தொக்கா 20GB டேட்டா.. ரூ.50-க்கு அள்ளி கொடுக்கும் Airtel நிறுவனம்.. 2025 இல் இதை மிஸ் பண்ணிடாதீங்க!
நீங்கள் ஒரு ஏர்டெல் (Airtel) யூசராக என்றால்.. நீங்கள் எந்தவொரு பிளானை ரீசார்ஜ் செய்து இருந்தாலும் சரி.. அதன்கீழ் உங்களுக்கு எவ்வளவு டெய்லி டேட்டா கிடைத்தாலும் சரி.. அது 1ஜிபி ஆக இருக்கலாம், 1.5ஜிபி ஆக இருக்கலாம், 2ஜிபி ஆக இருக்கலாம்.. அல்லது அதிகபட்சமாக 3ஜிபி டேட்டாவாக கூட இருக்கலாம்.
ஆனால் ஏதாவது ஒரு சூழ்நிலையில், உங்களுடைய டெய்லி டேட்டா லிமிட் தீர்ந்து போய் இருக்கும். அடுத்த நாளுக்கான டேட்டா வரும்வரும் நீங்கள் காத்துகொண்டு இருந்தீர்ப்பார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், நீங்கள் அதிகம் செலவு செய்யாமலே எக்ஸ்ட்ரா டேட்டாவை பெறலாம். ஏனென்றால் பார்தி ஏர்டெல் நிறுவனமானது 2025 ஆம் ஆண்டில் ரூ.50 க்கு கீழ் விலையுள்ள பல மொபைல் டேட்டா வவுச்சர்களை கொண்டுள்ளது.

எனவே உங்களுடைய டெய்லி டேட்டா லிமிட்டை நீங்கள் மீறும் போது, அடுத்த சில மணிநேரங்களை அல்லது பல மணிநேரங்களை சமாளிக்க உங்களுக்கு ஒரு டேட்டா பூஸ்டர் தேவை என்றால்.. ஏர்டெல்லின் கீழ் ரூ.50 க்கு குறைவான விலையில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் 5 டேட்டா வவுச்சர்களில் ஒன்றை தேர்வு செய்யவும். குறிப்பாக ரூ.50 க்குள் 20ஜிபி டேட்டாவை வழங்கும் பிளானை இந்த 2025 இல் மிஸ் பண்ணிடாதீங்க!
01. பார்தி ஏர்டெல் ரூ.11 டேட்டா வவுச்சர்: ரூ.11 டேட்டா வவுச்சர் ஆனது ஏர்டெல் வழங்கும் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் டேட்டா வவுச்சராகும். இந்த திட்டத்தில், பயனர்கள் ஒரு மணி நேரத்திற்கு 10 ஜிபி அளவிலான டேட்டாவை பெறுகிறார்கள். உங்களுக்கு கிடைக்கும் 10 ஜிபி டேட்டாவை ஒரு மணிநேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும். வேலிடிட்டி முடிந்த பின்னர் பயன்படுத்தப்படாத டேட்டா காலாவதியாகிவிடும்.
02. பார்தி ஏர்டெல் ரூ.22 டேட்டா வவுச்சர்: ஏர்டெல் வழங்கும் ரூ.11 திட்டம் உங்களுக்கு நல்ல தேர்வாக இல்லை என்றால், நீண்ட கால வேலிடிட்டி உடன் வரும் ரூ.22 திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம். ஏர்டெல் வழங்கும் ரூ.22 டேட்டா வவுச்சரின் கீழ் உங்களுக்கு 1 நாள் என்கிற வேலிடிட்டியின் கீழ் 1ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும்.
03. பார்தி ஏர்டெல் ரூ.26 டேட்டா வவுச்சர் - உங்களுக்கு 1ஜிபி டேட்டாவை விட சற்று கூடுதல் டேட்டா தேவைப்பட்டால், ரூ.22 திட்டத்திற்கு பதிலாக ரூ.26 திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம். ஏர்டெல் ரூ.26 டேட்டா திட்டத்தின் கீழ் உங்களுக்கு 1 நாள் என்கிற வேலிடிட்டியின் கீழ் 1.5ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும்.
04. பார்தி ஏர்டெல் ரூ.33 டேட்டா வவுச்சர் - ஏர்டெல் வழங்கும் ரூ.33 டேட்டா வவுச்சருடன், பயனர்கள் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். உங்களுக்கு 1ஜிபி டேட்டா அல்லது 1.5ஜிபி டேட்டாவை விட சற்று கூடுதல் டேட்டா தேவைப்பட்டால், ரூ.22 அல்லது ரூ.26 திட்டத்திற்கு பதிலாக ரூ.33-ஐ ரீசார்ஜ் செய்யலலாம்.
05, பார்தி ஏர்டெல் ரூ.49 டேட்டா வவுச்சர் - 1ஜிபி என்கிற சிறிய அளவிலான டேட்டாவும் போதாது; குறுகிய வேலிடிட்டிஉடனான 10 ஜிபி அளவிலான பெரிய அளவிலான டேட்டாவும் போதாது என்றால்.. உங்களுக்கு ரூ.49 மதிப்புள்ள திட்டம் தான் சரிப்பட்டு வரும், இந்த திட்டம் ஏர்டெல் பயனர்களுக்கு 20ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ஆனால் அதை ஒரு நாள் மட்டுமே பயன்படுத்த முடியும். 1 நாள் என்கிற வேலிடிட்டி முடிந்ததும் பயன்படுத்தப்படாத மீதமுள்ள அனைத்து டேட்டாவும் காலாவதியாகிவிடும்.
மேற்கண்ட 1 நாள் வேலிடிட்டி என்று குறிப்பிடப்பட்ட அல்லது 2 நாள் வேலிடிட்டி என்று குறிப்பிடப்பட்ட அனைத்து திட்டங்களின் கீழும் கிடைக்கும் டேட்டா பலன்கள் ஆனது நள்ளிரவில் காலாவதியாகிவிடும் என்பதை நினைவில் கொள்ளவும். மேலும், இந்த வவுச்சர்களை ரீசார்ஜ் செய்ய முதலில் உங்களிடம் ஒரு ஆக்டிவ் ஏர்டெல் பிளான் இருக்க வேண்டும். அதற்கு மேலாகத்தான் இவைகளை ரீசார்ஜ் செய்ய முடியும்.


Click it and Unblock the Notifications








