Jio அம்பானியே அசந்து போற அளவுக்கு அள்ளி கொடுக்கும் Airtel.. Netflix இலவசம்.. 3 மாசத்துக்கு டெய்லி 3GB டேட்டா!
Airtel Netflix Plans September 2024: முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் "திடீர்" 4ஜி அறிமுகமானது, பார்தி ஏர்டெல் நிறுவனத்தை சற்றே நிலைகுலைய வைத்தது என்னவோ உண்மைதான். ஆனால் 5ஜி அறிமுகத்திற்கு பின்னாலான டெலிகாம் சந்தை சூழ்நிலையானது "நேருக்கு நேர்" என்று கூறும் அளவிற்கு இவ்விரு நிறுவனங்களும் சமமான உயரத்தில் நீடித்து வருகின்றன. இனிவரும் நாட்களில் எந்த நிறுவனம் அதிக அளவிலான கூடுதல் நன்மைகளை (Extra Benefits) வழங்குகிறதோ.. அந்நிறுவனம் தான் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும்.
அதாவது டெய்லி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், எஸ்எம்எஸ் போன்ற வழக்கமான நன்மைகளை வழங்குவதோடு சேர்த்து இலவச டேட்டா, இலவச ஓடிடி போன்ற கூடுதல் நன்மைகளை வழங்கும்.. ஒப்பீட்டளவில் மலிவான விலைக்கு வழங்கும் நிறுவனம் தான் இந்திய டெலிகாம் மார்க்கெட்டின் ராஜாவாக இருக்கும். இதை நன்றாக புரிந்துகொண்ட ஏர்டெல் நிறுவனம் அதன் 3 திட்டங்களின் கீழ், மிகவும் பிரபலமான ஓடிடி தளமான நெட்பிளிக்ஸை இலவசமாக வழங்குகிறது.

நீங்களொரு ஏர்டெல் ப்ரீபெய்ட் பயனராக இருந்தால், இலவச நெட்பிளிக்ஸ் சந்தாவை வழங்கும் ஒரே ஒரு திட்டம் மட்டுமே உங்களுக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். அதுவே ஏர்டெல் நிறுவனத்தின் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளராக இருந்தால் உங்களுக்கு தேர்வு செய்ய 2 திட்டங்கள் கிடைக்கும். அதென்ன திட்டங்கள்? இலவச நெட்பிளிக்ஸ் தவிர்த்து இத்திட்டங்கள் வேறு என்னென்ன நன்மைகளை வழங்கும்? இதோ விவரங்கள்:
01. ரூ.1,789 ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டம்: ஏர்டெல் நிறுவனத்தின் ட்ரூ அன்லிமிடெட் ப்ரீபெய்ட் திட்டமான இது - அன்லிமிட்டெட் வாய்ஸ், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் டெய்லி 3ஜிபி டேட்டா போன்ற "வழக்கமான" நன்மைகளை 84 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது. டெய்லி டேட்டா லிமிட்டை மீறிய பிறகு, இந்த திட்டத்தின் டேட்டா ஸ்பீட் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.
கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை, இந்த திட்டத்தின் வழியாக ஏர்டெல் நிறுவனம் சில ரிவார்டுகளையும் வழங்குகிறது, இதில் நெட்பிளிக்ஸ் பேசிக் சந்தாவும் அடக்கம். இதுதவிர்த்து ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, அப்பல்லோ 24/7 சர்க்கிள் (3 மாதங்களுக்கு), விங்க் மியூசிக் மற்றும் இலவச ஹெலோட்யூன்ஸ் ஆகியவைகளும் அணிலாக கிடைக்கும்.
02. ரூ.1,399 ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டம்: இதுதான் - ஏர்டெல் போஸ்ட்பெய்ட் பிரிவின் கீழ் இலவச நெட்பிளிக்ஸை வழங்கும் திட்டங்கள் என்கிற பட்டியலில் உள்ள முதல் திட்டமாகும். இது ஒரு ரெகுலர் மற்றும் மூன்று ஆட்-ஆன் இணைப்புகளை (மொத்தம் 4 இணைப்புகள்) வழங்கும் ஒரு மாத கால திட்டமாகும்.
இந்த திட்டத்தின் கீழ் - அன்லிமிடெட் வாய்ஸ், 240ஜிபி மாதாந்திர டேட்டா (முதன்மை இணைப்புக்கு 150ஜிபி மற்றும் ஒவ்வொரு ஆட்-ஆனுக்கும் 30ஜிபி டேட்டா), 200ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை வழங்குகிறது
ஏர்டெல் ரிவார்டுகளை பொறுத்தவரை, நெட்பிளிக்ஸ் பேஸிக் மாதாந்திர சந்தா, 6 மாதங்களுக்கான அமேசான் ப்ரைம் வீடியோ மெம்பர்ஷிப், 1 வருடத்திற்க்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே மற்றும் விங்க் மியூசிக் போன்றவைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ப்ளூ ரிப்பன் பேக் சேவை, அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப் மற்றும் விஐபி சேவை ஆகிய நன்மைகளும் கிடைக்கும்.
03. ரூ.1,749 ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டம்: இது ஒரு ரெகுலர் மற்றும் நான்கு ஆட்-ஆன் இணைப்புகளை (மொத்தம் 5 இணைப்புகள்) வழங்கும் ஒரு மாத கால திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ் - அன்லிமிடெட் வாய்ஸ், 320ஜிபி மாதாந்திர டேட்டா (முதன்மை இணைப்புக்கு 200ஜிபி மற்றும் ஒவ்வொரு ஆட்-ஆனுக்கும் 30ஜிபி டேட்டா), 200ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை வழங்குகிறது
ஏர்டெல் ரிவார்டுகளை பொறுத்தவரை,ரூ.1,399-ஐ போலவே நெட்பிளிக்ஸ் பேஸிக் மாதாந்திர சந்தா, 6 மாதங்களுக்கான அமேசான் ப்ரைம் வீடியோ மெம்பர்ஷிப், 1 வருடத்திற்க்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே மற்றும் விங்க் மியூசிக் போன்றவைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ப்ளூ ரிப்பன் பேக் சேவை, அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப் மற்றும் விஐபி சேவை ஆகிய நன்மைகளும் கிடைக்கும்!


Click it and Unblock the Notifications








