அம்பானி ஜி.. இப்போ வர்றீங்களா ஆட்டத்துக்கு.. Airtel-ன் 8 வெயிட்டான Unlimited 5G பிளான்கள்!
4ஜி அறிமுகத்தின் போது முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) கட்டவிழ்த்து விட்ட வியாபார தந்திரங்களானது, குறிப்பாக அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மையானது, சக போட்டியாளர்களான ஏர்டெல் (Airtel) மற்றும் வோடாபோனை (Vodafone) நிலைகுலைய வைத்தது.
ரிலையன்ஸ் ஜியோ என்னவெல்லாம் செய்கிறதோ, அதை நாமும் செய்ய வேண்டும். அப்போது தான் இந்திய டெலிகாம் சந்தையில் (Indian Telecom Market) பிழைக்க முடியும்; தன்வசம் உள்ள வாடிக்கையாளர்களை காப்பாற்ற முடியும் என்கிற முட்டுச்சந்துக்கு கொண்டு செல்லப்பட்டன - ஏர்டெல்லும், வோடாபோனும்!

ஆனால் 5ஜி நெட்வொர்க் (5G Network) என்று வரும்போது ஜியோ மற்றும் ஏர்டெலுக்கு இடையேயான போட்டியானது, கிட்டத்தட்ட எல்லா பழைய கோடுகளையும் அழித்துவிட்டு முதலில் இருந்து ஆரம்பிப்பதற்கு சமமாகும். அதற்கு ஏற்றாற்போல ஏர்டெல் நிறுவனமும் சரிக்கு சமமான வேலைகளை பார்த்து வருகிறது என்றே கூறலாம்.
ஜியோவுடனான 5ஜி போட்டியில், எந்தவொரு இடத்திலும் சரிக்கி விடக்கூடாது என்பதற்காக ஏர்டெல் நிறுவனம் 10க்கும் மேற்ப்பட்ட அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டங்களை (Unlimited 5G Data Plans) வழங்கி வருகிறது. அவைகளில் குறிப்பிட்ட 8 திட்டங்கள் ஏர்டெல்லின் ஏறுமுகத்திற்கு வித்திடும்படி உள்ளன. அதென்ன திட்டங்கள்? இதோ விவரங்கள்:
நாம் இங்கே பேசுவது பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் தொகுப்பின் (Airtel Prepaid) கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ரூ.239, ரூ.265, ரூ.296, ரூ.299, ரூ.319, ரூ.359, ரூ.399, ரூ.479 மற்றும் ரூ.3359 மதிப்புள்ள அன்லிமிடெட் திட்டங்களை (Unlimited Plans) பற்றித்தான்.
ஏர்டெல்லின் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டமானது 24 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் தினமும் 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ்கள், இலவச விங்க் மியூசிக் சந்தா மற்றும் இலவச ஹலோ ட்யூன்களை வழங்குகிறது.
ஏர்டெல்லின் ரூ.265 ப்ரீபெய்ட் திட்டமானது தினமும் 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ்கள், எக்ஸ்ட்ரீம் சேனலுக்கான இலவச அணுகல், அப்பல்லோ சர்க்கிளுக்கான 3 மாத சந்தா, ஃபாஸ்டேக் ரீசார்ஜில் கேஷ்பேக் மற்றும் இலவச ஹலோ ட்யூன்களை 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது.
ஏர்டெல்லின் ரூ.296 திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. இதன் கீழ் அன்லிமிட்ட் 5ஜி டேட்டாவுடன் அன்லிமிட்ட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ், மொத்தம் 25ஜிபி அளவிலான 4ஜி டேட்டா, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம், இலவச ஹலோ ட்யூன்ஸ் போன்ற நன்மைகள் கிடைக்கும்.
ஏர்டெல்லின் ரூ.299 திட்டம் 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியை வழங்கும். நன்மைகளை பொறுத்தவரை ஒரு நாளைக்கு 1.5ஜிபி அளவிலான 4ஜி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ், எக்ஸ்ஸ்ட்ரீம் சேனலுக்கான இலவச அணுகல், 3 மாதங்கள் அப்பல்லோ சர்க்கிளுக்கான சந்தா, ஃபாஸ்டேக் ரீசார்ஜில் கேஷ்பேக், இலவச ஹலோ ட்யூன்ஸ் கிடைக்கும்.
ஏர்டெல்லின் ரூ.319 திட்டம் 1 மாத வேலிடிட்டியை வழங்குகிறது. இதன் கீழ் தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஒரு நாளைக்கு 1.5ஜிபி அளவிலான 4ஜி டேட்டா, எக்ஸ்ஸ்ட்ரீம் சேனலுக்கான இலவச அணுகல், அப்பல்லோ சர்க்கிளுக்கான 3 மாத சந்தா, ஃபாஸ்டேக் ரீசார்ஜில் கேஷ்பேக் மற்றும் இலவச ஹலோ ட்யூன்ஸ் போன்ற நன்மைகள் கிடைக்கும்.
ஏர்டெல் ரூ.359 திட்டமும் 1 மாத வேலிடிட்டியை வழங்குகிறது. ஆனால் இது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்கும். மேலும் 100 எஸ்எம்எஸ் / நாள், அன்லிமிடெட் வாய்ஸ் கால், எக்ஸ்ஸ்ட்ரீம் சேனல் நன்மைகள், அப்பல்லோ சர்க்கிளுக்கான 3 மாத சந்தா, ஃபாஸ்டேக் ரீசார்ஜில் கேஷ்பேக் மற்றும் இலவச ஹலோ ட்யூன்களை வழங்கும்.
ஏர்டெல்லின் ரூ 499 திட்டம் 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியுடன் வருகிறது. இது தினமும் 3ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் வாய்ஸ் கால், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா உட்பட ஓடிடி நன்மைகள், எக்ஸ்ஸ்ட்ரீம் சேனலுக்கான இலவச அணுகல், அப்பல்லோ சர்க்கிளுக்கான 3 மாத சந்தா, ஃபாஸ்டேக் ரீசார்ஜில் கேஷ்பேக், இலவச ஹலோ ட்யூன்ஸ் மற்றும் விங்க்மியூசிக் சந்தாவை வழங்குகிறது.
கடைசியாக உள்ள ஏர்டெல்லின் ரூ.3359 திட்டம் 365 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது. இது தினமும் 3.5 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் வாய்ஸ் கால், ஹாட்ஸ்டாருக்கான 1 வருட சந்தா, அப்பல்லோ சர்க்கிளுக்கான 3 மாத சந்தா, ஃபாஸ்டேக் ரீசார்ஜில் கேஷ்பேக், இலவச ஹலோ ட்யூன்ஸ் மற்றும் விங்க்மியூசிக் சந்தா போன்ற நன்மைகளை வழங்கும்.
முன்னதாக இந்த 8 திட்டங்களை பயன்படுத்துபவர்கள் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் வழியாக 5ஜி டேட்டாவை கோர (Claim செய்ய) வேண்டிய நிலை இருந்தது.ஆனால இனிமேல் அது தேவை இல்லை. அன்லிமிடெட் 5ஜி டேட்டாவானது மேலே பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து திட்டங்களுடனும் இயல்பாகவே (Default) வருகிறது.


Click it and Unblock the Notifications