வாட்ஸ்ஆப் அதன் சேவைக்கு ஏன் நம்மிடம் காசு வாங்குவதில்லை, தெரியுமா.?
பயனர்களின் மெசேஜ்களை கண்காணிக்கிறது என்ற குற்றசாட்டிற்க்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 200 மில்லியனுக்கும் அதிகமான பயனாளிகளை கொண்டுள்ள மிகப்பிரபலமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமான வாட்ஸ்ஆப், "பாதுகாப்பானது இல்லை" என்று வாட்ஸ்ஆப் நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் வாட்ஸ்ஆப்பின் யூசர் அக்ரிமெண்ட் (பயனர் உடன்படிக்கை) நிபந்தனைகளின் மீது சில கேள்விகளும், பல சந்தேகங்களும் எழுந்தன.
இவ்வண்ணம், பேஸ்புக்கிற்குச் சொந்தமான வாட்ஸ்ஆப் அதன் பயனர் பாதுகாப்பு சார்ந்த சர்ச்சைக்குள் சிக்கியது. தற்போது தன் மீது சுமற்றப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கும், தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கும் வாட்ஸ்ஆப் நிறுவனம் விளக்கமும், பதிலும் அளித்துள்ளது.

ஒற்றுக்கொண்டுள்ளது.!
பயனர்களின் மெசேஜ்களை கண்காணிக்கிறது என்ற குற்றசாட்டிற்க்கு மறுப்பு தெரிவித்துள்ள வாட்ஸ்ஆப் நிறுவனம், பரிமாறப்படும் மெசேஜ்களில் இருந்து "சிறிய அளவிலான" தகவல்கள் மட்டுமே சேகரிகப்படுகிறது என்பதை ஒற்றுக்கொண்டுள்ளது.

எண்ட்- டூ- எண்ட் என்க்ரிப்டட்.?
சிறிய அளவிலான தரவுகள் சேகரிக்கப்பட்டாலும் கூட அனைத்து வாட்ஸ்ஆப் மெசேஜ்களுமே எண்ட்-டூ- எண்ட் என்க்ரிப்டட் தான் (குறியாக்கம் செய்யப்பட்டவைகள் தான்) என்றும் வாட்ஸ்ஆப் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்.?
சமீப காலமாக ஊடங்களில் வெளியான கருத்துகளுக்கு முரணாக, "வாட்ஸ்ஆப் நிறுவனம் உங்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பற்றிய விவரங்களை தொடர்ச்சியாக கண்காணிகிறது என்பது பொய்" என்று ஒரு வாட்ஸ்ஆப் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இன்வைட் லின்க்ஸ்.?
மேலும் "எங்கள் பயனர்களின் தனியுரிமையும், பாதுகாப்பும் எங்களுக்கு மிகமிக முக்கியமான விஷயமாகும். இன்வைட் லின்க்ஸ் (Invite links) கூட க்ரூப் அட்மின்களுக்கான ஒரு ஆப்ஷனல் அம்சம் தான்" என்றும் வாட்ஸ்ஆப் செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

தனிப்பட்ட அடையாளம் மற்றும் டிவைஸ் சார்ந்த விவரங்கள்.!
அதெல்லாம் சரி, வாட்ஸ்ஆப் நம்மிடம் இருந்து எடுத்துக்கொள்ளும் அந்த சிறிய அளவிலான தகவல் என்னது.? அது வேறொன்றும் இல்லை. நமது தனிப்பட்ட அடையாளம் மற்றும் டிவைஸ் சார்ந்த விவரங்கள் போன்ற தகவல்களை பேஸ்புக் உடன், வாட்ஸ்ஆப் பகிர்ந்து கொள்கிறது, இதை வாட்ஸ்ஆப் நிறுவனமே ஒற்றுக்கொண்டுள்ளது.

இலவசமாக கிடைப்பது ஏன்.?
இந்த விவரங்கள் போதாதா.? ஒரு பயனரை கண்காணிப்பதற்கும், அவரைப்பற்றிய விவரங்களை சேகரித்து, அதை விற்று, பணம் பார்ப்பதற்கும் ? அவ்வளவு ஏன்.? - உலக ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு வாட்ஸ்ஆப்பை பயன்படுத்துகின்றனர். இந்த சேவை அனைவருக்கும் முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது.? இது எப்படி சாத்தியம்.? ஏன் இலவசம்.? என்று யோசித்து இருக்கிறீர்களா.?

பணம் சம்பாதிப்பது தான் இந்நிறுவனங்களின் வியாபாரம்.!
பயனர்களின் தகவல்களை சேகரித்து, பேஸ்புக் உட்பட மற்ற நிறுவங்களுடன் இணைந்து, சேகரித்த தரவுகளை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது தான் இந்நிறுவனங்களின் பிரதான வியாபாரம். ஒரு பழமொழியை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் - "இலவச உணவு என்று ஒன்று கிடையாது".


Click it and Unblock the Notifications