ஏப்ரல் 1 முதல் அமல்.. பேங்கில் பணம் டெப்பாசிட் செய்வது உட்பட 4 முக்கிய மாற்றங்கள்.. புது PAN கார்டு ரூல்ஸ்!
பான் கார்டு (PAN Card) என்கிற பெர்மனென்ட் அக்கவுண்ட் நம்பர் (Permanent Account Number) தொடர்பான பல புதிய விதிகள் (New Rules) மற்றும் முக்கிய மாற்றங்கள் (New Changes) ஆனது வருகிற 2026 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளன.
இந்த மாற்றங்கள் - 2026 ஆம் ஆண்டிற்கான, இந்திய அரசாங்கத்தின் புதிய வருமான வரி விதிகள் (Draft Income Tax Rules 2026) விளைவாக வருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதன்கீழ் பான் கார்டு ஆனது - பணம் டெபாசிட் செய்வது மற்றும் பணம் எடுப்பது போன்ற அன்றாட பணபரிவர்தனைகளில் முக்கிய மாற்றத்தை கொண்டு வருகிறது.

கூடவே சொத்து மற்றும் வணிக பரிவர்த்தனைகளிலும் மாற்றத்தை கொண்டு வருகிறது. அதே நேரத்தில் ஆதார் மற்றும் டிஜிட்டல் அங்கீகார அமைப்புகளுடனான அதன் இணைப்பை மேலும் வலுப்படுத்துகிறது. ஒட்டுமொத்தமாக இந்த புதிய விதிகள் அமலுக்கு வந்ததும்பண பரிவர்த்தனைகள், ரியல் எஸ்டேட் ஒப்பந்தங்கள், வங்கி செயல்பாடு மற்றும் அதிக மதிப்புள்ள செலவினங்களை கூர்மையாக கண்காணிக்கும்.
முதல் மற்றும் முக்கிய மாற்றம்: பான் - ஆதார் இணைப்பு கடுமையாகிறது. 2026 ஏப்ரல் 1 முதல், ஆதாருடன் இணைக்கப்படாத பான் செயல்படாமல் போகலாம். ஆக வரி செலுத்துவோர்கள், பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி, பான் கார்ட்டை மீண்டும் செயல்படுத்த, அதை ஆதார் உடன் இணைக்க வேண்டும், இதற்கு 30 நாட்கள் வரை ஆகலாம்.
பான் செயல்படாமல் இருக்கும் காலகட்டத்தில், தனிநபர்கள் சில நடைமுறை சிக்கல்களை சந்திக்க நேரிடும்: அதென்ன சிக்கல்கள்?
- டேக்ஸ் ரீபண்ட் எதுவும் ரிலீஸ் செய்யப்படாது
- நிலுவையில் உள்ள ரீபண்ட்-ஐ பெறுவதில் வட்டி எதுவும் சேராது மற்றும்
- பொருந்தக்கூடிய பேமண்ட்களில் அதிக TDS/TCS அப்ளை செய்யப்படலாம்
இரண்டாவது முக்கிய மாற்றம்: அதிகப்படியான பணப் பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு கட்டாயமாகிறது. புதிய டிராப்ட் இன்கம் டேக்ஸ் ரூல்ஸ் ஆனது எந்தெந்த வகையான வேலைகளுக்கு (எந்தெந்த சூழ்நிலைகளில்) பான் கார்டு மேற்கோள் காட்டப்பட்டு சரிபார்க்கப்பட வேண்டும் என்கிற பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி:
- ஒரு வருடத்தில் ரூ.20 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட டெபாசிட் (ரொக்க வைப்பு) அல்லது வித்ட்ராவலுக்கு (திரும்ப பெறுதல்) பான் கார்டு கட்டாயமாகும்.
- கரண்ட் அல்லது கேஷ் கிரெடிட் அக்கவுண்ட்களை (current or cash credit accounts) திறக்க பான் கார்டு கட்டாயமாகும்
- கிரெடிட் கார்டுகளுக்கு (Credit Card) விண்ணப்பிக்க பான் கார்டு கட்டாயமாகும்
- பங்குகள், பத்திரங்கள் அல்லது வைப்புத்தொகைகளில் பெரிய முதலீடுகள் செய்ய பான் கார்டு கட்டாயமாகும் மற்றும்
- பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான அதிக மதிப்புள்ள பேமண்ட்க்களுக்கும் பான் கார்டு கட்டாயமாகும்.
வங்கிகள் (Banks), தபால் நிலையங்கள் (Post office), வைப்புத்தொகை நிறுவனங்கள் (Depositories), தரகர்கள் (Brokers) மற்றும் நிதி நிறுவனங்கள் (Financial institutions) ஆகியவைகள் மேற்கண்ட பரிவர்த்தனைகளை அல்லது செயல்களை செயல்படுத்துவதற்கு முன்பு பான் என்கிற நிரந்தர கணக்கு எண்ணை அங்கீகரிக்க வேண்டும்.
மூன்றாவது மாற்றம் ஹாஸ்ப்பிட்டாலிட்டி ஸ்பென்டிங்கில் (hospitality spending) வருகிறது: இனி ஹோட்டல்கள், விருந்து அரங்குகள், மாநாட்டு மையங்கள், உணவகங்கள் மற்றும் நிகழ்வு மேலாண்மை நிறுவனங்களுக்கு அதிக அளவில் ரொக்கமாக பணம் செலுத்துவது கடுமையான கண்காணிப்பிற்கு உட்படும். ஒரு வாடிக்கையாளர் ஒரே நேரத்தில் ரூ.₹1 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக செலுத்தினால், பான் நமபரை மேற்கோள் காட்டி பில்லில் பதிவு செய்ய வேண்டும்.
நான்காவது மாற்றம் ரியல் எஸ்டேட் பையர்களுக்கானது: பான் இல்லாத எவரும் ரூ.45 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள சொத்து பரிவர்த்தனையில் ஈடுபடும்போது (அல்லது முத்திரை வரி மதிப்பு ரூ.45 லட்சத்தை தாண்டினால்) ஒப்பந்தத்தை முடிப்பதற்கு முன்பு பான் நம்பருக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஏனென்றால் புதிய விதிகள் - சொத்து பதிவாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் இடைத்தரகர்கள் பரிவர்த்தனை ஆவணங்களில் பான் நம்பர் ஆனது சரியாக குறிப்பிடப்பட்டு சரிபார்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறுகிறது.


Click it and Unblock the Notifications








