பழையபடி ரூ.200 குள்ள ரீசார்ஜ்.. டெய்லி 1.5GB டேட்டா.. 2025 இல் Jio கஸ்டமர்கள் மிஸ் பண்ண கூடாத திட்டம்!
நீங்களொரு ஜியோ (Jio) வாடிக்கையாளர் என்றால்.. உங்களிடம் 3 கேள்விகளை கேட்க விரும்புகிறோம். ஒன்று - இந்த 2025 ஆம் ஆண்டில் மொபைல் ரீசார்ஜ்ஜிற்காக நீங்கள் செய்யும் செலவை கடுமையாக குறைக்க விரும்புகிறீர்களா? இரண்டு - பழையபடி ரூ.200 குள்ளான ரீசார்ஜை தேடுகிறீர்களா? மூன்று - உங்களுக்கு டெய்லி 1.5ஜிபி டேட்டா போதுமானதாக இருக்குமா?
மேற்கண்ட 3 கேள்விகளுக்கும் உங்களுடைய பதில்கள் "ஆம்" என்றால், கவலையை விடுங்கள். நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது அதன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு, மிகவும் மலிவான விலைக்கு, டெய்லி 1.5ஜிபி டேட்டா (Daily 1.5GB Data) உடனான ஒரு திட்டத்தை வழங்குகிறது. அது ஜியோவின் ரூ.199 ப்ரீபெய்ட் பிளான் (Jio Rs.199 Prepaid Plan) ஆகும்.

இது இந்தியாவில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் மிகவும் பிரபலமான டெய்லி டேட்டா திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டமானது ரூ.200 க்கும் குறைவான விலையில் இருப்பதால், நிச்சயமாக, இதன் வேலிடிட்டி காலமும் குறைவாகவே இருக்கும். இருப்பினும் முன்னரே குறிப்பிட்டபடி ரூ.199 திட்டமானது டெய்லி 1.5 ஜிபி டேட்டாவுடன் வருகிறது.
ரிலையன்ஸ் ஜியோ ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேறு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? டெய்லி 1.5ஜிபி அளவிலான டேட்டா நன்மையுடன் சேர்த்து, ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்கள் (Daily 100 Free SMS) ஆகிய முக்கிய நன்மைகளும் கிடைக்கும்.
இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை ஜியோ டிவி (Jio TV), ஜியோ சினிமா (Jio Cinema) மற்றும் ஜியோ க்ளவுட் (Jio Cloud) ஆகிய ஆப்களுக்கான இலவச சந்தாக்கள் கிடைக்கும். ஒருவேளை நீங்கள் ரூ.199 திட்டத்தின் கீழ் கிடைக்கும் டெய்லி 1.5ஜிபி டேட்டாவை தீர்த்து விட்டீர்கள் என்றால், அதன் பிறகான இண்டர்நெட் ஸ்பீட் (Internet Speed) ஆனது 64 கேபிபிஸ் ஆக குறையும்.
டெய்லி 2ஜிபி டேட்டாவை வழங்கும் திட்டங்களுடன் மட்டுமே ஜியோவின் அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆபர் (Unlimited 5G Data Offer) கிடைப்பதால் ரூ.199-ன் கீழ் உங்களுக்கு இலவச 5ஜி டேட்டா (Free 5G Data) கிடைக்காது. ரூ.199 திட்டத்தின் வேலிடிட்டியை பொறுத்தவரை இது 18 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி (18 Days Validity) உடன் வருகிறது.
இந்த இடத்தில் ரூ.198 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ஜியோ திட்டமானது 14 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டியுடன் (14 Days Validity) வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. எப்படி பார்த்தாலும், சராசரி தினசரி செலவை எடுத்து கொண்டால் ரூ.199 திட்டம் உண்மையிலேயே மிகவும் மலிவானதாக இருக்கிறது
ஒருவேளை உங்களுக்கு டெய்லி 1.5ஜிபி டேட்டா தான் வேண்டும். ஆனால் ரூ.199-ன் கீழ் கிடைக்கும் 18 நாட்கள் என்கிற வேலிடிட்டி போதாது என்றால், சற்றே நீண்ட காலம் செல்லுபடியாகும் திட்டத்தை தேடுகிறீர்கள் என்றால், ஜியோ வழங்கும் ரூ.239 திட்டத்தை (Jio Rs.239 Prepaid Plan) கருத்தில் கொள்ளலாம். இந்த திட்டம் 22 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது
ரூ.239 திட்டத்தின் நன்மைகளை பொறுத்தவரை, டெய்லி 1.5ஜிபி அளவிலான டேட்டா நன்மையுடன் சேர்த்து, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகியவைகளையும் வழங்கும். மேலும் இதுவும் ரூ.199-ஐ போலவே டெய்லி 2ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கவில்லை என்பதால், இதன்கீழும் ஜியோவின் அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆபர் கிடைக்காது. இருப்பினும் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ க்ளவுட் ஆகிய ஆப்களுக்கான இலவச சந்தாக்களை வழங்கும்.


Click it and Unblock the Notifications








