பேங்க் அக்கவுண்ட்.. இனி ரூ.50000 லிமிட்.. 2026 ஜனவரி 1 அமல்.. பேங்க் பணப் பரிமாற்றம்.. இதுதான் புது லிமிட்!
பான் (PAN) என்று அழைக்கப்படும் பெர்மனென்ட் அக்கவுண்ட் நம்பர் (Permanent Account Number) வைத்து இருப்பவர்களுக்கான புதிய விதிகள் (New Rules) 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துவிட்டன. இந்த விதிகளால் பான் கார்டு தற்காலிகமாக செயலிழப்பு செய்யப்படலாம்.
இந்த செயலிழப்பால் மொபைல் பேங்கிங், நெட்பேங்கிங் போன்ற பேங்க் பரிவர்த்தனைகள் (Bank Transaction) மட்டுமல்லாமல், கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபுஐ பரிவர்த்தனைகளுக்கும் லிமிட் வந்துவிடுகிறது. அதாவது, பான் கார்டு இல்லாமல் எவ்வளவு தொகையை பரிவர்த்தனை செய்ய முடியுமோ, அதை லிமிட்டில் மட்டுமே பரிவர்த்தனையை செய்ய முடியும்.

சிபிடிடி (CBDT) என்று அழைக்கப்படும் மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes) ஆனது பான் கார்டுடன் ஆதார் நம்பரை இணைப்பதற்கு 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியை கடைசி நாளாக வைத்திருந்தது. இந்த தேதி முடிந்துவிட்டது. இருப்பினும், ரூ.1,000 தாமத கட்டணம் செலுத்தி லிங்க் செய்து கொள்ளலாம். செய்யாதபட்சத்தில் பரிவர்த்தனை லிமிட் இருக்கும்.
எஸ்பிஐ (SBI), எச்டிஎப்சி (HDFC), ஐசிஐசிஐ (ICICI) போன்ற பேங்குகளில் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டுமானால், பான் கார்டு இல்லாமல் ரூ.50,000 மட்டுமே போட முடியும். அதேபோல மொபைல் பேங்கிங், நெட்பேங்கிங் போன்றவற்றில் நெப்ட் (NEFT), ஆர்டிஜிஎஸ் (RTGS) போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு கட்டாயமாக இருக்கிறது. இதிலும் ரூ.50,000 மேல் அனுப்ப பான் கார்டு கட்டாயமாகும்.
பான் கார்டு இல்லாத பேங்க் அக்கவுண்ட்களை கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்களில் இணைத்து பரிவர்த்தனை செய்தால் ரூ.1,00,000 வரையில் பணத்தை அனுப்பி கொள்ளலாம். இந்த லிமிட்டும் 24 மணி நேரத்துக்கு மட்டுமே பொருந்தும். மேலும், பான் கார்டு இல்லாமல், பங்கு சந்தையில் முதலீடு செய்ய முடியாது. ரூ.50,000 மேல் பரிவர்த்தனை தேவைப்படும் இடத்தில் டிஜிட்டலாக பணத்தை மாற்ற முடியாது.
இந்த வரம்புகள் பான் கார்டு இல்லாத பேங்க் கஸ்டமர்கள் மற்றும் பான் கார்டு செயலிழப்பு செய்யப்பட்ட பேங்க் கஸ்டமர்களுக்கு பொருந்தும். ஆகவே, இந்த லிமிட்டில் மட்டுமே பணத்தை பரிமாற்றம் செய்ய முடியும். பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்பட்டுவிட்டால், இந்த லிமிட் பொருந்தாது. உடனடியே பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்துவிடுங்கள். ரூ.1,000 தாமத கட்டணம் இருக்கும்.
ஆன்லைனில் பான் ஆதார் நம்பரை இணைப்பது?
1. வருமான வரி மின்-தாக்கல் (Income tax e-filing) போர்டலை அணுக வேண்டும். ஹோம் பேஜில் இருக்கும் "குவிக் லிங்க்ஸ்" (Quick Links) பிரிவை கீழே ஸ்க்ரோல் செய்யவும். கீழே "லிங்க் ஆதார்" (Link Aadhaar) விருப்பம் இருக்கும். இதை கிளிக் செய்யவும்.
2. உங்களது 10 இலக்க பான் நம்பர் மற்றும் 12 இலக்க ஆதார் நம்பர் கேட்கப்படும். இந்த நம்பர்களை தவறில்லாமல் டைப் செய்து கொடுக்க வேண்டும். சப்மிட் பட்டனை (Submit Button) கிளிக் செயது கொள்ளுங்கள். இப்போது ஓடிபி (OTP) அனுப்பப்படும்.
3. இது உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு மட்டுமே அனுப்பப்படும். இந்த ஓடிபி நம்பரை அங்கிருக்கும் பெட்டியில் உள்ளிடவும். இதை செய்த உடன் உறுதிப்படுத்தல் மெசேஜ் (Confirmation message) காண்பிக்கப்படும்.
4. இந்த பான் கார்டு ஆதார் நம்பர் இணைப்பு செயல்முறை முடிந்தது. 3 முதல் 5 வேலை நாட்களுக்குள் இணைக்கப்பட்டுவிடும். இதை லிங்க் ஆதார் ஸ்டேட்டஸ் வழியாக பார்த்து கொள்ளலாம். ரூ.1,000 தாமத கட்டணம் இருந்தால், அதற்கு பேமெண்ட் பேஜ் திறக்கப்படும். இதையும் செய்து முடியுங்கள்.


Click it and Unblock the Notifications








