Home
News

புது Passport வேணுமா.. இல்ல, வச்சிருக்கீங்களா.. இனி DigiLocker ஆப் போதும்.. வெரிபிகேஷன் ரெக்கார்ட்டை அணுகலாம்!

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) மற்றும் வெளியுறவு அமைச்சகம் (MEA) ஆகியவை ஒருங்கிணைந்து, பிவிஆர் (PVR) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாஸ்போர்ட் வெரிபிகேஷன் ரெக்கார்ட்டை (Passport Verification Record) டிஜிலாக்கர் (DigiLocker) ஆப் வழியாக அணுக வழிவகை செய்துள்ளது.

ஆகவே, பாஸ்போர்ட் வெரிபிகேஷன் ரெக்கார்ட்டை குடிமக்கள் பாதுகாப்பாக அணுகலாம், சேமிக்கலாம் மற்றும் பகிர்ந்து கொள்ளலாம். இதில் பிசிகல் காப்பிகள் தேவைப்படாது. அவை தேவைப்படும் இடத்தில் டிஜிலாக்கரை பயன்படுத்தி வெரிபிகேஷன் செய்து கொள்ளலாம். கையில் பிசிகல் காப்பிகள் கொண்டு செல்ல வேண்டிய அவசியமும் இருக்காது.

புது Passport வேணுமா.. இல்ல, வச்சிருக்கீங்களா.. DigiLocker ஆப் போதும்!

டிஜிலாக்கர் ஒருகிணைப்பால் என்ன பயன்?
1. எந்த நேரத்திலும் அணுக முடியும். குடிமக்கள் அவர்களது பாஸ்போர்ட் வெரிபிகேஷன் ரெக்கார்ட்டை டிஜிலாக்கர் ஆப்பில் இருக்கும் வழங்கப்பட்ட ஆவணங்கள் (Issued Documents) பிரிவில் இருந்து தடையின்றி அணுகி கொள்ளலாம். இதில் சமர்பிக்கப்பட்ட பிறகு வெப் போர்டல் மூலமும் அணுகி கொள்ளலாம். போலீஸ் வெரிபிகேஷனுக்கு பிறகு மட்டுமே இது கிடைக்கும்.

2. டிராவல், எம்ப்ளாய்மெண்ட் போன்ற வெரிபிகேஷன் தேவைப்படும் செயல்முறைகளில் பேப்பர்லெஸ் சேவை கொடுக்கும்படி இந்த பாஸ்போர்ட் வெரிபிகேஷன் ரெக்கார்ட்டை டிஜிலாக்கர் ஆப் வழியாக பயன்படுத்தி கொள்ளலாம். இது இந்திய குடிமக்கள் மட்டுமல்லாமல், அது தொடர்பான நிறுவனங்களின் நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது.

3. பாதுகாப்பான, சேதப்படுத்த முடியாத மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை டிஜிலாக்கர் கொடுக்கிறது. அதோடு இது அரசாங்கத்தால் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இதில் கிடைக்கும் பாஸ்போர்ட் வெரிபிகேஷன் ரெக்கார்ட்டானது மிகுந்த பாதுகாப்பு மற்றும் தேவைப்படும் இடத்தில் அங்கீகரிக்கப்படும்படியும் இருக்கிறது.

4. எளிதான முறையில் டிஜிட்டல் ஷேரிங் செய்து கொள்ளலாம் மற்றும் வெரிபிகேஷன் செய்து கொள்ளலாம். ஆகவே, டிஜிலாக்கர் மூலமாக மட்டுமே டிஜிட்டல் முறையில் பகிர்ந்து கொள்ள முடியும், இது ஒப்புதல் அடிப்படையிலான அணுகல் மற்றும் வெரிபிகேஷனை செயல்படுத்துகிறது. ஆகவே, குடிமக்களின் ஒப்புதலின் அடிப்படையில் மட்டுமே ஷேர் மற்றும் வெரிபிகேஷன் செய்யப்படும்.

5. பாஸ்போர்ட் மற்றும் டிஜிலாக்கர் ஆகிய 2 சேவைகளும் அரசாங்கத்தால் கொடுக்கப்படுவதால், அது தொடர்பான சேவைகளில் எளிதாக பயன்படுத்த முடியும். ஆகவே, அராசங்கம் வரும்காலத்தில் முற்றிலும் டிஜிட்டல் வெரிபிகேஷன்களை கொண்டுவந்தாலும், இந்த டிஜிலாக்கர் லாக்கர் சேவைக்கு தனி அங்கீகாரம் கொடுக்கப்படும். இதையே டிஜிலாக்கர் செய்கிறது.

டிஜிலாக்கர் என்றால் என்ன? டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், டிஜிலாக்கர் ஆப் சேவை கொடுக்கப்படுகிறது. கிளவுட் அடிப்படையிலான இந்த தளத்தில் இந்திய குடிமக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் ஆவணங்களை டிஜிட்டலாக பயன்படுத்தவும், அணுகவும் இது வழிவகை செய்கிறது. இதில் ஆதார், ஓட்டுநர் உரிமம், கல்வி சான்றிதழ்கள் இருக்கின்றன.

இதுபோக இன்சூரன்ஸ், பான் கார்டு, ஆர்சி புக் போன்ற ஆவணங்களையும் இதில் பத்திரமாக வைத்து கொள்ளலாம். இப்போது பாஸ்போர்ட் வெரிபிகேஷன் ரெக்கார்ட்டை அணுகும்படி மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வழிவகை செய்து கொடுத்துள்ளது. இதேபோல பல்வேறு ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட இருக்கின்றன.

மேலும், பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்து, போலீஸ் வெரிபிகேஷன் முடிந்தால் மட்டுமே பாஸ்போர்ட் வெரிபிகேஷன் ரெக்கார்ட் கிடைக்கும். இதை வழக்கம்போல டிஜிலாக்கரில் பதிவு செய்து வைத்து கொள்ளலாம். அதை தேவைப்படும்போது, டவுன்லோட், ஷேர் மற்றும் அணுகி கொள்ளலாம். இதற்கான கட்டணங்களை அரசாங்கம் ஏதும் விதிக்கவில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Every Indian Passport Holders Access Their Passport Verification Record PVR Digitally on DigiLocker
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X