Home
News

LPG கேஸ் புக்கிங் படாதபாடு.. ஆகஸ்டு 23 கதை முடிந்தது.. ஆதார் நம்பர், மொபைல் நம்பர்.. முதல்ல இதை செஞ்சிடுங்க!

இண்டேன் (Indane), பாரத் கேஸ் (Bharat Gas) மற்றும் எச்பி (HP Gas) ஆகியவற்றின் கேஸ் கனெக்சன் வைத்து இருக்கும் ஒட்டுமொத்த எல்பிஜி (LPG) நுகர்வோர்களும் ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்குள் வாடிக்கையாளர் சரிபார்ப்பு என்கிற ஈ-கேஒய்சி (e-KYC) செயல்முறையை முடித்திருக்க வேண்டும்.

இந்த சரிபார்ப்பு செயல்முறையானது, கேஸ் புக்கிங் மற்றும் அரசு வழங்கும் மானிய தொகை ஆகியவற்றுடன் நேரடியாக தொடர்புடையது என்பதால், நுகர்வோர்கள் செய்ய தவறினால், சிலிண்டர் மற்றும் மானியம் பெறுவதில் தாமதம் ஏற்படலாம். எல்பிஜி இணைப்புக்கான ஈ-கேஒய்சி செயல்முறையை முடிப்பதற்கான கடைசி நாள் 2026 ஆகஸ்ட் 23 ஆம் தேதியாக இருக்கிறது.

LPG கேஸ் புக்கிங் படாதபாடு.. ஆகஸ்டு 23 கதை முடிந்தது.. ஆதார் நம்பர்!

ஆகவே, வீட்டிலிருந்தபடியே ஸ்மார்ட்போன் வழியாக ஈ-கேஒய்சி செயல்முறையை செய்து முடிக்கவும் முடியும். இதற்கு முக்கிய ஆவணங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஆப்கள் இருக்க வேண்டும்.
ஆதார் கார்டு மற்றும் ஆதாருடன் லிங்க் செய்யப்பட்ட மொபைல் நம்பர், 16 இலக்க எல்பிஜி ஐடி (LPG ID) அல்லது நுகர்வோர் எண் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்.

1. இண்டேன் (Indane) நுகர்வோர்கள் செய்ய வேண்டியது:
* உங்கள் மொபைலில் IndianOil ONE ஆப்பை டவுன்லோட் செய்து ஓப்பன் செய்து கொள்ளுங்கள்.
* பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரை பயன்படுத்தி லாகின் அல்லது ரிஜிஸ்டர் (Login / Register) செய்து கொள்ளலாம்.
* தேவைப்பட்டால் 16 இலக்க எல்பிஜி ஐடியை பயன்படுத்தி அக்கவுண்ட்டை லிங்க் செய்து கொள்ளலாம்.
* ஆப்பில் உள்ள e-KYC / Aadhaar Authentication என்ற விருப்பத்தை தேர்வுசெய்யவும்.
* ஆதார் சரிபார்ப்பிற்கான ஒப்புதலை வழங்கிய பின், கேட்கப்படும் போது Aadhaar FaceRD (ஆதார் போஸ்ஆர்டி) ஆப் வழியாக பேஸ் ஸ்கேன் (Face Scan) செய்யவும்.
* கேட்கப்படும் விவரங்களை சமர்ப்பித்ததும், e-KYC செயல்முறையை முடிந்ததற்கான உறுதிப்படுத்தல் டிஸ்பிளேவில் தோன்றும்.

2. பாரத் கேஸ் (Bharat Gas) நுகர்வோர்கள் செய்ய வேண்டியது:
* Hello BPCL ஆப்பை டவுன்லோட் செய்து ஓப்பன் செய்து கொள்ளவும்.
* எல்பிஜியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரை கொடுத்து, ஓடிபி (OTP) வழியாக லாகின் செய்யலாம்.
* உங்கள் Bharat Gas இணைப்பை தேர்வு செய்து, e-KYC / Aadhaar Authentication பகுதிக்கு செல்லவும்.
* விவரங்கள் மற்றும் விதிகளுக்கு ஒப்புதல் அளித்து, பேஸ் ஆதன்டிகேஷன் வழிகாட்டுதல்களை பின்பற்றி ஸ்கேன் செய்யவும்.
* சரிபார்ப்பு முடிந்ததும் e-KYC வெற்றிகரமாக பூர்த்தியான விவரங்கள் டிஸ்பிளேவில் காட்டப்படும்.

3. எச்பி கேஸ் (HP Gas) நுகர்வோர்கள் செய்ய வேண்டியது:
* HP Pay ஆப்பை டவுன்லோட் செய்து, லாகின் செய்ய வேண்டும்.
* பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் மூலம் லாகின் செய்யவும்.
* HP Gas இணைப்பை தேர்ந்தெடுத்து, e-KYC விருப்பத்தை கிளிக் செய்யவும்.
* ஆதார் அங்கீகாரத்திற்கு ஒப்புதல் அளித்து, Aadhaar FaceRD ஆப் வழியாக பேஸ் ஸ்கேன் செய்து சமர்ப்பிக்கவும்.
* சரிபார்ப்பு நிறைவடைந்ததற்கான தகவலை ஆப்பில் உறுதி செய்து கொள்ளவும்.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஈ-கேஒய்சி செய்ய தவறினால், எல்பிஜி கேஸ் சிலிண்டர் மற்றும் மானியம் பெறுவதில் தாமதம் ஏற்படும். சிலருக்கு ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது. ஸ்மார்ட்போனில் செய்ய சிரமமாக இருந்தால், அருகில் இருக்கும் சம்பந்தப்பட்ட கேஸ் ஏஜென்சிக்கு சென்றும் முடிக்கலாம். ஆதார் கார்டு (Aadhaar Card), கேஸ் இணைப்பு நம்பர் (Gas Connection Number) மொபைல் நம்பர் (Mobile Number) உள்ளிட்டவற்றை எடுத்து செல்லவும்.

Best Mobiles in India

English summary
Every Gas Cylinder Customers Should Know This Before August 23 How To Complete LPG e-KYC on Mobile
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X