Google Pay, PhonePe கதை முடிந்தது.. மார்ச் 2026 முதல் புது ரூல்ஸ்.. வங்கி கணக்கு, UPI க்கு முக்கிய மாற்றம்!
இபிஎப்ஓ (EPFO) என்கிற ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees Provident Fund Organisation) ஆனது மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களின் கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதில் முக்கிய விதிகளை அமலுக்கு கொண்டுவர உள்ளது. 2026 மார்ச் மாதத்துக்கு முன்னதாகவே அமலுக்கு வர உள்ளது.
மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதில் இருக்கும் பணத்தை முன்கூட்டியே ஊழியர்கள் பெற்று கொள்ளலாம். இபிஎப்ஓ போர்டல் வழியாக கிளைம் செயல்முறையை செய்தால் போதும், சம்பளம் வாங்கும் வங்கி கணக்குக்கு பணம் மாற்றப்படும். இந்த செயல்முறை 2026 மார்ச் மாதத்துக்கு முன்னதாக மாற்றப்பட இருக்கிறது.

ஏடிஎம் (ATM) மற்றும் யுபிஐ ஆப்கள் வழியாகவும் பணத்தை கிளைம் செய்து கொள்ளலாம். ஆனால், கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ (UPI) ஆப்களில் பணத்தை கிளைம் எடுப்பதற்கு தாமதம் ஏற்படலாம். என்பிசிஐ (NPCI) என்கிற இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் (National Payments Corporation of India) கீழ் செயல்படும் பீம் (BHIM) ஆப்புக்கு கிளைம் செயல்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
அதாவது, யுபிஐ வழியாக இபிஎப்ஓ கிளைம் செய்யும்போது, பீம் ஆப் இருக்க வேண்டும். இந்த பீம் ஆப், இபிஎப்ஓ மற்றும் என்பிசிஐ ஆகியவை இந்திய அரசின் கீழ் செயல்படுவதால் தனியாருக்கு சொந்தமான யுபிஐ ஆப்களுக்கு கிளைம் செயல்முறை கிடைக்கவில்லை. இருப்பினும், பீம் ஆப்பில் இந்த சேவை தொடங்கப்பட்ட பிறகு படிப்படியாக மற்ற ஆப்களுக்கும் கிடைக்கலாம்.
யுபிஐ வழியான இபிஎப்ஓ கிளைம் எவ்வாறு நடக்கும்?
1. இபிஎப்ஓ போர்ட்டலில் சுகாதாரம் (Health), கல்வி (Education), சிறப்பு சூழ்நிலைகள் (Special Circumstances) உள்ளிட்ட கிளைம் விருப்பங்கள் கிடைப்பது போலவே, பீம் ஆப் வழியாகவும் இந்த விருப்பங்கள் கிடைக்கும். இதை ஊழியர்கள் தேர்ந்தெடுத்து கிளைம் செயல்முறையை தொடங்கி கொள்ளலாம்.
2. பீம் ஆப் வழியாக கிளைம் கோரிக்கை வைத்த பிறகு இபிஎப்ஓ வழியாக சரிபார்ப்பு செய்யப்பட உள்ளது. இதற்காக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் மற்றும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு இணைந்து செயல்பட உள்ளது. ஆகவே, விரைவாக கிளைம்கள் சரிபார்ப்பு செய்து முடிக்கப்பட உள்ளது.
3. ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஆனது எஸ்பிஐ (SBI) வங்கியில் பராமரிப்பு செய்யப்படுகிறது. இதுவும் இந்திய அரசின் கீழ் செயல்படும் வங்கியாக இருப்பதால், சரிபார்ப்பு வெற்றிகரமாக முடிந்தால், உடனடியாக பணம் சம்பந்தப்பட்ட வங்கு கணக்குக்கு அனுப்பி வைக்கப்படும்.
4. பீம் ஆப்பில் இருந்து கிளைம் கோரிக்கை வைப்பதால், பிரைமரி யுபிஐ ஐடி ஆனது சம்பந்தப்பட்ட வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த கணக்குக்கு நேரடியாக ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணம் எடுத்து கொடுக்கப்படும். இந்த புதிய நடைமுறை மார்ச் மாதத்துக்கு முன்னதாக அமலுக்கு வர உள்ளது.
ஆகவே, படிப்படியாக கொண்டுவரப்பட்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து முழுமையாக வருங்கால வைப்பு நிதி சந்தாதார்களுக்கு கிடைக்கும். யுபிஐ வழியாக கிளைம் கொடுக்கப்படுவதால், பேலன்ஸ் சரிபார்ப்பு உள்ளிட்டவையும் பீம் ஆப்பில் பார்த்து கொள்ளும் சேவையும் கிடைக்க வாய்ப்புள்ளது. பீம் ஆப்பை தொடர்ந்து, கூகுள்பே, போன்பே போன்ற ஆப்களுக்கும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








