BSNL எமெர்ஜென்சி ரீசார்ஜ்.. ஒவ்வொரு கஸ்டமரும் இந்த 3 திட்டங்களையும் கட்டாயம் தெரிஞ்சுக்கணும்!
நீங்களொரு பிஎஸ்என்எல் (BSNL) வாடிக்கையாளராக இருந்தால், இந்நிறுவனத்தின் ப்ரீபெய்ட் (Prepaid) தொகுப்பின் கீழ் கிடைக்கும் 3 "எமெர்ஜென்சி" திட்டங்களை பற்றி தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. ஏனென்றால் "ஆத்திர அவசரங்களிலும்", அக்கவுட்ண்டில் அதிக பணம் இல்லாத சூழ்நிலைகளிலும் இந்த 3 திட்டங்களும் நிச்சயமாக உங்களுக்கு கைகொடுக்கும்!
நாம் இங்கே பேசப்போவது ரூ.100 க்குள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் மிகவும் பிரபலமான 3 பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்களை (Best BSNL Plans Under Rs 100) பற்றித்தான். சுவாரசியமாக இந்த 3 திட்டங்களுமே 20 நாட்களுக்குள் என்கிற வேலிடிட்டியுடன் வருகின்றன. இப்போது புரிகிறதா நங்கள் ஏன் இந்த திட்டங்களை எமெர்ஜென்சி ரீசார்ஜ் என்று குறிப்பிட்டோம் என்று!

அடுத்த ஒரு சில வாரங்களுக்கு வேலிடிட்டி இருந்தால் போதும் அதன் பின்னர் நீண்ட வேலிடிட்டியை (Long Validity) வழங்கும் ஒரு திட்டத்தை ரீசார்ஜ் செய்துவிடுவேன் என்கிற எண்ணம் கொண்ட வாடிக்கையாளர்களும், மொபைல் ரீசார்ஜிற்காக அதிக பட்ஜெட்டை ஒதுக்காத பிஎஸ்என்எல் பயனர்களும் - இந்த 3 திட்டங்களாலும் அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள்!
அதென்ன திட்டங்கள்? அவைகள் ரூ.87, ரூ.97 மற்றும் 99 ஸ்பெஷல் டேரிஃப் வவுச்சர்கள் (STV - Special Tariff Vouchers) ஆகும். இவைகளை வெறுமனே வேலிடிட்டியை மட்டும் வழங்கும் ரீசார்ஜ்கள் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். இந்த மூன்றுமே விலைக்கு ஏற்ற குறுகிய கால வேலிடிட்டியின் (Short Term Validity) கீழ் டேட்டா, வாய்ஸ் கால் போன்ற நன்மைகளை வழங்கும் "வழக்கமான" ப்ரீபெய்ட் திட்டங்களாகும்.
பிஎஸ்என்எல் ரூ.87 ரீசார்ஜின் நன்மைகள்: இந்த திட்டம் மொத்தம் 14 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. மேலும் இது தினமும் 1ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களையும் வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் எஸ்எம்எஸ் நன்மைகள் எதுவும் இல்லை. கடைசியாக இது ஒன்97 (One97) கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட்டின் கேமிங் நன்மைகளையும் வழங்கும்.
பிஎஸ்என்எல் ரூ.97 ரீசார்ஜின் நன்மைகள்: இந்த திட்டம் மொத்தம் 15 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை வழங்கும். உடன் லோக்துன் கன்டென்ட் (Lokdhun content) உடன் சேர்த்து தினமும் 2 ஜிபி அளவிலான டேட்டாவையும் வழங்குகிறது. ரூ.87-ஐ போலவே இந்த திட்டத்திலும் எஸ்எம்எஸ் நன்மைகள் எதுவும் இல்லை.
பிஎஸ்என்எல் ரூ.99 ரீசார்ஜின் நன்மைகள்: இந்த திட்டம் மொத்தம் 18 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. நன்மைகளை பொறுத்தவரை, இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை மட்டுமே வழங்கும். அதாவது இந்த திட்டத்தின் கீழ் எஸ்எம்எஸ் நன்மைகளோ அல்லது டேட்டா நன்மைகளோ கிடைக்காது.
தங்களிடம் இருக்கும் பிஎஸ்என்எல் சிம் கார்டு வழியாக வாய்ஸ் கால் நன்மைகள் மட்டுமே கிடைத்தால் போதும் என்கிற வாடிக்கையாளர்களுக்கு ரூ.99 ஒரு மிகச்சிறந்த திட்டமாகும். மீதமுள்ள ரூ.87 மற்றும் ரூ.97 திட்டங்களானது டேட்டாவுடன் சேர்த்து வாய்ஸ் கால் நன்மையையும் வேண்டும் என்கிற பட்ஜெட் வாசிகளுக்கு மிகவும் ஏற்ற திட்டங்களாகும்.
அதிலும் குறிப்பாக உங்கள் ஊரில் அல்லது உங்கள் பகுதியில் பிஎஸ்என்எல் நெட்வொர்க் (BSNL Network) மிகவும் நன்றாக இருக்கும் என்றால் அல்லது பிஎஸ்என்எல்-ன் 4ஜி (BSNL 4G) சேவைகள் அணுக கிடைக்கிறது என்றால் ரூ.87 மற்றும் ரூ.97 திட்டங்களானது உங்கள் தினசரி டேட்டா தேவைகளை பூர்த்தி செய்யும் திட்டங்களாகவும் இருக்கும்.


Click it and Unblock the Notifications








