அடுத்த 5 வருடத்தில் ஒவ்வொரு இந்தியனிடமும் ஸ்மார்ட்போன் இருக்கும்: அமிதாப்

|

ஸ்மார்ட்போன்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் குறைந்த விலையில் கிடைப்பதால், அம்சங்கள் கொண்ட ஃபோன்களுக்கு பதிலாக, சிறப்புத்தன்மைக் கொண்ட ஃபோன்களையே மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். இந்நிலையில் என்ஐடிஐ ஆயோக் தலைமை நிர்வாகியான அமிதாப் காந்த் கூறுகையில், அடுத்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு இந்தியனிடமும் ஒரு ஸ்மார்ட்போன் இருக்கும் என்றார்.

அடுத்த 5 வருடத்தில் ஒவ்வொரு இந்தியனிடமும் ஸ்மார்ட்போன் இருக்கும்

இந்திய டிஜிட்டல் உச்சி மாநாடு ஏற்பாடு செய்திருந்த இந்திய இணையதளம் மற்றும் மொபைல் கூட்டமைப்பு (ஐஏஎம்ஏஐ) கூட்டத்தில் அவர் பேசுகையில், நம் நாட்டில் ஏறக்குறைய 400 மில்லியன் ஸ்மார்ட்போன் பயனர்கள் இருப்பதாகத் தெரிவித்தார்.

அவரைப் பொறுத்த வரை, இந்தியர்கள் அதிகளவில் மொபைல் டேட்டா பயன்படுத்துவதால், வாடிக்கையாளரின் பழக்கவழக்கங்களை மொபைல்போனும் மாற்றியமைக்கிறது. இது குறித்து அமிதாப் காந்த் கூறுகையில், "பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் டிவிட்டர் ஆகியவை மூலம் மாதம் ஒன்றிற்கு அதிகமாக இணையதளத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையில், இந்தியா முதலிடத்தை வகிக்கிறது. சுமார் 4 மாதங்களில் 170 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ள ஜியோவின் பணி பாராட்டத்தக்கது" என்றார்.

இப்போது நம் நாட்டில் மிகப்பெரிய அளவிலான தொழில்நுட்ப தலையீடு நிகழ்ந்து வருவதாக அவர் கூறினார். அவர் கூறுகையில், "இன்றும், 85 சதவீத சாதனங்கள் இணைக்கப்படாமல் உள்ளன. எனவே, இணையதள காரியங்களுக்கு (ஐஓடி) ஒரு வாய்ப்பு இன்னும் காத்திருக்கிறது. வரும் 2025 ஆண்டிற்குள் இந்த வாய்ப்பின் மதிப்பு $70 பில்லியனாக இருக்கும்" என்றார்.

அவரைப் பொறுத்த வரை, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மட்டுமே $32 பில்லியன் மதிப்பிலான ஒரு வாய்ப்பை உருவாக்க முடியும். கூட்டத்தில் அவர் கூறுகையில், "ஏற்கனவே மேம்பட்ட ரோபோட்டிக்ஸ் மூலம் 25 சதவீத வேலை வாய்ப்புகள் கையாளப்படுகிறது.

ரூ.7000-/க்கு கீழ் சிறந்த பேட்டரி பேக்கப் கொண்ட ஸ்மார்ட்போன்கள்.!ரூ.7000-/க்கு கீழ் சிறந்த பேட்டரி பேக்கப் கொண்ட ஸ்மார்ட்போன்கள்.!

இதுவே அடுத்த வரும் ஆண்டுகளில் 45 சதவீதமாக உயரும். உலகளவில் மாதம் ஒன்றிற்கு அதிகளவில் இணையதளத்தை பயன்படுத்தும் பயனர்களைக் கொண்ட நாடாக இந்தியா, ஏற்கனவே பட்டியலிடப்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் டிஜிட்டல் பணபரிமாற்றம், $100 டிரில்லியனை எட்டும்" என்றார்.

99 சதவீத ஆதார் அட்டையின் பயன்பாடு மூலம் ஜன் தன் யோஜன திட்டத்தின் கீழ் வங்கி கணக்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், நிதி தொழில்நுட்ப துறைக்கு மகத்தான வாய்ப்பு கிடைத்துள்ளது. இது குறித்து காந்த் கூறுகையில், "தொடக்க நிலை தலைமுறை கடந்து போன பிறகு, 'மேக் இன் இன்டியா' மூலம் நிதிநிலைக்கு ஏற்ற சூழலில் ஒரு முன்னுதாரண மாற்றத்திற்கு வித்திடுவதாக அமையும்.

பணமாற்ற பரிமாற்றத்தின் மீது மத்திய அரசு தற்போது கவனம் செலுத்தி வரும் நிலையில், பண பரிமாற்றத்திற்கான குறைந்த செலவை ஏற்படுத்தும் நிதிநிலை தொழில்நுட்பம் அல்லது நிதிநிலை தொழில்நுட்ப பொருட்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்" என்றார்.

இப்போது 4,000 ஸ்டார்ட் அப்கள் இருக்கும் நிலையில், வரும் 2020 ஆம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கை 12,000 ஆக உயரும். நிதிநிலை தொழில் துறையில் ஏறக்குறைய 600 ஸ்டார்ட் அப்கள் இருக்கும் நிலையில், வரும் 2020 ஆம் ஆண்டிற்குள் $14 பில்லியனுக்கான வாய்ப்பாக மாறும்.

இன்று நாட்டின் முக்கிய சவால்களாக, பாதுகாப்பான குடிநீர், உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் மேம்பாலங்களைக் கட்டுதல் ஆகியவை உள்ளன. இவை அனைத்தும் சேர்ந்து பெரிய நிறுவனங்களுக்கு முதலீடு செய்யவும் ஆராயவும் ஒரு தனித்துவமிக்க வாய்ப்பாக அமைகிறது, என்றார் அவர்.

Best Mobiles in India

Read more about:
English summary
With the cost of smartphone acquisition coming down to as low as $1 (Rs 65) per consumer, all Indians would have an access to smartphones in next four to five years.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X