FASTag யூசர்களே.. இதை தெரிஞ்சு வச்சிக்கிட்டா.. ரூ.100 - ரூ.250 வரை பணம் திரும்ப கிடைக்கும்.. அதுவும் 3 நாளில்!
ஒரு புதிய ஃபாஸ்டாக் (FASTag) அக்கவுண்ட்டை உருவாக்குவது மிகவும் எளிமையான வேலையாகும். இத முழுவதுமாக ஆன்லைனிலேயே செய்ய முடியும். இருந்தாலும் கூட ஒரு அக்கவுண்ட்டை க்ளோஸ் செய்யும் போதும், செலுத்தப்பட்ட பாதுகாப்பு வைப்புத்தொகையை திரும்ப பெறும்போதும் பயனர்கள் சில சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
ஒவ்வொரு முறையும் நீங்கள் புதிய ஃபாஸ்டாக் கணக்கை உருவாக்கும் போது, வங்கிகள் மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் உட்பட ஃபாஸ்டாக் வழங்குநர்கள், வழங்கல் கட்டணத்துடன் சேர்த்து பாதுகாப்பு வைப்புத் தொகையையும் வசூலிக்கிறார்கள். இந்த வைப்புத்தொகையானது, டோல் பரிவர்த்தனைகளின் போது லோ பேலன்ஸ் போன்ற நிலுவை தொகைகளுக்கு உத்தரவாதமாக செயல்படுகிறது.

எவ்வாறாயினும், உங்கள் ஃபாஸ்டாக் கணக்கை மூடினால், நீங்கள் செலுத்திய வைப்புத்தொகையானது முழுமையாக திருப்பி கொடுக்கப்படும். உங்களுடைய வாகன வகையை பொறுத்து, இந்த வைப்புத்ததொகை மாறுபடும்; பொதுவாக இது ரூ.100 முதல் ரூ.250 க்குள் இருக்கும். ஒருவேளை உங்களுக்கு இதை எப்படி திரும்பப்பெறுவது என்று தெரியாவிட்டால்.. உங்கள் ஃபாஸ்டாக் கணக்கை எவ்வாறு செயலிழக்க செய்வது? மற்றும் பாதுகாப்பு வைப்புத் தொகையைத் திரும்பப் பெறுவது எப்படி? என்பதற்கான வழிமுறைகள் இதோ:
ஃபாஸ்டாக் அக்கவுண்ட்டை டிஆக்டிவேட் செய்வது எப்படி? உங்கள் ஃபாஸ்டாக் வழங்குநரின் வாடிக்கையாளர் பராமரிப்பு சேவையை தொடர்புகொள்ளவும். இதற்கான எண்கள் பொதுவாக வழங்குநரின் இணையதளம், மொபைல் ஆப்ஸ் அல்லது பிஸிக்கல் ஸ்டேட்மென்ட்களில் எளிதாக கிடைக்கும். அதைவைத்து உங்கள் ஃபாஸ்டாக் அக்கவுண்ட்டை செயலிழக்க செய்வதற்கான உங்கள் நோக்கத்தை வாடிக்கையாளர் பராமரிப்பை சேர்ந்த பிரதிநிதிக்கு தெரிவிக்கவும்.

அதற்கான, குறிப்பிட்ட செயல்முறையின் மூலம் அவர்கள் உங்களுக்கு வழிகாட்டுவார்கள். மேலும் உங்கள் பாதுகாப்பு வைப்புத்தொகையை பெறுவதற்கு முன், உங்கள் ஃபாஸ்டாக் கணக்கில் பேலன்ஸ் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும். இதில் செலுத்தப்படாத கட்டணங்கள், நிர்வாக கட்டணங்கள் அல்லது அபராதங்கள் ஆகியவைகளும் அடங்கும். ஃபாஸ்டாக் வழங்குநவரின் ஆன்லைன் போர்ட்டல், மொபைல் ஆப்ஸ் அல்லது வாடிக்கையாளர் சேவையை தொடர்புகொள்வதன் மூலம் பேலன்ஸ் தொகையையும் நீங்கள் கிளியர் செய்யலாம்.
செக்யூரிட்டி டெபாசிட் பணத்தை திரும்ப கோருவது எப்படி? உங்கள் ஃபாஸ்டாக் கணக்கு செயலிழக்கப்பட்டதும் மற்றும் நிலுவை தொகைகள் நீக்கப்பட்டதும், பாதுகாப்பு வைப்பு தொகையை திரும்பப்பெறுவதற்கான கோரிக்கையை வைக்க வேண்டும். ஃபாஸ்டாக் வழங்குநரை பொறுத்து இந்த செயல்முறை மாறுபடலாம். சில வழங்குநர்கள் கணக்கை மூடும்போது தானாகவே பணத்தை திரும்ப தருவார்கள்; மற்றவர்களுக்கு தனியான கோரிக்கை தேவைப்படலாம்.

பாதுகாப்பு வைப்பு தொகையை திரும்ப தரும் வங்கியில் உங்களிடம் கணக்கு இருந்தால், அந்த பணம் ஃபாஸ்டாக் அக்கவுண்ட் உடன் இணைக்கப்பட்ட உங்கள் வங்கி கணக்கிற்கே நேரடியாக வரவு வைக்கப்படும். ஒருவேளை நான்-பேங்க் ஃபாஸ்டாக் வழங்நர்களாக இருந்தால் அல்லது வங்கியில் கணக்கு இல்லாத தனிநபர்களுக்கு பணத்தை திருப்பித்தர வேண்டுமென்றால், பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு பணம் அனுப்பப்படலாம்.
ஃபாஸ்டாக் அக்கவுண்ட்டிற்கான பாதுகாப்பு வைப்பு தொகையானது திரும்பி வந்துசேர சிறிது நேரம் எடுக்கலாம், உங்களுடைய ஃபாஸ்டாக் வழங்குநரை பொறுத்து 3 முதல் 10 வேலை நாட்கள் வரை ஆகலாம். இதற்கிடையில், உங்கள் ஃபாஸ்டாக் தொலைந்துவிட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ, உடனடியாக வழங்குநருக்கு தெரிவிக்கவும். ஏனென்றால் இதுபோன்ற தருணங்களை கையாள்வதற்கான குறிப்பிட்ட நடைமுறைகள் அவர்களிடம் இருக்கலாம், இது பாதுகாப்பு வைப்பு திரும்பப்பெறும் செயல்முறையை பாதிக்கலாம்.
கடைசியாக ஃபாஸ்டாக்-ஐ வாங்க விரும்புபவர்கள், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ள அங்கீகரிக்கப்பட்ட 32 வங்கிகளில் ஏதேனும் ஒன்றில் இருந்து மட்டுமே வாங்கவும் அந்த பட்டியலில் ஸ்டேட் பேங்க் ஆஃப் வங்கி (State Bank of India), ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank), ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி (Airtel Payments Bank), எச்டிஎப்சி வங்கி (HDFC Bank), ஃபினோ பேமெண்ட்ஸ் வங்கி (Fino Payments Bank) மற்றும் ஐடிபிஐ வங்கி (IDBI Bank) பல வங்கிகள் அடக்கம்.


Click it and Unblock the Notifications








