கள், பிஎப் பணத்தை எடுக்க திட்டமிடும் ஊழியர்கள், அதை செய்வதற்கு முன்பாக தங்களுடைய இபிஎப்ஒ அக்கவுண்ட்டில் சில விவரங்களை கட்டாயம் சரிபார்க்க வேண்டும். அதென்ன விவரங்கள்:

1. சர்வீஸ் ஹிஸ்டரி (Service history): பலமுறை வேலை மாறிய ஊழியர்கள், இபிஎப்ஒ இணையதளத்தில் உள்ள சர்வீஸ் ஹிஸ்டரி பகுதியை அவ்வப்போது மதிப்பாய்வு செய்ய வேண்டும். இந்த பதிவு, ஒரு உறுப்பினரின் யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பருடன் (UAN) இணைக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களையும், அவர் சேர்ந்த மற்றும் வெளியேறிய தேதிகளுடன் காட்டுகிறது.

சர்வீஸ் ஹிஸ்டரியை சரிபார்ப்பது, விடுபட்ட வேலைவாய்ப்பு பதிவுகள், தவறான தேதிகள் அல்லது யுஏஎன் உடன் சரியாக இணைக்கப்படாத பிஎப் அக்கவுண்ட்களை கண்டறிய உறுப்பினர்களுக்கு உதவும். இத்தகைய முரண்பாடுகள் தீர்க்கப்படாமல் விடப்பட்டால், கணக்கு மாற்றங்கள், பணம் எடுத்தல் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கைகளின் போது சிக்கல்கள் உருவாகக்கூடும்.

2. பிஎப் பேலன்ஸ் உடன் கான்ட்ரிபியூஷனையும் கண்காணிக்கவும்: பெரும்பாலான உறுப்பினர்கள் ஒட்டுமொத்த பிஎப் இருப்பை மட்டுமே சரிபார்க்கிறார்கள், ஆனால் ஒவ்வொரு மாதமும் பங்களிப்புகள் சரியாக செலுத்தப்படுகின்றனவா என்பதை அரிதாகவே சரிபார்க்கிறார்கள். இபிஎப்ஒ பாஸ்புக், மாதாந்திர ஊழியர் மற்றும் எம்பிளாயர் பங்களிப்புகளின் விரிவான பதிவை வழங்குகிறது. அதை அவ்வப்போது மதிப்பாய்வு செய்வது, விடுபட்ட வைப்புகள், பங்களிப்பு இடைவெளிகள் அல்லது நீண்ட காலத்திற்கு கவனிக்கப்படாமல் போகக்கூடிய பிற முரண்பாடுகளை கண்டறிய உதவும்.

3. நாமினி விவரங்களை (nominee details): பல ஊழியர்கள் பணியில் சேரும்போது நாமின செயல்முறையை முடித்துவிட்டு, அதை மீண்டும் பார்ப்பதே இல்லை. இ-நாமினி வசதி மூலம், உறுப்பினர்கள் ஆன்லைனில்நாமினி விவரங்களை சேர்க்கலாம் அல்லது புதுப்பிக்கலாம். திருமணம், குழந்தை பிறப்பு அல்லது குடும்ப சூழ்நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற முக்கிய வாழ்க்கை நிகழ்வுகளுக்கு பிறகு இது மிகவும் முக்கியமானது. காலாவதியான நாமினிகள் எதிர்காலத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கான செட்டில்மென்ட் செயல்முறையை சிக்கலாக்கும்.

4. கேஒய்சி (KYC) தகவல்: பிஎப் தொடர்பான பரிவர்த்தனைகளில் தாமதங்களுக்கான பொதுவான காரணங்களில் கேஒய்சி தொடர்பான சிக்கல்களும் அடங்கும். ஆதார், பான் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் சரியாக இணைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளனவா என்பதை ஊழியர்கள் அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். மூடப்பட்ட வங்கி கணக்கு, தவறான கணக்கு தகவல்கள் அல்லது முழுமையற்ற கேஒய்சி பதிவுகளானது, பணப் பரிமாற்றம் அல்லது பணம் எடுப்பதற்கான கோரிக்கையை தொடங்கும் போது, அதை தவிர்க்கக்கூடிய தடைகளை உருவாக்கலாம்.

5. ப்ரொபைல் பொருத்தமின்மைகள்: இபிஎப்ஓ பதிவுகளுக்கும் அதிகாரப்பூர்வ அடையாள ஆவணங்களுக்கும் இடையிலான வேறுபாடுகள், ஒரு கோரிக்கை தாக்கல் செய்யப்படும்போது மட்டுமே பெரும்பாலும் வெளிப்படுகின்றன. உறுப்பினர்கள் பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினம் போன்ற தனிப்பட்ட தகவல்களை மதிப்பாய்வு செய்து, தேவைப்படும் இடங்களில் திருத்தங்களை செய்யவும். இத்தகைய முரண்பாடுகளை முன்கூட்டியே சரிசெய்வது, பிற்காலத்தில் பிஎப் பலன்களை பெறும்போது ஏற்படும் தாமதங்களை தவிர்க்க உதவும்.

6. வேலை மாறிய பிறகு பிஎப் பரிமாற்றங்கள்: வேலையளிப்பவரை மாற்றுவது, முந்தைய நிறுவனங்களின் பிஎப் நிலுவைகள் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன என்பதற்கு தானாகவே உத்தரவாதம் அளிக்காது. பரிமாற்ற கோரிக்கைகளை சமர்ப்பித்த ஊழியர்கள், இபிஎப்ஒ இணையதளம் மூலம் தங்கள் நிலையைக் கண்காணித்து, முந்தைய வேலையிலிருந்து நிலுவைகள் சரியாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன என்பதை உறுதி செய்ய வேண்டும். பல செயலற்ற பிஎப் கணக்குகளை வைத்திருப்பது, எதிர்கால கணக்கு நிர்வாகத்தை மிகவும் சிக்கலாக்கும்.

Best Mobiles in India

English summary
Every PF Members Should Check These 6 Details in EPFO Account Before PF Withdrawal
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X