கேபிள் TV இல்ல.. DTH இல்ல.. 600+ லைவ் டிவி சேனலுடன் BSNL IFTV.. 127 பிரீமியம் சேனல்கள்.. பைபர் கஸ்டமர்களுக்கு!
மத்திய அரசின் கீழ் செயல்படும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் கஸ்டமர்களுக்கு கேபிள் டிவி, டிடிஎச் போலல்லாமல், நேரடியாக ஃபைபர் வழியாக லைவ் டிவி சேனல்களின் சந்தா கிடைக்கிறது. 600+ டிவி சேனல்கள் மட்டுமல்லாமல், 127 பிரீமியம் டிவி சேனல்களும் இந்த சந்தாவில் கிடைக்கிறது. ஓடிடி சந்தா, 75 எம்பிபிஎஸ் ஃபைபர் டேட்டா வருகிறது.
ஐஃஎப்டிவி (IFTV) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இன்ட்ராநெட் ஃபைபர் டிவி (Intranet Fiber TV) சேவையானது கேபிள் டிவி போலத்தான். ஆனால், ஃபைபர் கேபிள்கள் வழியாக கிடைக்கிறது. ஆகவே, இதில் ஃபைபர் டேட்டா (Fiber Data), லேண்ட்லைன் வாய்ஸ் கால்கள் (Landline Voice Calls) மற்றும் ஃபைபர் டிவி (Fiber TV) ஆகிய மூன்றையும் பயன்படுத்தி கொள்ள முடியும்.

மேலும், டிடிஎச் போல இதற்கு சந்தா செலுத்த வேண்டியது கிடையாது. 600+ லைவ் சேனல்கள் மற்றும் 127 பிரீமியம் சேனல்கள் இலவமாக கிடைக்கும். இந்த சலுகைகள் கூடுதல் சலுகைகளாக இருக்கிறது. ஆகவே, ஃபைபர் திட்டத்தில் கிடைக்கும் டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் ஓடிடி சலுகைகளையும் இந்த பிஎஸ்என்எல் ஐஎப்டிவி (BSNL IFTV) திட்டம் கொடுக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ 625 திட்ட விவரங்கள் (BSNL Rs 625 Plan Details): இந்த திட்டமானது ஃபைபர் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 75 எம்பிபிஎஸ் வேகத்தில் ஃபைபர் டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் டேட்டா சலுகையில் இதை பயன்படுத்தி கொள்ளலாம். இருப்பினும், மாதத்துக்கு 250 ஜிபி டேட்டா அதிகபட்சமாக கிடைக்கும்.
இந்த டேட்டாவுக்கு பிறகு போஸ்ட் டேட்டாவும் கொடுக்கப்படும். இதே ஃபைபர் வழியாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) கால்களை கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். ஆனால், லேண்ட்லைன் டிவைஸ்கள் கஸ்டமர்களிடம் இருந்தால் மட்டுமே இது கிடைக்கும். இந்த டேட்டா மற்றும் வாய்ஸ் கால்கள் போக ஓடிடி சந்தாவை இந்த திட்டம் கொடுக்கிறது.
இதில் சோனிலிவ் (Sony Liv) மற்றும் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா கிடைக்கிறது. இந்த ஓடிடிகளை பார்க்க டேட்டா தேவைப்படும். ஆனால், 600+ லைவ் சேனல்கள் மற்றும் 127 பிரீமியம் சேனல்களுக்கு டேட்டா தேவைப்படாது. நேரடியாக ஃபைபர் வழியாக பார்க்கலாம். இந்த பிஎஸ்என்எல் ஐஎப்டிவி திட்டத்தை (BSNL IFTV Plan) மூன்று வழிகளில் புக்கிங் செய்து கொள்ளலாம்.
1. வாட்ஸ்அப் வழியாக புக்கிங் செய்து கொள்ளலாம். 1800-4444 என்னும் எண்ணுக்கு வாட்ஸ்அப் வழியாக Hi என்று டைப் செய்து மெசேஜ் செய்தால் போதும், இந்த பிஎஸ்என்எல் ஐஎப்டிவி திட்டத்தின் விவரங்கள் மற்றும் அதை பெறுவதற்கான விவரங்கள் கொடுக்கப்படும். இதில் புக்கிங் செய்து கொள்ளலாம். அடுத்தது வழக்கமாக வெப்சைட் வழியாக புக்கிங் செய்வதாகும்.
2. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் போர்ட்டலுக்கு சென்று புக்கிங் செய்து கொள்ளலாம். இந்த போர்ட்டலில் ஃபைபர் திட்டங்களின் பக்கத்தில் இது கிடைக்கும். மாநிலத்தை தேர்வு செய்தால் பிறகு ஃபைபர் திட்டங்கள் காண்பிக்கப்படும். இதில் பிஎஸ்என்எல் ரூ 625 ஐபிடிவி திட்டத்தை தேடிப்பிடித்து புக்கிங் செய்து கொள்ளலாம். அடுத்தது, ஆப் வழியாக புக்கிங் செய்வதாகும்.
3. பிஎஸ்என்எல் செல்ப் கேர் (BSNL SelfCare) ஆப் வழியாக இந்த ஐபிடிவி திட்டத்தை புக்கிங் செய்து கொள்ளலாம். இன்ட்ராநெட் ஃபைபர் டிவி திட்டங்கள் தமிழ்நாட்டில் கிடைக்கின்றன. லைவ் டிவி சேனல்கள் இலவமாக கொடுக்கப்படுகின்றன. இதில் கிடைக்கும் சேனல்களுக்கு இன்டர்நெட் தேவையில்லை என்பதால், எந்த சிக்கலும் இல்லாமல் ஸ்ட்ரீமிங் செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








