வச்சாங்க பாரு டிவிஸ்டு.. UPI வழியாக PF பணம்.. பேங்க் அக்கவுண்ட்டில் இதை செய்யலனா பணம் எடுக்க முடியாது!
பல ஆண்டுகளாக, பிஎப் (PF) பணம் எடுப்பது என்பது பெரும்பாலும் ஆவண வேலைகள், காத்திருப்பு காலங்கள் மற்றும் பல சரிபார்ப்பு சோதனைகளை உள்ளடக்கியதாக இருந்து வந்தது. அது விரைவில் மாற உள்ளது. ஐபிஎப்ஓ (EPFO) என்கிற ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது யுபிஐ (UPI) அடிப்படையிலான பிஎப் பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
இந்த வசதியின் மூலம், ஒரு யுபிஐ பேமெண்ட் ஆப் மூலம் பணம் அனுப்புவது போல, வருங்கால வைப்பு நிதி சேமிப்பை அணுகுவதை கிட்டத்தட்ட எளிதாக்கக்கூடும். அரசாங்கம் ஏற்கனவே யுபிஐ பேமெண்ட் கேட்வேயின் சோதனையை முடித்துவிட்டது, மேலும் இந்த வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லட்சக்கணக்கான சம்பள ஊழியர்களுக்கு, இது வெறும் தொழில்நுட்ப மேம்பாட்டை விட மேலானதாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். அவசர காலங்களில் அல்லது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளின் போது, அவர்கள் கடினமாக உழைத்து சேமித்த ஓய்வூதிய சேமிப்பை எவ்வளவு விரைவாக அணுக முடியும் என்பதை இது முற்றிலுமாக, அடிப்படையில் இருந்தே மாற்ற உள்ளது.
ஐந்து முக்கிய விவரங்களை பிஎப் மெம்பர்கள் சரிபார்க்க வேண்டும்: இந்த உடனடி பிஎப் பணம் எடுக்கும் வசதியை கொண்டாடுவதற்கு முன்பு, அனைத்து ஊழியர்களுக்கும் ஐந்து முக்கிய விவரங்களை சரிபார்க்க வேண்டும். விபாவங்கள் அனுகுலகரா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆன சித்தார்த் மௌரியாவின் கூற்றுப்படி, இந்த புதிய அமைப்பு தற்போதுள்ள சிக்கல்களை தானாகவே தீர்த்துவிடும் என்று ஊழியர்கள் கருதக்கூடாது என்கிறார்.
"ஐபிஎப்ஓ ஆனது யுபிஐ வழியாக பிஎப் பணம் எடுக்கும் வசதியை செயல்படுத்த தயாராகி வருவதால், ஊழியர்கள் தங்கள் தரப்பில் உள்ள அனைத்தும் முழுமையாக புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் தாமதங்களோ அல்லது பரிவர்த்தனை சிக்கல்களோ ஏற்படாது. இன்னும் சொல்லப்போனால் இதை இருமுறை சரிபார்ப்பது அவசியம். ஏனெனில், சிறிய இடைவெளிகள் கூட பரிவர்த்தனை ஓட்டத்தை குழப்பிவிடும். ஐந்து முக்கிய விவரங்களை பிஎப் மெம்பர்கள் சரிபார்க்க வேண்டும்" என்றும் மௌரியா கூறியுள்ளார். அதென்ன விவரங்கள்?
1. யுஏஎன் நம்பர் (UAN Number): ஊழியர்கள் முதலில் சரிபார்க்க வேண்டியது, தங்களது யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பரை (UAN) அணுக முடிகிறதா என்பதுதான். பலருக்கு அவசரமாக பணம் தேவைப்படும் போதுதான், அவர்கள் தங்களது கடவுச்சொல்லை மறந்துவிட்டதையோ அல்லது மொபைல் எண்ணை மாற்றியதையோ உணர்கிறார்கள். முன்னரே லாக் -இன் செய்து, பிஎப் கணக்குக்கான அணுகலை சரிபார்த்து, தேவைப்பட்டால் தொடர்பு விவரங்களை புதுப்பிக்க இதுவே சிறந்த நேரமாகும்.
2. ஆதார், பான் மற்றும் பெயர் (Aadhaar, PAN and Name): இது ஆச்சரியமாக தோன்றலாம், ஆனால் எழுத்துப்பிழை போன்ற ஒரு சிறிய விஷயம்கூட யுபிஐ வழியிலான பிஎஃப் (PF) கோரிக்கையை தாமதப்படுத்தக்கூடும். பெயர்கள், பிறந்த தேதிகள் மற்றும் தனிப்பட்ட விவரங்கள் ஆதார், பான், வேலையளிப்பவர் பதிவுகள் மற்றும் இபிஎஃப்ஓ பதிவுகளுடன் பொருந்த வேண்டும். சிறிய முரண்பாடுகள் கூட சரிபார்ப்பு சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.
3. பேங்க் அக்கவுண்ட் (Bank Account): புதிய பிஎப் பணம் எடுக்கும் முறையின் முகமாக யுபிஐ இருக்கலாம், ஆனால் உங்கள் இபிஎப்ஓ அக்கவுண்ட் உடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கே அதன் முதுகெலும்பாகஸ் செயல்படும். எனவே பிஎப் மெம்பர்கள், அக்கவுண்ட் நம்பர், ஐஎப்எஸ்சி கோட் மற்றும் அக்கவுண்ட் வைத்திருப்பவரின் விவரங்கள் துல்லியமாகவும், புதுப்பித்த நிலையிலும் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.
பயன்பாட்டில் இல்லாத கணக்கு (Unused Account ) அல்லது இனி பயன்படுத்தப்படாத பழைய சம்பள கணக்கு (Old salary account), தவிர்க்கக்கூடிய சிக்கல்களை உருவாக்கக்கூடும். வங்கி விவரங்கள் எவ்வளவு சுமுகமாக இருக்கின்றனவோ, அவ்வளவு சுமுகமாக யுபிஐ வழியிலான பிஎப் பணம் எடுக்கும் செயல்முறையும் இருக்கும்.
4. மொபைல் நம்பர் மற்றும் யுபிஐ ஐடி (Mobile Number and UPI ID): இன்றைய நிதிச் சூழல் ஆனது டிஜிட்டல் சரிபார்ப்பை பெரிதும் சார்ந்துள்ளது, மேலும் இபிஎப்ஓ-வின் யுபிஐ அடிப்படையிலான பணம் எடுக்கும் வசதியும் இதற்கு விதிவிலக்காக இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்மா மேனேஜ்மென்ட் குளோபல் கன்சல்டிங் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமை தொலைநோக்கு அதிகாரியுமான பிரதீக் வைத்யா, வரவிருக்கும் இந்த திட்டத்தை ஊழியர்கள் தங்கள் பிஎப் பதிவுகளை சரிசெய்வதற்கான ஒரு வாய்ப்பாகக் கருத வேண்டும் என்று நம்புகிறார்.
உறுப்பினர்கள் தங்கள் ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண், யுஏஎன்-இல் பதிவுசெய்யப்பட்ட எண் மற்றும் யுபிஐ உடன் இணைக்கப்பட்ட எண் ஆகியவை செயல்பாட்டில் இருப்பதையும், புதுப்பிக்கப்பட்டிருப்பதையும் உறுதி செய்யுமாறு அவர் அறிவுறுத்துகிறார். அவர்கள் விரும்பும் யுபிஐ ஐடியும் சரியான வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
5. சர்வீஸ் ஹிஸ்டரி மற்றும் நாமினேஷன் விவரங்கள் (Service History and Nomination Details): பெரும்பாலும் கவனிக்கப்படாத மற்றொரு பகுதி - சர்வீஸ் ஹிஸ்டரி மற்றும் நாமினேஷன் தகவல்கள் ஆகும். வேலை மாறிய ஊழியர்கள், தங்களின் முந்தைய பிஎப் கணக்குகள் சரியாக மாற்றப்பட்டுள்ளனவா என்பதையும், தங்களின் பணிக்கால வரலாறு முழுமையாக உள்ளதா என்பதையும் உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். அதேபோல், இ-நாமினேஷன் விவரங்களை புதுப்பிப்பது, பணம் எடுப்பதற்கு மட்டுமல்லாமல், எதிர்கால ஓய்வூதியம், காப்பீடு மற்றும் குடும்பம் தொடர்பான கோரிக்கைகளுக்கும் முக்கியமானது.


Click it and Unblock the Notifications