இந்த விஷயம் தெரிஞ்ச பின்ன.. 2GB பிளானை ரீசார்ஜ் பண்ணுற Airtel யூசர்கள் கதறிடுவாங்க! ஏன்னா?

|

நீங்களொரு ஏர்டெல் (Airtel) யூசர் என்றால்.. இன்னும் குறிப்பாக தினமும் 2ஜிபி அளவிலான டெய்லி டேட்டாவை (2GB Data) வழங்கும் ஏர்டெல் பிளானை ரீசார்ஜ் செய்துள்ளீர்கள் என்றால்.. ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் இந்த 2 சூப்பர் பிளான்களை பற்றி உங்களுக்கு இன்னும் தெரியவில்லை என்று அர்த்தம்!

அதென்ன பிளான்கள்? குறிப்பாக 2ஜிபி டேட்டா பிளானை ரீசார்ஜ் செய்பவர்கள் எல்லோரும் ஏன் இந்த 2 பிளான்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்? இதோ விவரங்கள்:

எக்ஸ்டராவாக 1 ஜிபி கிடைக்கும்!

எக்ஸ்டராவாக 1 ஜிபி கிடைக்கும்!

தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்கும் உங்களுடைய ஏர்டெல் ரீசார்ஜ்ஜின் விலை நிர்ணயம் ஆனது ரூ.450 க்கு மேல் அல்லது ரூ.650 க்கு மேல் இருந்தால்.. நீங்கள் ஏன் தேவை இல்லாமல் 2ஜிபி டேட்டா பிளானை தேர்வு செய்து கொண்டு இருக்கீறீர்கள்?

பேசாமல் தினமும் 3ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் ஏர்டெல் ரீசார்ஜை தேர்வு செய்யலாம். அல்லவா? இப்படி செய்வதால் உங்களுக்கு தினமும் 1ஜிபி எக்ஸ்டராவாக கிடைக்கும் அல்லவா?

ஹலோ அம்பானி சார்.. BSNL-ஐ பார்த்து கத்துக்கோங்க! காசு இல்ல கஸ்டமர் தான் முக்கியம்னு நிரூபிக்கும் ஒரு ஆபர்!ஹலோ அம்பானி சார்.. BSNL-ஐ பார்த்து கத்துக்கோங்க! காசு இல்ல கஸ்டமர் தான் முக்கியம்னு நிரூபிக்கும் ஒரு ஆபர்!

அதென்ன திட்டங்கள்?

அதென்ன திட்டங்கள்?

ஒருவேளை 3ஜிபி அளவிலான டெய்லி டேட்டாவை வழங்கும் ஏர்டெல் திட்டங்கள் பற்றி உங்களுக்கு தெரியாது என்றால்.. இப்போதே தெரிந்து கொள்ளுங்கள்: அவைகள் ரூ.499 மற்றும் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டங்கள் ஆகும்.

பார்தி ஏர்டெல் நிறுவனமானது அதன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் விருப்பங்களை வழங்குவதால், இந்த 3ஜிபி டேட்டா திட்டங்களும் உங்கள் கண்களில் படாமல் இருந்திக்கலாம்.

பிராட்பேண்ட்டிற்கு மாற கூடாது, அதே சமயம் இருப்பதிலேயே அதிக டேட்டா நன்மைகள் கிடைக்க வேண்டும் என்கிற ஏர்டெல் யூசர்களுக்கு இந்த 2 திட்டங்களும் - மிகச்சிறந்த விருப்பங்கள் ஆகும்.

ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

முன்னரே குறிப்பிட்டபடி, ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டமானது தினமும் 3ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. அதாவது இந்த திட்டம் மொத்தம் 84ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. 3ஜிபி என்கிற டேட்டா வரம்பை மீறிய பின்னர் இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 64 Kbps ஆக குறைக்கப்படும்,

மேலும் இந்த திட்டத்தின் கீழ் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்களும் அணுக கிடைக்கும். ஒருவேளை நீங்கள் தினசரி எஸ்எம்எஸ் வரம்பை மீறினால், 101-வது மெசேஜில் இருந்து ஒவ்வொரு SMS-க்கும் கட்டணம் வசூலிக்கப்படும்.

அன்லிமிடெட் வாய்ஸ் கால், மூன்று மாதங்களுக்கு இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா, இலவச அப்பல்லோ 24|7 சர்க்கிள் சந்தா, ஹெலோட்யூன்ஸ் மற்றும் இலவச வின்க்மியூசிக் சந்தா போன்றவைகளை வழங்கும் இந்த திட்டத்தின் மொத்த வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்!

இது பிளான் இல்ல.. லைஃப் டைம் செட்டில்மென்ட்! சிங்கிள் BSNL ரீசார்ஜ்ஜில் 790GB டேட்டா, 400 டேஸ் வேலிடிட்டி!இது பிளான் இல்ல.. லைஃப் டைம் செட்டில்மென்ட்! சிங்கிள் BSNL ரீசார்ஜ்ஜில் 790GB டேட்டா, 400 டேஸ் வேலிடிட்டி!

ரூ.699 மதிப்புள்ள ஏர்டெல் திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

ரூ.699 மதிப்புள்ள ஏர்டெல் திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

நன்மைகள் பொறுத்தவரை ரூ.699 ஆனது ரூ.499 திட்டம் வழங்கும் அதே நன்மைகளையே வழங்கும்.

அதாவது இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை வழங்கும். தினமும் 3ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும்; ஒருவேளை டெய்லி டேட்டா வரம்பை மீறி விட்டால் - இண்டர்நெட் ஸ்பீட் 64 Kbps ஆக குறைக்கப்படும்.

மேலும் இது தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்களையும் வழங்கும்; நீங்கள் தினசரி எஸ்எம்எஸ் வரம்பை மீறிய பிறகு உள்ளூர் எஸ்எம்எஸ்களுக்கு ரூ 1 மற்றும் எஸ்டிடி எஸ்எம்எஸ்களுக்கு ரூ.1.50 என்கிற கட்டணம் வசூலிக்கப்படும்.

ஆனால் இந்த திட்டம் 56 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வரும். மேலும் இலவச அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் (56 நாட்களுக்கு மட்டும்), இலவச Apollo 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப், இலவச Wynk மியூசிக் சந்தா, Xstream ஆப், Hellotunes மற்றும் FASTag-ல் ரூ.100 தள்ளுபடி போன்ற சில கூடுதல் நன்மைகளையும் வழங்கும்.

Best Mobiles in India

English summary
Every Airtel Users Whose Using 2GB Data Plan Needs to Know About this 3GB Data Plans

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X