பேங்க் அக்கவுண்ட் புது ரூல்ஸ்.. ரூ.50,000 போச்சுனா, ரூ.25,000 மட்டும் கணக்கு.. 5 நாட்களில் கதை முடிந்தது!
2027ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் பேங்க் அக்கவுண்ட் வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு புதிய விதிகளை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (RBI) அமலுக்கு கொண்டுவர இருக்கிறது. ரூ.50,000 வரையில் பணத்தை அனுப்பி திரும்ப வரவில்லை என்றால், ரூ.25,000 வரையில் பெற்று கொள்ள இந்த விதிகள் வழிவகை செய்கிறது.
டிஜிட்டல் வங்கி மோசடியால் பாதிக்கப்பட்ட தகுதியுடைய நபர்கள், தங்களுக்கு ஏற்பட்ட நிகர இழப்பில் 85 சதவீத இழப்பீட்டை பெற்று கொள்ள முடியும். இதற்காக பேங்க் கஸ்டமர்கள் எத்தனை நாட்களுக்குள் புகார் அளிக்க வேண்டும். இந்த புதிய விதிகளின் வழியாக எவ்வளவு தொகையை திரும்ப பெற முடியும் என்பது குறித்த விவரங்கள் இதோ.

டிஜிட்டல் பரிவர்த்தனை செய்து, மோசடி ஆசாமிகளால் பணத்தை இழக்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த விதிகள் பொருந்தும். அதேபோல ரூ.50,000 வரையில் பணத்தை இழக்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே, இந்த விதிகளின்படி இழப்பீடு வழங்கப்படும். ஏனென்றால், இந்த இழப்பீட்டு சம்பந்தப்பட்ட பேங்குகள் கொடுக்க வேண்டி இருக்கிறது.
ஆகவே, ரூ.50,000 மேல் சென்றால், அது சைபர் கிரைம் உள்ளிட்ட பெரிய அதிகாரிகளின் கைக்கு நேரடியாக சென்றுவிடும். ரூ.50,000 அல்லது அதற்குள்ளான தொகையை இழக்கும்போது, உடனடியாக பேங்க் கஸ்டமர்களுக்கு நிவாரணம் அளிக்கும்படி இந்த விதிகள் கொண்டுவரப்பட இருக்கின்றன. ஆனால், இதிலும் பல்வேறு நிபந்தனைகள் இருக்கிறது.
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் விதிகளின்படி டிஜிட்டல் மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகபட்சமாக ரூ.25,000 வரையில் மட்டுமே இழப்பீடு பெற்று கொள்ள முடியும். அந்த மோசடி பரிவர்த்தனையின் மதிப்பு ரூ.50,000 அல்லது அதற்கு குறைவாக இருக்க வேண்டும். இப்படி ஒரேவொரு முறை மட்டுமே இழப்பீட்டை பெற்று கொள்ள முடியும்.
அதாவது, ரூ.50,000 பணத்தை இழந்த பிறகு ரூ.25,000 பணத்தை இழப்பீடாக பேங்கில் இருந்து பெற்றுவிட்டால், அதோடு இழப்பீடு பெறுவதற்கான தகுதி முடிந்துவிட்டது. மீண்டும் பணத்தை இழந்தாலும், பேங்கிடம் இருந்து இந்த ரூ.25,000 பணத்தை பெற முடியாத. சைபர் கிரைமில் புகார் செய்து, சட்ட ரீதியாக அதை அணுகி கொள்ள வேண்டும்.
அதேபோல எல்லோருக்கும் ரூ.25,000 இழப்பீடு கிடைக்காது. ஆகவே, பேங்க் கஸ்டமர்கள் பணத்தை இழந்தால், அந்த தொகையை மீட்க பேங்குகள் நடவடிக்கை எடுக்கும். இந்த நடவடிக்கையின்போது, ஏதாவது தொகையை மீட்க முடிந்தால், அது கஸ்டமர்களுக்கு கிடைக்கும். மீட்க முடியாத தொகையில் இருந்து 85 சதவீதத்தை பேங்கே கொடுக்கும்.
இதுவே அதிகபட்சமாக ரூ.25,000 வரம்பில் இருந்து. அதுவே ரூ.10,000 அல்லது ரூ.20,000 போன்ற தொகையாக இருந்து ரூ.25,000 கிடைக்காது. அதில் இருந்து 85 சதவீதம் கணக்கிடப்பட்டு கிடைக்கும். இப்படியே ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் புதிய விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. அதேபோல தொகையை இழந்த பிறகு குறிப்பிட்ட நாட்களுக்குள் புகார் அளிக்க வேண்டும்.
அதாவது, டிஜிட்டல் பரிவர்த்தனை மோசடியால் பணத்தை இழந்த பிறகு உடனடியாக சம்பந்தப்பட்ட பேங்குகளிடம் புகார் அளிக்க வேண்டும். 5 நாட்களுக்குள் புகார் அளித்திருக்க வேண்டும். இந்த புகாரை பெற்ற பேங்குகள் அதுகுறித்த நடவடிக்கையை தொடங்க வேண்டும். மீட்கப்பட்ட தொகை அல்லது இழப்பீட்டு தொகையை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications
