கசப்பான உண்மை தான்! ஆனாலும் கூட BSNL பயனர்களுக்கு வேற வழி இல்ல!

|

ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் தங்களது 5ஜி சேவையை வழங்கத் தொடங்கிவிட்டன. குறிப்பாக ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவை 8 நகரங்களிலும் இரண்டு சர்வதேச விமான நிலையங்களிலும் கிடைக்கிறது.

ஜியோ நிறுவனம்

ஜியோ நிறுவனம்

அதேபோல் ஜியோ நிறுவனம் நான்கு நகரங்களுக்கு 5ஜி சேவையை வழங்கத் தொடங்கியுள்ளது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் 5ஜி சேவையை வழங்குவதில் ஏர்டெல்-ஐ விட ஜியோ மிகவும் பின் தங்கியுள்ளது. ஜியோ நிறுவனம் இன்னும் பல நகரங்களுக்கு வேகமாக 5ஜி சேவையை வழங்கினால் சிறப்பாக இருக்கும்.

பாக்கதான் தம்மாத்துண்டு இருக்கும்.. ஆனா இந்த Nokia பிளிப் போனில் வேற லெவல் சம்பவத்தை பண்ணியிருக்காங்க!பாக்கதான் தம்மாத்துண்டு இருக்கும்.. ஆனா இந்த Nokia பிளிப் போனில் வேற லெவல் சம்பவத்தை பண்ணியிருக்காங்க!

பிஎஸ்என்எல் நிறுவனம்

பிஎஸ்என்எல் நிறுவனம்

அதேசமயம் ஜியோவை விட சிறந்த 5ஜி சேவையை வழங்க வேண்டும் என்று பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது ஏர்டெல் நிறுவனம். இது ஒருபுறம் இருக்க நாடு முழுவதும் இன்னும் 4ஜி சேவையைக் கூட வழங்காமல் திணறி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம்.

5ஜி நெட் இருக்கும் 5ஜி போனும் இருக்கும்.. ஆனா Jio 5G யூஸ் பண்ண முடியாது! இதை முதலில் பண்ணுங்க!5ஜி நெட் இருக்கும் 5ஜி போனும் இருக்கும்.. ஆனா Jio 5G யூஸ் பண்ண முடியாது! இதை முதலில் பண்ணுங்க!

3ஜி சேவை

3ஜி சேவை

அதாவது சரியான லாபாம் இல்லை, தேவையான ஊழியர்களை பராமரிக்க இயலாமை மற்றும் எண்ணற்ற பிரச்சனைகளை மூலம் பிஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை வழங்கமுடியாமல் போனது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் பெரும்பாலான வட்டங்களில் 3ஜி சேவைகளைத் தான் வழங்கி வருகிறது.

மிரண்டு போன விஞ்ஞானிகள்! இத்தனை வருஷமாக சூரியனுக்கு பின்னால் ஒளிந்திருந்த மிரண்டு போன விஞ்ஞானிகள்! இத்தனை வருஷமாக சூரியனுக்கு பின்னால் ஒளிந்திருந்த "பொருள்" வெளிப்பட்டது!

அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்

அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்

அதேபோல் சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த தகவலின்படி விரைவில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை வழங்கும் என்றும், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஜி சேவையை கூட வழங்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. சமீபத்தில் கூட பிஎஸ்என்எல் இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவில் எப்போது பிஎஸ்என்எல் 4ஜி வெளியாகும் என்ற கேள்விக்குப் பதில் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் சரியான தேதியைக் குறிப்பிடப்படவில்லை.

DSLR கேமராவையே தூக்கி சாப்பிடும் Xiaomi போன்: பணம் சம்பாதிக்க ஆசை இருந்தா இதை வாங்குங்க!DSLR கேமராவையே தூக்கி சாப்பிடும் Xiaomi போன்: பணம் சம்பாதிக்க ஆசை இருந்தா இதை வாங்குங்க!

பிப்ரவரி அல்லது மார்ச்

பிப்ரவரி அல்லது மார்ச்

அதாவது ட்விட்டரில் பயனர் ஒருவர் பிஎஸ்என்எல் 4ஜி எப்போது அறிமுகம் செய்யப்படும் என்று கேள்வி எழுப்பி இருந்தார். இவருக்கு பதில் அளித்த பிஎஸ்என்எல் இந்தியா, சரியான தேதியை குறிப்பிடுவது கடினமான விஷயம். இதற்குத் தேவையான தொழில்நுட்ப உபகரணங்கள் தயாராகி வருகின்றன. அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாத வாக்கில் சேவைகள் தொடங்கும் என எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்து இருக்கிறது.

வேற வழி இல்ல

வேற வழி இல்ல

பிஎஸ்என்எல் 4ஜி சேவை அறிமுகமாகும், ஆனால் நாடு முழுவதும் கிடைக்க இன்னும் ஒரு வருடம் கூட ஆகலாம். அதாவது இப்போது தான் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது நெட்வொர்க்கை மேம்படுத்த பல முயற்சிகளை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதேபோல் 4ஜி சேவையைவழங்க சில தனியார் முன்னணி நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.

அதேபோல் 91mobiles தளத்தில் வெளிவந்த தகவலின்படி, பிஎஸ்என்எல் 4ஜி வெளியீடு மீண்டும் 18 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

பழைய கெத்துடன் 5ஜி போனை அறிமுகம் செய்த Nokia! விலையை மீறிய தரமான அம்சம்.. யோசிக்கவே வேணாம்!பழைய கெத்துடன் 5ஜி போனை அறிமுகம் செய்த Nokia! விலையை மீறிய தரமான அம்சம்.. யோசிக்கவே வேணாம்!

வாடிக்கையாளர்கள் 4ஜி சேவை

எனவே பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் 4ஜி சேவையை பெற இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும். அதேசமயம் மற்ற தனியார் டெலிகாம் நிறுவனங்களை விட கம்மி விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Every BSNL users need to understand this reality behind company's 5G launch: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X