Home
News

வந்துட்டேன்னு சொல்லு.. ரூ.1 க்கு 4ஜி சேவை.. வீட்டு வாசலில் SIM கார்டு.. BSNL-ன் 5 முக்கிய அறிவிப்புகள்!

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடாபோன் ஐடியா (Vodafone Idea) உள்ளிட்ட தனியார் நிறுவனங்களை பார்த்து "திரும்ப வந்துட்டேன்னு சொல்லு" என்று கூறும்படியாக, அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் ஆபரேட்டர் ஆன பிஎஸ்என்எல் (BSNL) கடந்த சில நாட்களில் தொடர்ச்சியான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வரும் இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறையில் புத்துயிர் பெறும் நோக்கத்தின் கீழ் பிஎஸ்என்எல் நிறுவனமானது "ரூ.1 க்கு 4ஜி சேவை, வீட்டு வாசலில் சிம் கார்டு" உள்ளிட்ட 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதென்ன அறிவிப்புகள்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்:

BSNL: ரூ.1 க்கு 4ஜி சேவை.. வீட்டு வாசலில் SIM கார்டு!

1. 5ஜி கேப்டிவ் நான்-பப்ளிக் நெட்வொர்க்கை பயன்படுத்துதல்: ஆகஸ்ட் 3 ஆம் தேதி, பிஎஸ்என்எல் அதன் துறையில் முதல் 5ஜி கேப்டிவ் நான் பப்ளிக் நெட்வொர்க்கை (5G captive non public network - CNPN) பயன்படுத்துவதற்காக, நுமாலிகார் ரிஃபைனரி நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இந்த கூட்டாண்மை, அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு வழங்குநருக்கு (பிஎஸ்என்எல்-க்கு) பாதுகாப்பான மற்றும் நம்பகமான தனியார் 5ஜி நெட்வொர்க்கை உருவாக்க உள்நாட்டு உள்கட்டமைப்பை பயன்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த நெட்வொர்க் பொதுத்துறை நிறுவனத்தின் வளாகத்திற்குள் பயன்படுத்தப்படும் மற்றும் முக்கியமான தொழில்துறை செயல்பாடுகளில் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

2. ரூ.1 ஃப்ரீடம் ஆபர்: ஆகஸ்ட் 1 ஆம் தேதி அன்று பிஎஸ்என்எல் நிறுவனம் ஃப்ரீடம் ஆபர் என அழைக்கப்படும் வரையறுக்கப்பட்ட நேர ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்தது. இதன் விலை ரூ.1 ஆகும். இது 30 நாட்கள் செல்லுபடியாகும்.

இந்த காலகட்டத்தில், பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 2ஜிபி அளவிலான 4ஜி டேட்டா, வரம்பற்ற வாய்ஸ் கால்கள் மற்றும் 100 தினசரி எஸ்எம்எஸ் ஆகியவற்றை பெற முடியும். தொலைத்தொடர்பு ஆபரேட்டரின் கூற்றுப்படி, டெய்லி டேட்டா லிமிட் தீர்ந்த பின்னர் இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 40கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

இருப்பினும், இந்த ரூ.1 திட்டம் புதிய பிஎஸ்என்எல் சந்தாதாரர்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கும் மற்றும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த ஃப்ரீடம் சலுகையை பெறுபவர்களுக்கு பிஎஸ்என்எல் இலவச சிம் கார்டையும் வழங்குகிறது.

3. டெல்லி, மேலும் முக்கிய நகரங்களில் 5ஜி சேவை அறிமுகம்: ஜூன் 27 தேதியிட்ட ஒரு அறிக்கையின்படி, பிஎஸ்என்எல் நிறுவனம் டெல்லியிலும், இந்தியாவின் பிற நகரங்களையும் தேர்ந்தெடுத்து, அங்கு 2025 செப்டம்பர் இறுதிக்குள் தனது 5ஜி சேவைகளை தொடங்க தயாராகி வருகிறது.

மேலும் இந்தியாவில் 1 லட்சம் 4ஜி டவர்களை நிறுவுவதற்கான முதல் கட்ட பணியின் ஒரு பகுதியாக, சென்னை (Chennai), போபால் (Bhopal), சண்டிகர் (Chandigarh), டெல்லி (Delhi), ஹைதராபாத் (Hyderabad), ஜெய்ப்பூர் (Jaipur), கொல்கத்தா (Kolkata), லக்னோ (Lucknow) மற்றும் பாட்னாவில் (Patna) 5ஜி தளங்கள் செயல்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

4. சிம் கார்டுகளை வீட்டிற்கே சென்று டெலிவரி செய்தல்: ஜூன் 25 அன்று, பிஎஸ்என்எல் நிறுவனம் தனது சிம் கார்டுகளை வீட்டிற்கே சென்று டெலிவரி செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதற்கான புதிய போர்ட்டலை கொண்டுள்ளது, இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தாங்கள் இருக்கும் இடத்தை விட்டு வெளியேறாமல் தங்கள் வீடுகளுக்கே சிம் கார்டுகளை டெலிவரி செய்ய வைக்க முடியும்

இதன்கீழ் புதிய பிஎஸ்என்எல் பயனர்கள் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் சிம் இணைப்புகளுக்கு இடையே ஒன்றை தேர்வுசெய்து, செயல்முறையை இறுதி செய்ய செல்ப்-கேஒய்சி சரிபார்ப்பை முடிக்கலாம். மேலும் மற்ற சேவை வழங்குநர்களிடமிருந்து தங்கள் தற்போதைய எண்களை பிஎஸ்என்எல்லுக்கும் போர்ட் செய்யலாம். பிஎஸ்என்எல்-ன் கூற்றுப்படி, ஏதேனும் சந்தேகங்கள் அல்லது கேள்விகளுக்கு 1800-180-1503 என்கிற ஹெல்ப்லைன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

5. நிறுவனங்களுக்கான சிம்-லெஸ் குவாண்டம் 5ஜி எப்டபுள்யூஏ க்யூ-5ஜி சேவையின் துவக்கம்: கடந்த ஜூன் 19 ஆம் தேதி அன்று பிஎஸ்என்எல் இந்தியாவில் அதன் 5ஜி சேவையின் பெயரை அறிவித்தது. இது குவாண்டம் 5ஜி என்பதன் சுருக்கமான க்யூ-5ஜி என அழைக்கப்படுகிறது. இருப்பினும். இது பொது நுகர்வோருக்கு பதிலாக வணிக மற்றும் நிறுவன பயனர்களை இலக்காக கொண்டுள்ளது. இதன்கீழ் கிடைக்கும் திட்டங்கள் மாதத்திற்கு ரூ.999 இல் தொடங்கி 100 எம்பிபிஎஸ் நெட்வொர்க் ஸ்பீடை வழங்குகின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Every BSNL Customers Should Know These 5 Announcements Rs 1 4G Plan Doorstep SIM Delivery More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X